சித்தர் இலக்கியம் கட்டுரை

sithar ilakkiyam katturai in tamil

சித்தர்கள் இன்று பல்வேறு துறை சார்ந்த இலக்கியங்களை படைத்து வருகின்றனர் என்ற வகையில் சித்தர் இலக்கியம் சிறப்பிற்குரியதாகும். சித்தர் இலக்கியமானது தனி மனிதர்களுக்கு வழிகாட்டக்கூடியதொரு இலக்கியமாகவே காணப்படுகின்றது.

சித்தர் இலக்கியம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சித்தர் இலக்கியம் என்பது
  • சித்தர் இலக்கியத்தின் அவசியம்
  • சித்தர் இலக்கியத்தின் பிறவி இரகசியங்கள்
  • சாதி, சமய அமைப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

சித்தர் இலக்கியமானது தமிழ் இலக்கியத்தில் தோன்றிய பக்தி இலக்கியம், தத்துவ இலக்கியம், நீதி இலக்கியம் போன்றவற்றை விளக்குகின்றதோடு இந்த சித்தர் இலக்கியமான நாட்டுப்புற இலக்கியத் தன்மையினை கொண்டமைந்ததொரு இலக்கியமாகவும் திகழ்கின்றது.

சித்தர் இலக்கியம் என்பது

சித்தர் இலக்கியம் என்பது தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் தனிப் பண்போடு கூடிய பேரிலக்கியமாகும். சித்தர்களானவர்கள் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சித்து வேலைகளையும் சித்த மருத்துவ சிகிச்சைகளையும் செய்து வந்துள்ளதனை எடுத்தியம்புவதாக சித்தர் இலக்கியமானது அமைந்துள்ளது.

அதாவது சித்தம் என்பது அறிவு என்பதனையும் சித்தர்கள் என்பது அறிவு படைத்தவர்களையும் சுட்டி நிற்கின்றது.

சித்தர் இலக்கியமானது துன்பங்களிலிருந்து விடுபடுகின்ற நிலையினையும், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சித்தர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது சித்த மருத்துவம், யோகக் கலை, நோயற்ற வாழ்விற்கான வழி போன்றவற்றை எடுத்துக்கூறக் கூடியதொரு இலக்கியமாக காணப்படுகின்றது.

சித்தர் இலக்கியத்தின் அவசியம்

சித்தர் இலக்கியமானது பல்வேறு வகையில் முக்கியத்துவமிக்கதோர் இலக்கியமாகும். அந்த வகையில் உடல் நோய்களை தீர்க்கும் மருத்துவம் பற்றிய அறிவினை எடுத்தியம்புவதற்கு அவசியமானதாகவே காணப்படுகின்றது.

மேலும் மனித வாழ்வு மற்றும் சோதிடக் கலை, இறை நிலை, யோகக் கலை பற்றியும் சாதி சமய வேறுபாடு மற்றும் மூடநம்பிக்கைகளை களைவது தொடர்பாகவும் எடுத்தியம்புவதோடு தம்மை தாமே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பற்றியும் எடுத்தியம்பக்கூடியதாக சித்தர் இலக்கியமானது காணப்படுகின்றது.

சித்தர் இலக்கியத்தின் பிறவி இரகசியங்கள்

சித்தர் இலக்கியங்களானவை உடம்பில் உள்ள பல உறுப்புக்களை ஆராய்ந்து சில இரகசியங்களை அறிவியல் முறைகளில் எடுத்தியம்புகின்றது.

உடம்பின் பகுதியான மூச்சுப் பையின் இயல்புகளையும், காற்று உடம்புக்குள் மீள்வதுமான சுவாச நிலைகள் பற்றியும் பல்வேறு இரகசியங்களை சித்தர் இலக்கியமானது சுட்டிக்காட்டுகின்றது.

அதாவது உடற்பயிற்சியில் தேர்ந்த யோகி ஒருவன் எவ்வாறு தனது மூச்சின் இயக்கத்தை கட்டுப்படுத்தி தனது இச்சைப்படி வல்லமை பெற்றவன் என்பதனை சித்தர் இலக்கியமானது குறிப்பிடுகின்றது.

மேலும் மனதின் நிலைகள் பற்றிய பிறவி இரகசியங்களை பற்றியும் எடுத்தியம்புவதாக திகழ்கின்றது.

சாதி, சமய அமைப்புக்கள்

சித்தர் இலக்கியமானது சாதி சமய அமைப்புக்கள் பற்றி எடுத்தியம்பக்கூடியனவாக காணப்படுகின்றது.

அதாவது இடைக்கால தமிழகத்தில் காணப்பட்ட சைவம் மற்றும் வைணவத்திற்கிடையேயான முரண்பாட்டை களைவதில் பிரதான பங்கினை சித்தர் இலக்கியமானது வகித்ததோடு சாதி அமைப்பிற்கெதிரான கண்டனங்களை வெளிப்படுத்துவதாகவும் சித்தர் இலக்கியமானது அமைந்துள்ளது.

முடிவுரை

சித்தர் இலக்கியங்களானவை பல்வேறு தத்துவ கருத்துக்களையும், வாழ்வியல் கருத்துக்களையும் எடுத்தியம்புகின்றனவாக திழ்கின்றது என்பதோடு இன்று சித்தர்களின் வைத்திய முறைகளானவை பல நோய்களுக்கான மருத்துவமாகவும் பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

பாம்பன் சுவாமிகள் நூல்கள்

அநேக மொழிகள் ஒரே இந்தியா கட்டுரை