செருக்கு வேறு சொல்

serukku veru peyargal in tamil

மனிதர்களிடையே காணப்படும் பண்புகளுள் அழிவிற்கு கொண்டு செல்லும் ஓர் பண்பே செருக்கு ஆகும். அந்த வகையில் தன்னை அறிவு ரீதியாக உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டு குறைந்த கல்வியறிவை உடையவர்களை இழிவாக பார்த்தலே செருக்காகும். செருக்கு உள்ள ஒருவர் தனது வாழ்வில் தோல்வியினையே சந்திப்பார்.

“செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து”

என்ற குறளானது ஆணவமும் கோபமும் சிறுமைக் குணமும் இல்லாதவருடைய வளர்ச்சியே அனைவராலும் மதிக்கப்படும் பெருமையுடையது என்பதை சுட்டி நிற்கின்றது.

நான் என்ற செருக்கும் தனக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை தன்னுடையதாக கருதும் செருக்குடையவர்களதும் வாழ்வானது அழிவினை நோக்கியே செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மன நிம்மதியோடு மனிதனானவன் வாழ வேண்டுமாயின் செருக்கில்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

செருக்கு வேறு சொல்

  • ஆணவம்
  • கர்வம்
  • திமிர்
  • அகங்காரம்
  • மமதை
  • பெருமிதம்

You May Also Like:

சேர்த்து எழுதுக

பிரித்து எழுதுக