சந்தேகம் எனப்படுவது யாதெனில் எமது நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடைப்பட்டதொரு நிலையாகும். அதாவது ஒரு விடயத்தின் மீதான நிச்சயமற்ற தன்மை அல்லது நம்பிக்கை குறைவான தன்மையினை சுட்டி நிற்கின்றது.
அந்த வகையில் இவ் சந்தேகமானது ஒரு மனிதரிடத்தில் எழுகின்றபோது மனமானது வேறுபட்ட கருத்துக்களை கொண்டு முரண்பட்டே காணப்படும். மேலும் இத்தகையதொரு சந்தேகமான நிலை ஏற்படுகின்ற போது எம்மால் முடிவெடுக்க முடியாத ஒரு நிலையும் காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சந்தேகம் என்ற கொடிய நோயை எம்மிடமிருந்து விரட்டுவது எமது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அவசியமாகும்.
சந்தேகம் வேறு சொல்
- ஐயம்
- அயிர்ப்பு
- ஐயுறவு
சந்தேகத்தினால் ஏற்படும் விளைவுகள்
எதிர்காலத்தை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியாமை, உறவுகளுக்கிடையில் பிரிவினையினை ஏற்படுத்தல் மற்றும் ஒருவரை மன உளைச்சலுக்கு இட்டு செல்லக்கூடியதாகவும் சந்தேகமானவை அமைந்துள்ளது. அதேபோன்று சந்தேகமுடையவர்கள் எப்பெழுதும் நம்பிக்கையற்றவர்களாகவே காணப்படுவர்.
You May Also Like: