கூலி படத்திற்கு ரஜனி வாங்கிய சம்பளம்!- நம்பர் 1 என்று நிரூபித்த சூப்பர் ஸ்டார்..

சூப்பர் ஸ்டார் ரஜனி நடிப்பில் வெளியான இறுதி படம் ஜெயிலர். இப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு பின் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகின்றார்.

ஜெயிலர் படத்தில் இவரின் நடிப்பு மிகவும் நன்றாகவே இருந்தது. இதற்கு முன்னர் இவர் நடித்த படங்கள் கலவையான விமர்சனக்களை பெற்று வந்தது.

கேஜிஎப் படம் வந்த போது ரசிகர்கள் தமிழ் சினிமாவையே திட்டி வந்தனர். படம் என்றால் அப்படி எடுக்க வேண்டும் என்று கூறினர். கமலின் விக்ரம் மற்றும் ரஜனியின் ஜெயிலர் ஆகிய இரு படங்களும் தமிழ் சினிமாவையே தூக்கி விட்டது.

சூப்பர் ஸ்டாருக்கு இந்தியாவில் மட்டுமல்ல தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் ஜெயிலர் படத்திற்கு 110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அதே போல வேட்டையன் படத்திற்கும் 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

இவ்வாறு இருக்க லொகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

கூலி டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் இளையராஜாவின் டிஸ்கோ இசை பயன்படுத்தபட்டதாக கூறி இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.

இவ்வாறு இருக்க கூலி படத்தில் நடிப்பதற்கு ரஜனிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 260 கோடி கொடுத்துள்ளது. லியோ படத்திற்கு 125 கோடியும் கோட் படத்திற்கு விஜய் 200 கோடி சம்பளமும் வாங்கியுள்ளார்.

தற்போது தளபதி 69 இற்கு 250 கோடி சம்பளம் கேட்டதால் தயாரிப்பு நிறுவனம் அப் படத்தில் இருந்து விளக்கை விட்டது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். ஆனால் தற்போது அவ் இடத்தை ரஜனி பிடித்து விட்டார். தான் தான் நம்பர் 1 என்று நிரூபித்து விட்டார்.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*