வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை

vakalar vizhipunarvu katturai in tamil

ஒரு நாட்டின் அனைத்து செயற்பாடுகளிலும் அரசாங்கத்தின் தலையீடு காணப்படுவதை எல்லோரும் அறிந்திருப்போம். அதனடிப்படையில் சிறந்த அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கான ஒரு வாய்ப்பு வாக்களிப்பது மட்டுமே ஆகும்.

வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரிமை
  • இந்திய நாட்டின் ஆட்சி முறையும் வாக்களிப்பும்
  • நாட்டிற்குள் வாக்களிப்பு முறை அறிமுகம்
  • வாக்களிப்பின் அவசியம்
  • தற்காலத்தில் வாக்களிக்கும் முறை
  • முடிவுரை

முன்னுரை

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு நாட்டின் அரசியலும் பல பங்காற்றியுள்ளது. இதனடிப்படையில் அரசாங்கத்தின் சிறந்த நபர்களையும் அவர்களின் சிறந்த செயற்பாடுகளையும் அறிந்து ஒவ்வொரு தனிநபரும் வாக்களிப்பதன் மூலம் தான் இந்திய நாட்டின் எதிர்காலம் சிறப்புள்ளதாக காணப்படுகின்றது.

தனிநபர்களின் சிந்தனையில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து செயற்பட வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளோம். அந்தவகையில் இந்திய நாட்டின் எதிர்காலத்தை எவ்வாறு வாக்களிப்பதன் மூலம் உறுதிசெய்யலாம் என இக்கட்டுரையில் நோக்கலாம்.

இந்திய நாட்டின் ஆட்சிமுறையும் வாக்களிப்பும்

உலக நாடுகள் அனைத்தும் மூன்று குறிப்பிட்ட ஆட்சியில் ஏதாவது ஒரு ஆட்சியின் கீழ் ஒரு நாட்டை செயற்படுத்துகின்றது. அவையாவன மன்னர் ஆட்சி, ஜனநாயக ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என மூன்று பிரிவுகளை உள்ளடக்கலாம்.

மன்னர் ஆட்சியில் மன்னர்கள் போர் செய்து பெற்ற நாட்டை தலைமுறைகளாக குறிப்பிட்ட நபர்களால் ஆட்சி செய்யப்படும். ஜனநாயக ஆட்சியில் மக்களின் தீர்வுகளை தீர்ப்பதற்கு தேவையான நபரை மக்கள் மூலம் தெரிவு செய்வது ஜனநாயக ஆட்சியாகும். சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்கள் ஆட்சியும் இறுக்கமான கட்டுப்பாடுகளும் காணப்படும்.

நம் இந்திய நாட்டில் மக்களுக்காக ஒரு தனிநபர் தெரிவு செய்து குறிப்பிட்ட காலப்பகுதி வரை அந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அந்த தனிநபரின் செயற்பாடு இடம்பெறும். இதனை ஜனநாயக ஆட்சி முறை என சொல்வார்கள்.

இதனடிப்படையில் மக்கள் வாக்களிப்பதன் மூலம் நாட்டுக்கான அனைத்து விதமான அரசியல் உறுப்பினரையும் மக்களால் தெரிவு செய்யப்படும். இதனையே இந்திய நாட்டு அரசாங்கம் கடைப்பிடிக்கின்றது. அத்துடன் வாக்களிப்பதன் மூலமாகவே ஜனநாயக ஆட்சி செயற்படுத்தப்படுகின்றது.

நாட்டிற்குள் வாக்களிப்பு முறை அறிமுகம்

இந்திய நாட்டின் ஆரம்ப கட்டத்தில் மன்னராட்சி எங்கும் பரவிக்கிடந்தது. சோழ, சேரர், பாண்டியன் என்று இன்னும் பல ஆண் மன்னர்கள் வேலுநாச்சியார் போன்ற பெண் இராணிகளும் ஆட்சியில் இந்தியா சிறப்புற காணப்பட்டது.

ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பின் முழு இந்தியாவும் ஆங்கிலேயர் வசமானது இதன் விளைவாக மன்னராட்சிகள் முடக்கப்பட்டன. புதிய அரசியல் யாப்புகள், கொள்கைகள் அறிமுகமானது.

காலப்போக்கில் காந்தியடிகளின் சுதந்திர போராட்டத்தில் ஒன்று சேர்ந்த இந்திய மக்கள் ஆங்கிலயரை நாட்டை விட்டு விரட்டினர்.

இதன் பிறகு இந்திய நாட்டின் சுதந்திரத்துடன் புதிய சுதந்திர இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு மக்களுக்கான ஜனநாயக ஆட்சி முறை இந்திய நாட்டில் கொண்டுவரப்பட்டது. இதனால் தான் வாக்களிப்பு முறையும் அறிமுகமானது.

வாக்களிப்பின் அவசியம்

இந்திய நாட்டின் ஒவ்வொரு தனி மனிதனின் வாக்களிப்பும் மிக முக்கியமான ஒன்றாகும். காரணம் தனிப்பட்ட ரீதியான சிந்தனையே வாக்களிப்பு. இதன் மூலம் நாட்டுக்கு சரியான ஒரு நபரை தெரிவு செய்யும் ஆற்றல் மக்களுக்கு உண்டு இதனால் வாக்களிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்தியாவில் சராசரி வாக்கெடுப்பில் குறைந்த சதவீதமான வாக்குகள் தான் தேர்தல்களில் பதிவாகின்றன. வாக்களிக்காத நபர்களின் வாக்குகளை களவாடி அரசியலுக்காக அந்த வாக்கை தமதாக்கி கொள்ளும் அரசியல்வாதிகளும் உண்டு.

உங்கள் வாக்குகளுக்கு அதிகமான மதிப்பு உண்டு. நீங்கள் முடிந்தளவு வாக்களிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

சிறந்த இந்தியாவை கொண்டுவருவதற்கு மட்டும் அல்லாது இந்திய நாட்டின் பொக்கிஷங்களை பாதுகாப்பதும் உங்கள் கைகளில் தான் உள்ளது. இதன் காரணத்தால் தான் வாக்களிப்பது மிக முக்கியம் என கூறுகின்றேன்.

தற்காலத்தில் வாக்களிக்கும் முறை

ஆரம்ப காலத்தில் வாக்களிக்கும் தினத்தன்று வாக்களிப்பதற்கு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு சென்று அவர்களின் அடையாளங்களை சட்டரீதியாக பதிவுகளை செய்து கைரேகை அச்சை தெரிவு செய்த கட்சியில் அடையாளமாக இட்டு அங்குள்ள பெட்டிகளில் இடம் வேண்டும்.

அதன்பிறகு அங்கு உள்ள தேர்தல் பிரிவினர் அவற்றை சேகரித்து அதிக புள்ளியான வாக்களித்த நபரின் பெயரை அறிவிக்கப்படும். அதன் பிறகு இந்திய நாட்டின் தலைவராக அவருக்கு பதவியேற்பு நிகழ்வு ஏற்பட்டும்.

அந்த நிகழ்வில் அவருக்கான சில உறுதிமொழிகளை ஏற்று பதவியை பெற்று குறிப்பிட்ட கால ஆட்சியில் மக்கள் சார்பாக இந்திய நாட்டை ஆட்சி செய்வார்.

இன்றைய காலகட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாக்களிக்கும் உபகரணங்கள் மூலம் வாக்களித்த நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை சேகரித்து அதே ஆரம்ப முறைப்படி மக்களுக்காக இந்திய நாட்டை குறிப்பிட்ட காலப்பகுதி ஆட்சியின் பின் புதிய தேர்தல் நடைபெறும்.

முடிவுரை

ஒரு சிறந்த நாட்டு பிரஜையாக வாக்களிக்கும் உரிமையை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். காரணம் சில நாடுகளில் மக்களுக்கான உரிமை இல்லாது அகதிகளாகவும், சொந்த நாட்டுக்குள் சிறைப்பட்ட நிலைமையிலும் உள்ளார்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் உங்கள் எதிர்கால சந்ததியினரின் எழுத்துபிழையாக மாறிவிடும். உங்கள் ஒவ்வொரு தவறையும் சிலரின் சாதகமான நிலையாக மாறி கண்டிப்பாக மொத்த நாட்டையும் அழித்துவிடுவார்கள்.

சிறு சிந்தனையில் செயற்படுங்கள். நமக்கான உரிமையை நாம் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இன்று வாழ்கின்றோம். ஆகவே வாக்களியுங்கள் சரியான பாதையில் நாட்டை கொண்டு சொல்லுங்கள்.

You May Also Like:

நாட்டுப்பற்று கட்டுரை

பெண்களின் உரிமைகள் பேச்சு போட்டி