சித்திரை புத்தாண்டு கட்டுரை

chithirai puthandu katturai

சித்திரை புத்தாண்டு கட்டுரை

தமிழர் பண்டிகைகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரை புத்தாண்டு காணப்படுகின்றது.

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறனர். இனிப்புகள், பட்டாசுகள், விளையாட்டுக்கள் என நண்பர்கள், அயவர்கள், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது.

சித்திரை புத்தாண்டு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வரலாற்று பின்னணி
  • சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள்
  • சிறப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

தமிழ் மாதங்களில் சித்திரைக்கு தனி சிறப்பானது காணப்படுகின்றது. ஏனெனில் சித்திரை முதலாம் நாள் தமிழ்ர்களின் பஞ்சாங்கத்தின் படி புத்தாண்டாக உலகமெங்குமுள்ள தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

சித்திரை புத்தாண்டினுடைய வரலாறு மற்றும் அதனுடைய சிறப்புக்கள் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம். சித்திரை புத்தாண்டானது தமிழர்களின் பல தனித்துவ பண்பாடுகளை வெளிப்படுத்தி நிற்பதனை பின்வருமாறு அவதானிக்கலாம்.

வரலாற்று பின்னணி

தமிழ் நாட்காட்டியானது பன்னிரண்டு இராசிகளை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகின்றது. எனவே இராசிகளில் முதல் இராசியான மேசத்தில் சூரியன் சஞ்சரிக்கின்ற முதல் நாளாக சித்திரை புத்தாண்டானது கொண்டாடப்பட்டு வருகின்றது.

சித்திரை மாதம் தமிழர்களுக்கு முதல் மாதமாக வழங்கப்படுகிறது. இதனை சங்க இலக்கியமான நெடுநல்வாடையானது “திண்ணிலை மறுப்பின் ஆடுதலையாக விண்ணுர்வு திரிதலும் வீங்கு செலல் மண்டிலத்து” என்று குறிப்படுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் அகத்தியர் ஆயிரம் புட்ப விதி என்ற நூல்களும் இதற்கு சான்று பகர்வனவாக அமைந்துள்ளது.

சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள்

தமிழர்கள் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கள பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டு அறையில் வைத்து அவற்றை அதிகாலையில் காண்பதனை புனிதமாக கருதுகின்றனர்.

புத்தாண்டு அன்று மருத்துநீர் வைத்து அதிகாலையில் நீராடுவர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள் மற்றும் அன்றைய தினத்தில் பொங்கல் மற்றும் தித்திப்பான சிற்றுண்டிகளை தயாரித்து உறவினரோடு இணைந்து உண்பார்கள் சுபநேரத்தில் கைவிசேடம் வழங்குதல் புத்தாண்டின் சிறப்பம்சமாக உள்ளது.

இத்தினத்தில் இளையவர்கள் மூத்தவர்களிடம் ஆசி பெறுவதும் வழக்கமாக உள்ளது. அத்துடன் இந்த புத்தாண்டு தினத்தில் ஊஞ்சல் கிளித்தட்டு கபடி போன்ற கிராமிய விளையாட்டுக்கள் கோலாகலமாக இடம்பெறுகின்றது.

மற்றும் புதிய முயற்சிகள் மற்றும் தொழில் ஆரம்பித்தல் போன்ற நிகழ்வுகள் இக்காலத்தில் உகந்தவையாக கருதப்படுகின்றது.

சிறப்புக்கள்

இந்த சித்திரை புத்தாண்டானது தமிழகத்தில் மட்டுமன்றி அசாம், மேற்குவங்காளம், கேரளா, தாய்லாந்து, இலங்கை, மலேசியா போன்ற பல்வேறான இடங்களிலும் கொண்டாடப்படுவது சிறப்பான விடயமாகும்.

சித்திரை புத்தாண்டானது வாழ்வில் பல புதிய ஆரம்பங்களை தருகின்ற ஒரு மகிழ்ச்சியான பண்டிகையாக தமிழ்ரகளால் கொண்டாடப்படுகின்ற சிறப்புடையதாகும்.

இது தமிழர்களின் வானியல் மற்றும் சாஸ்த்திரங்களின் பெருமைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைகின்றது.

முடிவுரை

புத்தாண்டு என்பதில் பல தரப்பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியிலே நிலவி வந்தாலும் சித்திரை முதலாம் நாள் என்பது அனைவரின் மனதிலும் பதிந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.

இந்த புத்தாண்டானது அனைவருக்கும் எல்லா வழங்களையும் அள்ளி தருவதாக தமிழர்கள் நம்புகின்றனர். இது புனிதம், மகிழ்ச்சி, அன்பு என்பவற்றை அனைவரிடமும் பகிர்கின்ற ஒரு சிறந்த பண்டிகையாக விளங்குவது சிறப்பம்சமாகும்.