கண்ணாடி எனப்படுவது யாதெனில் ஒளியை ஊடுசெலுத்தக்கூடிய பளிங்குருவற்ற திண்மமான பொருளாகும். அந்தவகையில் திண்மமாக காணப்படும் கனிமப்பொருட் கலவையை கண்ணாடியாக குறிப்பிட முடியும்.
மேலும் கண்ணாடியானவை போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள், சாளரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் பிரதான இடத்தினை பெற்று வருகின்றதாக கண்ணாடியானது திகழ்கின்றது. அத்தோடு இது கட்டிடப் பொருளாகவும் வலம் வருகின்றது.
கண்ணாடி வேறு பெயர்கள்
- உருவங்காட்டி
- அழகுகாட்டி
- நிழல்காண் மண்டிலம்
- ஆடிப்பாவை
- வயங்கல்
- பாண்டில்
கண்ணாடியின் பண்புகள்
கண்ணாடிகளானவை வெளிப்படையாக ஊடுருவக்கூடிய இயல்பினை உடையதாகும். மேலும் உடையக்கூடியதாகவும், கடினமான தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. அதேபோன்று கண்ணாடியானது இணக்கமான பொருளாக இருப்பதால் அதனை வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்க முடியும்.
வண்ணக் கண்ணாடி
கண்ணாடி பொருள்களுக்கு அழகு சேர்ப்பவையே வண்ணமாகும் என்றவகையில் இன்று பல வண்ணக் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டு பல வடிவங்களில் காட்சியளிக்கின்றன. மேலும் இன்று அனைவரையும் கவரக்கூடியதொரு பொருளாகவே வண்ணக் கண்ணாடிகள் காணப்படுகின்றமை சிறப்பானதொன்றாகும்.
You May Also Like: