இந்திய தேசமானது ஓர் பன்முகத் தன்மையினை போற்றும் ஓர் தேசமாக காணப்படுவதோடு மட்டுமல்லாமல் பல மொழிகளை பேசக் கூடியவர்களையும் கொண்டமைந்துள்ள ஓர் சிறப்புமிக்க நாடாகும். அந்தவகையில் பல மொழிகளை கொண்டமைந்த சிறப்புமிக்கதொரு நாடே இந்தியாவாகும்.
அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- மொழியில் பன்முகத் தன்மை பேணப்படும் விதம்
- இந்திய மொழி
- மராத்தி மொழி
- பெங்காலி மொழி
- முடிவுரை
முன்னுரை
இந்தியா தேசமானது பல இன மக்களையும் அநேக மொழிகளையும் கொண்டமைந்ததொரு நாடாகவும் அதாவது இந்தியாவிற்கென்று அதிகார பூர்வமான தேசிய மொழிகள் கிடையாது என்ற வகையில் தனித்துவமிக்கதொரு நாடாக வேற்றுமையில் ஒற்றுமையாக இந்தியா திகழ்கின்றது.
மொழியில் பன்முகத் தன்மை பேணப்படும் விதம்
இந்திய நாடானது பன்முகத் தன்மை கொண்ட தொரு நாடாக திகழ்கின்றது என்ற வகையில் பல மொழிகளை பேசுபவர்களும் காணப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் தமிழ், இந்தி, ஆங்கிலம், மராத்தி, பெங்காளி, டெலிகு, குஜராத்தி, மலையாளம், உருது, கன்னடம், ஒடியா என பல மொழிகளை பேசுகின்ற மக்களை கொண்டமைந்துள்ள நாடாகும்.
இந்தியாவின் வட பகுதியில் காணப்படுவோர் பேசும் மொழியாகவே இந்தி காணப்படுகின்றதோடு பன்முகத் தன்மையை பேணுவதாக மொழிகள் காணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
இந்தி மொழி
இந்தி மொழியானது இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு படையெடுப்புக்கள் மற்றும் குடியேற்றங்கள் காரணமாக உருவானதொரு மொழியாகும். இந்தி மொழியானது இந்தியாவில் கிட்டத்தட்ட 425 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வருகின்றது.
மேலும் சில இந்திய மக்கள் இந்தியை இரண்டாவது மொழியாகவும் பேசுகின்றனர். அதாவது நவீன கால மொழியான சமஸ்கிருதத்தின் வெளிப்பாடாகவே இந்தியை கருதுகின்றனர். அந்த வகையில் இந்தியானது இன்று அதிகளவான இந்தியர்களால் பேசப்பட்டு வரும் ஓர் மொழியாகும்.
மராத்தி மொழி
மராத்தி மொழியானது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூர்விக மக்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ ஆரிய மொழியின் மற்றொரு கிளை மொழியாக காணப்படுகின்றது.
மராத்தி மொழியில் இரண்டு பேச்சு வழக்குகள் காணப்படுகின்றன. அதாவது வர் ஹாடி பேச்சு வழக்கு, நிலையான மராத்தி பேச்சு வழக்கு போன்றனவாகும்.
இம்மொழியின் துணை மொழிகளானவை அக்ரி, அகிராணி, மல்வானி, கொல்காளி, சந்தேஸ் போன்ற பகுதிகளில் இன்று பேசப்பட்டு வருகின்றன.
இம்மொழியானது இந்தியாவின் பன்முகத் தன்மையை பேணுவதில் பிரபலமான தொரு மொழியாகவே திகழ்கின்றது.
பெங்காலி மொழி
பெங்காலி மொழியானது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலேயே பெரு வாரியாக பேசப்பட்டு வருகின்றது. இது பங்களாதேஸ் நாட்டின் அதிகார பூர்வமான ஒரு மொழியாகும்.
பெங்காலி மொழியானது இன்று மகதி, பாலி, தட்சமாஸ் போன்ற சமஸ்கிருத சொற்றொடர்களை கடன் வாங்கிக் கொண்டு கிளைத்த மொழியாக வளர்ச்சி கண்டு வருகின்றது.
இந்த பெங்காலி மொழியும் இந்தோ, ஆரிய மொழிகளின் கிளையை சார்ந்ததொரு வகையாகும். இவ்வாறாக தெலுங்கு, குஜராத்தி என அநேக மொழிகள் ஒரே இந்தியா என்றமைந்த நாடாக இந்திய தேசமானது காணப்படுகின்றது.
முடிவுரை
இந்திய தேசமானது பல இன மக்களையும் அநேக மொழிகளையும் பின்பற்றுவதில் தனித்துவமிக்கதொரு நாடாகவே திகழ்கின்றது என்பதோடு இன்று மொழி ரீதியில் முக்கியத்துவமிக்கதொரு நாடாகவும் இந்தியா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
You May Also Like: