கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு கட்டுரை

kalvi tholilnutpam in tamil

இன்றைய உலகம் தொழிநுட்ப பார்வையிலேயே அதிகம் உலாவி வருகின்றது. நுண்ணறிவு தொழிநுட்பகருவிகளின் கண்டுபிடிப்புகள் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு பாரிய பங்கு ஆற்றி உள்ளது.

கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இந்திய நாட்டின் பாரம்பரிய, தற்கால கல்வி முறை
  • தொழிநுட்பத்தின் அவசியம்
  • தற்கால கல்வியில் தொழிநுட்பத்தின் வளர்ச்சி
  • கல்வியில் தொழிநுட்பத்தின் சாதகமான பாதகமான விளைவு
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமான தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்தே உள்ளது. அந்தவகையில் இந்திய நாடு மாணவர்களின் கல்வி செயற்பாடுகளிலும் தொழிநுட்ப அறிவை சிறிது சிறிதாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கமைய தற்கால கல்வியில் எவ்வாறு தொழிநுட்பம் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

இந்திய நாட்டின் பாரம்பரிய, தற்கால கல்வி முறை

நம் இந்திய நாட்டின் பண்டையகால கல்வி முறை குருகுலத்தை மையமாக கொண்டு காணப்பட்டது. ஒரு தலை சிறந்த குரு அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து அவரது அனுபவங்களையும் சிந்தனைகளையும் பாடங்களாக சொல்லித்தரப்பட்டது.

ஆனால் இக்கல்வியிலும் பல குறைகள் காணப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பிரிவினையும் அவர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கமும் காணப்படவில்லை.

மன்னராட்சி முடிந்து ஆங்கிலேயர் வருகை சில கல்வி முறைகளை நாட்டுக்குள் கொண்டு வந்து புதிய கல்வி முறைகள் தோற்றம் பெற்றன. அதைத்தொடர்ந்து சுதந்திர இந்தியாவின் பின் அனைவருக்கும் சம கல்வி இந்திய நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. இன்று கட்டாயம் குறிப்பிட்ட வயது மாணவர்கள் கட்டாய கல்வி என்ற நிபந்தனைக்குள் வந்துள்ளது.

தொழிநுட்பத்தின் அவசியம்

பல நாடுகள் ரீதியான செயற்பாடுகள் மட்டும் இன்றி விண்வெளி தொடர்புகளுக்கும் தொழிநுட்பம் இன்று கை கொடுத்து உள்ளது. எளிய முறை செயற்திட்டங்களை வடிவமைத்து கொடுத்துள்ளது. உலக நாடுகளின் பரிணாம வளர்ச்சிக்கு தொழிநுட்பமானது மிக அவசியமான ஒன்றாகும்.

பல நாடுகளின் தவறான செயற்பாடுகளையும் சீரற்ற நிலமைகளையும் சுட்டிக்காட்ட தொழிநுட்பங்களின் செயற்பாடுகள் மிக அவசியம். உயிர் ஆபத்தான நிலமைகளில் தொழிநுட்பத்தின் பயன்பாட்டால் தொடர்புகளை ஏற்படுத்தி பாதகமான நிலமையை சாதகமான நிலமையாக்க தொழிநுட்பம் அவசியமான ஒன்றாகும்.

தற்கால கல்வியில் தொழிநுட்பத்தின் வளர்ச்சி

உலக நாடுகளை எடுத்து கொண்டால் அவர்களில் வளர்ச்சி எட்டாத தொலைவில் சென்று விட்டது. காரணம் தொழிநுட்பத்தின் அறிவை அதிகம் பயன்பாட்டில் ஈடுபடுத்தி உள்ளார்கள்.

ஆனால் இந்தியாவில் வளர்ச்சி படி படியாகவே உள்ளது. காரணம் சிக்கலான விடயங்கள் பல உள்ள போதும் இன்று அவர்களின் தொழிநுட்பம் தொடர்பான அறிவு பல பரிணாமங்களில் தோற்றம் பெற்று விட்டன.

தொடக்க கல்வியில் அரசாங்கத்தினால் தொழிநுட்பம் தொடர்பான அறிவை வெளிப்படுத்த கணிணி பாடநெறிகளும், தொழிநுட்பம் தொடர்பான நிகழ்ச்சிகளும் என பல தொழிநுட்ப அறிவு சிறிது சிறிதாக உட்படுத்தப்படுகின்றது.

அத்துடன் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான பல கல்வி தொடர்பான அறிவூட்டலை தொழிநுட்பங்களை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடிகின்றது.

இன்றைய காலகட்டத்தின் கல்வி ஏடுகளிலும் கடினமான வழிகளிலும் இன்றி இலகுவான முறைகளை தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்டு கற்பிக்கப்படுகின்றது.

கல்வியில் தொழிநுட்பத்தின் சாதகமான பாதகமான விளைவு

கல்வி அறிவுகளை அதிகமாய் தேடி கற்றிட பல வழிகள் உள்ளன. அவற்றில் பண்டைய காலங்களில் நூலகம் என்ற பெயரில் கூறப்பட்டது. அங்கு பல தேடுவதற்கு அரிய நூல்கள் கூட காணப்படும்.

அதே நூலகத்தில் நூல்களை போல் இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்ப வசதிகளையும் பயன்படுத்தி கொண்டு உள்ளார்கள். தொழிநுட்பமானது கல்விக்கு மிக பெரிய அளவில் உதவியாக உள்ளது.

பல விடயங்களை தேடி அறிந்திட கூடியதாக உள்ளது. பல நாட்டு நிலவரங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் நடவடிக்கைகள் தொழிநுட்பங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் சாதகமான நிலையாக இருந்தாலும் தொழிநுட்ப அறிவை பாதகமான முறையில் செயற்படுத்தும் நபர்களும் இங்கு உள்ளனர். பயனற்ற மனதை சீரழிக்கும் பல விடயங்களும் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக ஆன்லைன் சூதாட்டம், இணைய விளையாட்டுகள், ஆபாச காணொளிகள், இணைய வழி திருட்டுகள் போன்ற பல சட்டவிரோத செயல்பாடுகளும் தீமைகளும் காணப்படவே செய்கின்றன.

முடிவுரை

கல்விக்கு பயன்படுத்தும் தொழிநுட்ப அறிவை தவறான வழியில் பயன்படுத்துவதால் தொழிநுட்பங்கள் வரைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றன.

தொழிநுட்ப அறிவை தகுந்த முறையில் பேணுவது நம் கடமையில் ஒன்றாகும். தொழிநுட்பத்தை நன்மையாகவும் தீமையாகவும் பயன்படுத்துவது நம் கைகளில் தான் உள்ளது என்பது அனைவரும் அறிய வேண்டிய உண்மை ஆகும்.

You May Also Like:

பெண் கல்வி மற்றும் நிதி சுதந்திரம் கட்டுரை

புதிய கல்வி கொள்கை நன்மைகள் கட்டுரை