மீண்டும் சுந்தர் சியுடன் இணையும் தமன்னா,வடிவேலு!

சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மணை 4 வெளியாகியிருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வருடம் இது வரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ஆரண்மனை இருக்கின்றது. இது 100 கோடி வசூல் செய்திது சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. தனுஷ், சிவகார்த்திகேயன் படங்கள் கூட வெளியாகி வெற்றி பெறவில்லை. இவ்வாறு இருக்க சுந்தர் சிக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அரண்மனை 4 மற்றும் கருடன் ஆகிய படங்கள் இருக்கின்றன. கருடன் படம் இதுவரை 50 கோடியை அண்மித்துள்ளது.

அரண்மனை 4 படம் வருவதற்கு முன் ரசிகர்கள் அரண்மனை 3 யே பார்க்க முடியல இதுல அரண்மனை 4 வேறயா என்று சுந்தர் சி யை கலாய்த்து வந்தனர். அவர் தனது முயற்சியை கை விடாது இருந்ததன் பலன் இன்று அவருக்கு கிடைத்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார். இதில் சிவா, விமல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இதில் வாணி போஜனும் நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து ஒரு ஹாரர் படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் தமன்னா முதன்மை பாத்திரத்தில் நடுக்கவுள்ளாராம்.

இவ்வாறு இருக்க இந்த படத்தில் வடிவேலுவும் நடிக்கவுள்ளாராம். வடிவேல் சினிமாவில் காமெடியனாக பல படங்களில் நடித்து வந்தவர். அதுவும் பிரன்ஸ் படத்தில் வரும் நேசுமனி காமெடிகளை யாராலும் மறக்கமுடியாது. இவர் ஒருசில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகின்றார்.

அதுவும் மாமன்னன் படத்தில் அவரின் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும். இவ்வாறு இருக்க தமன்னா நடிக்கும் படத்தில் இவரும் நடிக்கவுள்ளார். இவர் அதில் ஒரு காமெடியானாக நடிப்பாரா? இல்லை மாமன்னன் படத்தில் நடித்தது போல நடிப்பரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

more news