மதி என்பதன் வேறு பெயர்கள்

mathi veru peyargal in tamil

இன்றைய உலகமானது பல்வேறு வளர்ச்சிகளை தன்னகத்தே கண்டு வருகின்றது என்ற வகையில் மொழியும் பல வளர்ச்சியை அடைந்து வருகின்றது. மதி என்ற சொல்லானது பல்வேறு பெயர்களை கொண்டமைந்ததாகவே காணப்படுகின்றது.

அதாவது பொதுவாக மதியானது அறிவு என்ற பொருளிலே வலம் வருகின்றது. அறிவினை வளர்த்துக்கொள்வது எம் அனைவரினதும் கடமையாகும். ஒரு மனிதனானவன் தனது அறிவை தேடி பெற்றுக்கொள்கின்ற போதே அவன் வாழ்வில் வெற்றியை நோக்கி நகருவான்.

மேலும் எமது அறிவினை சிறந்த விடயங்களுக்காக நாம் பயன்படுத்துகின்ற போது சிறந்த அறிவாற்றலை பெற முடியும். அந்த வகையில் விதியை கூட மதியால் வெல்ல முடியும் என்ற வசனமானது மதியின் முக்கியத்துவத்தினையே எடுத்தியம்புகின்றது.

இது தவிர மதி என்ற சொல்லானது மதித்தல், நிலவு போன்ற அர்த்தங்களையும் தருகின்றது. எடுத்துக்காட்டாக “நாம் அனைவரும் பெரியோரை மதித்து நடக்க வேண்டும்” என்ற வசனத்தை நோக்க முடியும்.

மதி என்பதன் வேறு பெயர்கள்

  • அறிவு
  • புத்தி
  • சந்திரன்
  • நிலவு
  • சிறப்பு
  • மதிப்பு
  • நல்லறிவு
  • பகுத்தறிவு
  • மதித்தல்
  • மரியாதை கொடுத்தல்

You May Also Like:

மறுபிறப்பு வேறு சொல்

அசம்பாவிதம் வேறு சொல்