கவினோடு மோதும் சந்தானம்!-கவின் என்ன செய்ய போறீங்க?

சந்தனம், கவின் இருவருமே விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள். நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் படங்களில் காமெடியனாகவும், நாயகனுக்கு நண்பனாகவும் நடித்து வந்தார்.

ஒரு சில காலத்திற்கு முன் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய இவர் தற்போது நடித்தால் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறிவிட்டார்.

சிவா மனசுல சக்தி,பாஸ் என்ற பாஸ்கரன்,ஒரு கல் ஒரு கண்ணாடி,கண்ணா லட்டு தின்ன ஆசையா,தீயா வேலை செய்யணும் குமாரு, போன்ற திரைபடங்களுக்கு சிறந்த நகைசுவை நடிகருக்கான விஜய் விருதை பெற்றார்.

காதநாயகனா டிக்கிலோனா, சபாபதி,தில்லுக்கு துட்டு 1,2, குளுகுளு,இனிமே இப்படித்தான்…. போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இருக்க இவர் நடிப்பில் உருவான இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

டிரெய்லரின் அரம்பத்திலே நடிகர் சங்கத்த கட்டி முடிச்சிட்டுதான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் பிடிக்க நான் ஒண்ணும் விஷாலும் இல்ல, எப்பவும் சிங்கிலா சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு நான் சிம்புவும் இல்ல என்று சிம்பு,விஷால் இருவரையும் கலாய்த்து கொண்டே அரம்பித்திருப்பார்.

நடிகர் கவினும் மக்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்து வருகின்றர். விஜய் அரசியலுக்கு சென்றதும் அவருடைய இடத்தை இவர் பெற்று விடுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இவருடைய ஸ்டார் பட டிரெயிலர் வெளியானதும் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கு காரணம் இவர் பெண் வேடத்தில் நடிக்கின்றார்.

கவினின் ஸ்டார் படமும் சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படமும் ஒரே நாள் வெளியாக இருக்கின்றது.

மாநாடு படத்தின் திரையரங்கு உரிமைகளை பெற்ற நிறுவனம் தான் இந்த படத்தின் உரிமைகளையும் பெற்றுள்ளது.

சந்தானம் படத்தின் திரையரங்கு உரிமைகளை வாங்கியவர் மதுரை அன்புச்செழியன். இவருக்கு மதுரையில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் அத்துபடி. அதனால் சந்தானம் படத்திற்கு நிறைய தியேட்டர்கள் கிடைக்கும் என்பதால் கவினின் ஸ்டார் படம் சிக்கலில் உள்ளது.

இதில் எது வெற்றி படமாக அமையாவுள்ளது என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

more news