கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை

kanavu meipada vendum katturai in tamil

இன்று நாம் காணும் கனவுகளே எம்மை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது. அதாவது நம் எண்ணங்களே கனவுகளாக உருவெடுக்கின்றன. எனவே சிறந்த சிந்தனையை வளர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும்.

கனவு மெய்ப்பட வேண்டும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கனவு மெய்ப்பட கனவு காணுங்கள்
  • வெற்றிக்கு வித்திடும் கனவு
  • கனவுகளை காட்சிப்படுத்தல்
  • பாரதியின் கனவு
  • முடிவுரை

முன்னுரை

தூக்கத்தில் காண்பது கனவு அல்ல. எது நம்மை தூங்கவிடாமல் செய்கின்றதோ அதுவே கனவு என்று கனவு காண தூண்டியவரே முன்னால் ஜனாதிபதியான அப்துல் கலாம் அவார்களாவார். அந்த வகையில் எமது கனவானது ஓர் இலக்கை நோக்கி செல்லுமானால் வெற்றி நிச்சயம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கனவு மெய்ப்பட கனவு கானுங்கள்

கனவு காண்பது ஓர் தனிமனிதனுடைய வெற்றிக்கான முதல் படியாகும். அதாவது ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் மனிதனை உந்துகின்ற சக்தியாக கனவு காணப்படுகிறது.

நாம் ஒரு செயலில் வெற்றிபெற வேண்டுமாயின் எமது எண்ணம் சிறந்ததாக அமைய வேண்டும். அந்த வகையில் கனவு காணாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது.

இன்று பல்வேறு சாதனைகளை படைத்தவர்களின் வாழ்வில் நிச்சயம் சிறந்த கனவு இருக்கும் அதன் உந்துதலே அவர்களின் வெற்றியாக நிகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சிறந்த கனவுகளை காணுங்கள் அதுவே நாளை எம்மை சிறந்த சாதனையாளராக அல்லது சிறந்த தலைவராக உருவாக்கும்.

வெற்றிக்கு வித்திடும் கனவு

நாம் காணுகின்ற கனவானது எம்மை வெற்றிப்பாதையை நோக்கி வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

அதாவது அன்றாட வேலைகளை செய்து தினமும் வீடு வீடாக சென்று பத்திரிகைகளை வழங்கி சிறிய வருமானத்தில் கல்வி கற்று வந்த சிறுவனின் கனவுதான் இன்று இந்தியாவே போற்றும் ஏவுகணை நாயகனாக மாற்றியுள்ளது.

அந்த வகையில் தான் சிறு வயதில் கண்ட கனவை சாதனையாக மாற்றியவரே இந்திய குடியரசு தலைவர் அப்துல் காலாம் ஆவார்கள்.

மேலும் மற்ற எல்லா கருத்துக்களையும் மறந்து விடு அதுவே உன் வெற்றிக்கு வழி என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுவதானது வருங்கால இளைஞர்களுக்கு கனவினூடாக வெற்றியீட்டும் வழியினையே காட்டுகின்றார்.

நாம் வெற்றியீட்டுவதற்கான கனவுகளை காண்பதன் மூலமே வாழ்வில் வெற்றியடைந்து கொள்ள முடியும்.

கனவுகளை காட்சிப்படுத்தல்

நாம் காணும் கனவுகள் மெய்ப்பட வேண்டுமாயின் கனவுகளை காட்சிப்படுத்தக் கூடியவர்களாக திகழ வேண்டும். அதாவது மனதளவில் வலிமையுள்ள ஒருவர்தான் அடுத்த கட்ட கனவினை நோக்கி செல்லக்கூடியவராவார்.

அந்த வகையில் நாம் ஒரு விடயத்தை ஆழமாக சிந்தித்து அதற்கான வழிமுறைகளை பின்பற்றும் போது அது நிச்சயமாக கண்முண்ணே வந்து சேரும். வெறும் கனவினை மட்டுமே கண்டு கொண்டிருந்தால் முடியாது அதனை காட்சிப்படுதுவதன் மூலம் எமது கனவுகளை மெய்ப்படவைக்க முடியும்.

ஓர் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது பல தடைகள் தோல்விகள் ஏற்ப்பட்டாலும் அதனை வென்றெடுப்பதன் மூலமே எமது கனவை அடைந்து கொள்ள முடியும்.

பாரதியின் கனவு

இன்று இந்தியாவின் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருவதற்கான காரணம் ஆண்களுக்கு நிகரானவர் பெண் என்று பாரதி கண்ட கனவாகும். இன்று தனது குடும்பத்தை காப்பாற்றும் அளவிற்கு சிறந்து விளங்குபவர்களாக பெண்கள் திகழ்கின்றனர்.

மேலும் பல்வேறு தெழில்நுட்பங்களிலும் சாதனை படைத்து வீரமங்கைகளாகவே பெண்கள் காணப்படுகின்றார்கள்.

எமது கனவானது பிறருக்கு பயனளிக்கக் கூடியதாக சிறந்த கனவாக அமையும் போது நாம் மட்டுமின்றி எமது சமூகத்திற்கும் உறுதுணையாக அமையும்.

முடிவுரை

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு கனவு நிச்சயம் இருக்கும். அத்தகைய கனவினை கனவாக விட்டுவிடாது அதனை மெய்ப்பட வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதினூடாகவே வாழ்வில் வெற்றியீட்டிக்கொள்ள முடியும். சிறந்த கனவே எம்மை சிறந்த மனிதனாக்கும்.

You May Also Like:

எங்கள் ஊர் சென்னை கட்டுரை

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை