பகுத்தறிவு பகலவன் கட்டுரை

pagutharivu pagalavan katturai in tamil

சமூக சீர்திருத்தவாதியாகவும், சாதி வேற்றுமைக்கு எதிராக குரல் கொடுத்தவரும், மூட நம்பிக்கைகளை மக்களிடையே களைவதையும் நோக்காக கொண்டு செயற்பட்ட ஈ.வெ.ராமசாமி பெரியாரே பகுத்தறிவு பகலவனாக திகழ்கின்றார்.

பகுத்தறிவு பகலவன் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பகுத்தறிவு பகலவனின் ஆரம்பகால வாழ்க்கை
  • பகுத்தறிவு இயக்கம்
  • வைக்கம் வீரர்
  • பகுத்தறிவு பகலவனும் திராவிட கழகமும்
  • முடிவுரை

முன்னுரை

சமூக சீர்திருத்தத்தின் தந்தையான பெரியார் அவர்கள் தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் மற்றும் பகுத்தறிவு சிற்பி என போற்றப்படுகின்றார். இவர் மக்களால் பகுத்தறிவு பகலவனாக அழைக்கப்படுகின்றார்.

சமூகத்திற்கு தொண்டாற்றிய மாமனிதராக இன்று அனைவருடைய மனதிலும் நிலைத்து நிற்கக்கூடிய பெரியார் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

பகுத்தறிவு பகலவனின் ஆரம்பகால வாழ்க்கை

பகுத்தறிவு பகலவனான பெரியார் ஈரோடு மாவட்டத்தில் 1879ம் ஆண்டு பிறந்தவராவார். இவர் வெங்கட நாயக்கர் மற்றும் சின்னத்தாயம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.

இவர் தனது கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை கற்றதோடு பின்னர் தன்னை வணிகத்தில் ஈடுபடுத்திக்கொண்டார். மேலும் இவருடைய இளம் வயதில் பகுத்தறிவு சிந்தனை வேரூன்றியதோடு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

பகுத்தறிவு இயக்கம்

பெரியாரானவர் பல்வேறு மூடநம்பிக்கைகள் மற்றும் பல கண்மூடித்தனமான முட்டாள் செயற்பாடுகளுக்கெதிராக செயற்பட்டவராவார்.

அந்த வகையில் உடன் கட்டை ஏறுதல், விதவை மறுமணம் செய்யக்கூடாது போன்ற அநீதிகளை களைவதற்காக தோற்றுவிக்கப்பட்டதே பகுத்தறிவு இயக்கமாகும்.

மூட பழக்கவழக்கங்களால் மூழ்கிக்கிடந்த சமூகத்தில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தி பகுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பிய பகுத்தறிவு பகலவனே பெரியார் ஆவார்.

வைக்கம் வீரர்

பகுத்தறிவு பகலவனாக திகழ்கின்ற பெரியார் கேரளா மாநிலத்திற்கு கட்டுப்பட்ட ஊரான வைக்கத்தில் இடம் பெறுகின்ற தீண்டாமை கொடுமைகளுக்கெதிராக செயற்பட்டதோடு வைக்கம் எனும் ஊரிற்கு சென்று பெரியார் தீண்டாமைக்கு எதிராக பல போரட்டங்களிலும் ஈடுபட்டு 1924ம் ஆண்டு வெற்றியினையும் பெற்றுக்கொண்டார்.

இதன் காரணமாக இன்று மக்கள் மனதில் வைக்கம் வீரராக இடம்பிடித்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

பகுத்தறிவு பகலவனும் திராவிட கழகமும்

தந்தை பெரியாரானவர் நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது நீதிக் கட்சியினுடைய பெயரை திராவிட கழகம் என்று மாற்றியதோடு இதன் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் ஆவார்.

அந்த வகையில் திராவிடக் கழகமானது சமூகத்தில் காணப்படும் தீண்டாமையை ஒழிப்பது மட்டுமல்லாது சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண் கல்வி, பெண் உரிமை போன்றவற்றையும் எடுத்தியம்புகிறது என்ற வகையில் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு கழகமாகவே இத்திராவிடக் கழகம் காணப்படுகிறது.

மேலும் திராவிடக் கழகத்தினுடைய சேவையானது இன்றும் போற்றப்படக் கூடியதாக காணப்படுகின்றது.

முடிவுரை

பெரியார் அவர்கள் சாதிக் கொடுமை, பெண் அடிமைத்தனம் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தவராவார் என்றவகையில் இவரது சமூகப் பணியானது அளப்பரியதாகும். அந்தவகையில் உலகின் மாபெரும் சிந்தனையாளராக இன்றும் போற்றப்படக்கூடிய ஒரு மாமனிதரே பெரியாராவார்.

You May Also Like:

தமிழ்நாடு உருவான வரலாறு கட்டுரை

கலைஞர் கருணாநிதி வரலாறு கட்டுரை