உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் தான் இந்தியன் 2. 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப் படத்தை சங்கர் இயக்கியுள்ளார்.
தற்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 வெளியாக இருக்கின்றது. கமல்ஹாசனின் விக்ரம் படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. இதான் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது.
நடிகர் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்
இந்தியன் 2 படபிடிப்பின் போதே இந்தியன் 3 இற்கான படபிடிப்புகளும் நிகழ்கின்றன.
இந்தியன் 2 இன் படபிடிப்புகள் நிறைவடந்த நிலையில் படம் வெளியாவதற்கு தயாராக இருக்கின்றது. இந்தியன் 2 வெளியாகும் போதே இந்தியன் 3 இற்கான டீரெயிலரையும் வெளிவிட போவதாக கூறபடுகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான விடையம் ஆகும்.இதனால் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.
ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படமும் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியன் 3 படமும் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இப் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 1 திகதி நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.