மீண்டும் அப்பா ஆன சிவகார்த்திகேயன்!- என்ன குழந்தை தெரியுமா?

சிவகார்த்திகேயன் ஒரு விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பின் விஜய் டிவியில் ஆங்கரிங் செய்து சினிமாவிற்குள் நுழைந்தவர். இவர் தற்போது தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருகின்றார்.

மெரினா படத்தின் மூலம் கிரோவாக அறிமுகமாகி பின் தனுஷின் 3 படத்தில் தனுஷிற்கு நண்பனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பின்னர் தனுசிற்காக எழுதிய கதையில் இவரையே கிரோவாக தனுஷ் நடிக்கவைத்திருந்தார். இந்த எதிர்நீச்சல் படம் தான் சிவகார்த்திகேயன் வளர்வதற்கு துணைபுரிந்தது.

இவர் நடித்த ஒரு சில படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் டான் படத்தை அனைவரும் கொண்டாடினார். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் கொண்டாடினார். கல்லூரி மாணவனின் வாழ்க்கையை படமாக எடுத்து ஹிட் கொடுத்தார்.

அதன் பின் நடித்த அயலான் படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஒருசில விமர்சனங்களும் கிடைத்தது. ஒரு ஆங்கில படத்தின் தமிழ் உருவாக்கம் போலவும் இருந்தது.

இவ்வாறு இருக்க தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது 3 வது குழந்தை ஆகும். ஏற்கனவே இவருக்கு ஆராதனா எனும் பெண்குழந்தையும் குகன் எனும் ஆண் குழந்தையும் உண்டு. இவருடைய அப்பா உயிரோடு இல்லாத நிலையில் இவர் தனது மகனுக்கு அப்பாவின் பெயர் குகன் என்று பெயர் சூட்டி இருந்தார். குகனின் தம்பி ஜூன் 2 ம் திகதி பிறந்துள்ளார். இதனால் தான் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவிற்கு இவர் செல்லவில்லை என்றும் இவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தான் மூன்றாவது குழந்தைக்கு அப்பா ஆனா மகிழ்ச்சியான தகவலை டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவரை பற்றிய தவறான வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் இவர் அப்பா ஆனதை கேட்ட அனைவரும் அதை பற்றி கதைப்பதை நிறுத்திவிட்டனர்.

more news