தனுஷின் ராயன் ரிலீஸ்!-வெளியான புது அப்டேட்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் தான் ராயன். இப் படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தனுஷ் இயக்கும் 2 வது படமாகும். இது தனுஷின் 50 வது படமும் ஆகும். தனுஷ் உடன் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே சூர்யாவும் நடிக்கின்றார்.

இப் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. அது தேர்தல் காலம் என்பதால் மீண்டும் வெளியாகும் திகதி மாற்றபட்டுள்ளது.

இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் ரசிகர்கள், ரொம்பவே பயங்கரமாக உள்ளதாகவும், படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றதாகவும் கூறுகின்றனர்.

இப் படத்தில் வில்லனாக எஸ். ஜே சூர்யா நடிப்பதால் படம் பெரும் வரவேற்பை பெரும் என்றும் கூறுகின்றனர். அது மட்டுமல்லாது விஷாலின் மார்க் ஆண்டனி படமும் 100 கோடி வசூல் செய்வதற்கு எஸ். ஜே சூர்யாவின் நடிப்புதான் காரணம் என்றும் கூறுகின்றனர்.

ராயன் படம் வெற்றி பெற்றால் தனுஷின் மார்க்கெட் அதிகமாகிவிடும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

எஸ்ஜே சூர்யா மட்டுமல்லாது சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், அபர்ணா முரளி, துஷாரா விஜயன்,வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப் படம் வரும் ஜூன் 13 ம் திகதி வெளியாகவுள்ளது. மற்றும் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ம் திகதி வெளியாகவுள்ளது.

more news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*