கீர்த்தி என்றால் என்ன

keerthi enral enna

கீர்த்தி என்றால் என்ன

கீர்த்தி என்றால் புகழ் என்று பொருள்படும். அதாவது நம் செயலுக்காகவோ அல்லது திறமைக்காகவோ நமக்காக மற்றவர்கள் முன்னிலையில் வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும். நம் தகுதியை மேலும் உயர்த்தக்கூடிய புகழை கீர்த்தி எனலாம்.

மனிதர்களாகிய நாம் புகழைத் தேடி செல்வது சுபமல்ல. நம் காரியங்களினாலும் நமது மனோபாவத்தினாலும், நடத்தைகளினாலும் அப்புகழை தனதாக்கிக் கொள்வதற்காகவே முயற்சி செய்ய வேண்டும்.

நம் வாழ்வில் கீர்த்தியடைய செய்யவேண்டியவை

நமக்கு கிடைக்கப்பெறும் சரியான சந்தர்ப்பங்களை வாய்ப்புகளாக கருதி பயன்படுத்திக் கொள்ளல். எதற்கும் பின்வாங்காது தன்னால் முடியும் என்ற சுய தைரியத்துடன் செயல்படல்.

உதாரணமாக ஒரு விளையாட்டு போட்டியில் தன்னால் ஓட முடியும் என்று அடி எடுத்து வைக்கும் மாணவனாலே தன்னால் எவ்வளவு தூரம் ஓட முடியும் என தீர்மானிக்க முடியும்.

அவ்வாறின்றி தன்னால் ஓட முடியாது என மனதளவில்லையே முடிவெடுத்துக் கொள்பவனால் ஆயிரம் வாய்ப்புகள் ஏற்பட்டாலும் அந்த துறையில் சாதிக்க முடியாது. இவ்வாறு பயம் தடைகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றை தாண்டி நாம் ஒரு காரியத்தை சாதிக்கும் போது வழங்கப்படும் வெகுமானம் கீர்த்தியாகும்.

திறமைகள் கீர்த்தியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒரு பாதையாக அமையும். ஆனால் அவை மட்டுமன்றி மனதளவில் நாம் நல்லவர்களாக இருப்பதும் மற்றவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வதும் கூட சில நேரங்களில் நமக்கு புகழை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சிறு வயது தொடக்கம் பாடசாலையில் நண்பர்களிடத்தில், பணிபுரியும் இடத்தில் சக வேலை ஆட்கள் இடத்தில், திருமண பந்தத்தில் கணவன் மனைவிக்கிடையில் என நமது உறவு மரியாதை மிக்கதாக காணப்படுவதற்கு கீர்த்தியும் புகழும் இன்றியமையாதவை.

படிப்பு, பதவி, புகழ் என இவற்றால் நாம் சம்பாதிக்கக்கூடிய கீர்த்தி என்பது உண்மை. ஆனால் இவற்றை மீறியும் ஒழுக்கம், புரிந்துணர்வு, ஒற்றுமை என்பவை எமது வாழ்வில் இன்றியமையாதவையாகும். அவற்றிற்கு இணங்கி ஒழுகுவதனால் ஏற்படுத்தக்கூடிய கீர்த்தி என்பது இன்றியமையாத சவால்களில் இருந்து எம்மை வென்றெடுக்க கூடியவை.

எமது கீர்த்திக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் காரியங்கள்

பதவி வரும்போது பணிவும் வர வேண்டும் என்பதைப் போல நமக்கு புகழ் வரும் போது தலைக்கனம் வரக்கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இப்பொழுது பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கீர்த்தி என்பது சமூகத்தில் மற்றவர்களுக்கு மத்தியில் நம்மை சற்று உயர்த்தி வைத்திருக்கக் கூடிய ஒரு அங்கீகாரமாகும்.

இந்த புகழானது நமக்கு சமூகத்தில் உள்ளவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதனை மதித்து நாம் நடக்க வேண்டும். கீர்த்தி கிடைத்துவிட்டது என்பதற்காக எனக்கு கீழ் உள்ளவர்களையோ அல்லது அந்த புகழை கொடுத்தவர்களையோ மதிக்காமல் நடப்பதன் மூலம் கீர்த்தியை பெற்றமைக்கான ஒரு பலனை நாம் அடைய மாட்டோம்.

அந்த சமூகத்தில் இருந்தே அதற்கான அங்கீகாரம் கொஞ்சம் கொஞ்சமாக எம்மிடமிருந்து பறிக்கப்படும். அவை மட்டுமன்றி எமது துறையில் சாதித்து விட்டோம் கீர்த்தி அடைந்து விட்டோம் என்பதற்காக ஓய்ந்து உட்கார்ந்து விடவும் கூடாது.

தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே தான் கீர்த்தியை நிலைக்க வைக்க முடியும். இல்லாவிடில் அதன் சுகத்தை ஓரின நாட்களைத் தாண்டி மேலும் நீளமாக அனுபவிக்க முடியாது.

கீர்த்தி பெறல் என்பதே ஆசையாகவும் ஆர்வமாகவும் கருதாது தமது கடமைக்கானதும், திறமைக்கானதுமான அங்கீகாரமாக மட்டும் கருதி செயற்பட்டால் எமது வாழ்வை அது மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு போய் சேர்க்கும்.

புகழ் அடைந்து விட்டோம் என அதனை கௌரவமாக நினைத்து கீழே உள்ளவர்களை ஏளனமாக பார்த்தோம் ஆனால் அப்புகழ் இகழாக மாறுவதற்கு அதிக நாட்கள் செல்லாது. இது கீர்த்திகள் அடைந்தாலும் கூட அதனை அனுபவிக்க முடியாத பாதகமான நிலையாகும்.

You May Also Like:

வாழ்நாள் நீடித்த கல்வி என்றால் என்ன