சுதந்திர இந்தியாவில் மாணவர்களின் பங்கு கட்டுரை

suthanthira indiavil manavargalin pangu

கல்வியின் ஆழம் என்பது நம் இளம் பருவத்திலே சொல்லி தந்த ஒன்று. கல்வி மூலம் உலக நாடுகளின் வளர்ச்சி பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

பொருளாதாரம், அரசியல், கலை, கலாசாரம் என ஒரு நாட்டுக்கு தேவையான அனைத்து விடயங்களிலும் கல்வியின் செல்வாக்கு இடம்பெறுகின்றது. ஆனால் அக்கல்வியை பயன்படுத்த மாணவர்களின் செயற்பாடு இன்றி அமையாத ஒன்று.

சுதந்திர இந்தியாவில் மாணவர்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டம்

  • முன்னுரை
  • சுதந்திர இந்தியா என்பது
  • அன்றைய சுதந்திர இந்தியாவின் மாணவருக்கான ஊக்கப்பாடு
  • இன்றைய சுதந்திர இந்தியாவின் மாணவர்களின் பங்கு
  • மாணவர்களின் தவறான செயற்பாடும் அதன் சட்ட நடவடிக்கைகளும்
  • முடிவுரை

முன்னுரை

நாம் வாழும் இந்திய நாடு மிகவும் அழகான நாடு. அதன் எதிர்காலம் மாணவர் கைகளிலே தான் உண்டு என்று பல மேடைகளிலே பல பெரியோர், பல அறிஞர், பல கவிஞர் என பலரும் கூறி உள்ளார்கள். அவ்வாறு கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு. அந்த வகையில் நம் சுதந்திர இந்திய நாட்டின் மாணவர்களின் பங்கு பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

சுதந்திர இந்தியா என்பது

நம் நாட்டில் அண்ணா, பெரியார், காந்திஅடிகள், நேரு என இவ்வாறு இன்னும் பல போராட்டவாதிகள் ஆங்கிலயரிடம் இருந்து நம் இந்திய நாட்டுக்கான சுதந்திரத்தை நமக்கு வாங்கி தந்துள்ளார்கள். இதனையே இன்றைய காலகட்டங்களில் சுதந்திர இந்தியா என்கின்றோம்.

நம் இந்திய நாட்டு சுதந்திரத்தை வாங்கி கொடுக்க எண்ணியவர்களின் வயதும் மாணவர் பருவங்கள் முடிவடையும் வயது தான் அவர்களின் சிந்தனைகளும் அறிவியல்களும் தான் இன்றைய சுதந்திர இந்தியாவாக உருவாகியுள்ளது.

அன்றைய சுதந்திர இந்தியாவில் மாணவருக்கான ஊக்கப்பாடு

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு நம் இந்திய நாட்டு அரசாங்கத்தினால் கல்விக்கும் நம் போன்ற மாணவர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் எதிர்காலத்தின் தூண்கள் என்பதை அன்றைய இந்திய நாட்டு தலைவர்கள் தெரிந்து கொண்டு செயற்பட்டார்கள்.

அன்றைய காலத்தில் இந்திய நாட்டின் கல்விக்காக டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு குழு நியமிக்கப்பட்டது. தொடக்க கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கம் அன்றைய அரசாங்கத்திற்கு இருந்தது.

அதன் விளைவாக மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றின் விளைவாக மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஊக்குவிப்பும் அதிகமானது.

இன்றைய சுதந்திர இந்தியாவின் மாணவர்களின் பங்கு

இன்றைய மாணவர்கள் நாளைய விருட்சம் என்பதை அறிந்த நம் இந்திய நாடு ஒவ்வொரு மாணவர்களையும் நாட்டின் எதிர்காலத்தின் தூண்களாகவே கருதுகின்றது. ஒவ்வொரு மாணவர்களின் திறன்கள் நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சி கட்டங்களுக்கும் உதவியாக அமைகின்றது.

அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல பல விஞ்ஞானிகளை உருவாக்குவதில் இன்று இந்தியா முன்னிலை வகிக்கின்றது. இன்னும் பல சாதனைகளை எட்டும் நிலைக்கு உள்ளது. அவற்றிற்கு காரணம் மாணவர் சமூகம் ஆகும்.

மாணவர்களின் தவறான செயற்பாடும் அதன் சட்ட நடவடிக்கையும்

இந்திய நாட்டின் வலுவான திட்டம் மாணவர்கள் என்பது எந்தவகையில் உண்மையோ அந்தவகையில் மாணவர்களை தவறான நிலைக்கு தள்ளி நாட்டை அழிக்கவும் முடியும் என்பதும் உண்மை. காரணம் மாணவர்களின் சக்தி நன்மை, தீமை என இரண்டையும் செயற்படுத்த கூடியது.

ஒரு சில மாணவர்கள் குடும்ப பிண்ணனி, சமூகம் நடந்து கொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு தீயவிடயங்களுக்கு சில கயவர்களால் தள்ளப்படுகின்றனர்.

அந்த வரிசையில் போதைக்கு அடிமையாதல், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துறைக்கு கடத்தப்படல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் இவ்வாறு பல செயற்பாடுகளை மாணவர்களிடையில் புகுத்தப்படுகின்றன.

இவற்றை தடுக்க சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், சிறை தண்டனைகள் என மாணவர்களின் ஒழுங்கற்ற நடவடிகைகளுக்கு காரணமான அனைத்தையும் நாட்டில் இல்லாமல் ஒழிப்பது தான் நாட்டின் ஒரு கொள்கையாக காணப்படுகின்றது.

முடிவுரை

நம் நாட்டு எதிர்காலமே மாணவர் கையில் தான் உள்ளது. அந்த வகையில் மாணவர்களின் கஷ்டங்களையும் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கும் ஒவ்வொரு பெற்றோர் மட்டும் அல்லாது நாட்டு மக்கள் அனைவருமே உறுதுணையாக இருக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு ஏற்ற ஒவ்வொரு துறைகளும் ஏதே ஒரு வகையில் நாட்டின் நன்மையே என்பதை பெற்றோரும் புரிந்து செயற்பட வேண்டும்.

You May Also Like:

வளர்ச்சி பாதையில் இந்தியா கட்டுரை

இந்தியா சுதந்திரம் அடைந்த வரலாறு கட்டுரை