அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். பெண் விடுதலைக்காக போரடியவரும், சமத்துவத்தை ஊக்குவிப்பதில் பங்களிப்பை செய்தவருமான தந்தை பெரியார் பற்றியே பேசப்போகின்றேன்.
தந்தை பெரியார் சாதி முறையை களைவதற்கு அரும்பாடுபட்ட ஒரு சீர்திருத்தவாதியாவார். இவரது இயற்பெயர் ஈரோடு வெங்கடப்பா இராமசாமி ஆகும்.
பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை கொள்கைகளை பெரிதும் ஊக்குவித்தவராவார். இவர் சமூக சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டவராகவும் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்த ஒரு மாமனிதராகவும் திகழ்ந்தார்.
தென்னிந்தியாவில் பிராமணரல்லாத திராவிட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பாடுபட்டவராவார்.
இவர் 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி ஈரோட்டில் கன்னட பலிஜா என்ற வணிக குடும்பத்தில் பிறந்தார். வெங்கட நாயக்கர் மற்றும் சின்ன தாயம்மாளிற்கு மகனாக பிறந்தவராவார்.
ஐந்து ஆண்டுகள் கல்வி பயின்றதோடு மட்டுமல்லாமல் தனது தந்தையின் தொழில் முயற்சியிலும் ஈடுபட்டார். இவர் தனது 19ம் வயதில் நாகம்மையார் என்பவரை திருமணம் செய்தார்.
ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கு
1937 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இடம் பெற்ற இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் தலைமை தாங்கி செயற்பட்டவர் தந்தை பெரியார் ஆவார்.
அதாவது காங்கிரஸ்காரர்கள் இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற நோக்கத்தினை கொண்டிருந்தனர்.
இவ்வாறு இந்தி மொழி ஆட்சி மொழியாக கருதினால் ஏனைய தாய் மொழிகளின் வளர்ச்சியானது குன்றிவிடும் என்பதனை கருத்திற் கொண்டு திருச்சியில் பெரிய இந்தி மொழி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றதோடு இம் மாநாட்டில் பெரியார் தலைமையிலும் தமிழ் மக்கள் பலர் ஒன்றினைந்து எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்த பெருமை தந்தை பெரியாரையே சாரும்.
பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்த பெரியார்
பெண்களின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு தொண்டாற்றியவரே தந்தை பெரியார் ஆவார். இவர் ஆண் படித்தால் அவன் மட்டுமே படிக்கிறான். ஓர் பெண் படித்தால் அந்த குடும்பமே படிக்கின்றது.
பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடாத்தி செல்லக் கூடியளவு ஊதியம் பெற ஆரம்பித்துவிட்டாலே ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை என்று குறிப்பிட்டு பெண்களின் விடுதலைக்காக போராடியவராவார்.
1989 ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நிறைவேற்றினார். மேலும் பெண்களை தமது போராட்ட விடயத்தில் முன்னிலைப்படுத்தினார்.
இதன் காரணமாக சமூக சீர்திருத்த எழுச்சிப்போரில் தம்தங்கை மகள் என்பவரும், இந்தி எதிர்ப்பு போரில் தர்மாம்பாள் அம்மையாரும், சாதி மறுப்புக் கிளர்ச்சியில் காரைக்குடி விசாலாட்சி என பல பெண்கள் போராட்டங்களில் பங்கு கொண்டு உரிமைக்காக குரல் கொடுத்தனர்.
இவர் தனது வாழ்க்கைப் பயணத்தில் பாதி பகுதியை பெண்களின் விடுதலைக்காகவே செலவு செய்ததோடு தமிழ் நாட்டு மக்களின் உள்ளங்களை வென்றதன் காரணமாக தந்தை பெரியார் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றார்.
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார்
1929ம் ஆண்டு சுயமரியாதையினை வெளிப்படுத்தும் விதமாக செங்கல்பட்டில் இடம் பெற்ற சுயமரியாதை மாநாட்டில் தனது பெயரிற்கு பின்னால் வருகின்ற சாதிப்பெயரை நீக்க வழிவகுத்தார்.
அதன் காரனமாக அனைவரும் தனது பெயரிற்கு பின்னால் வருகின்ற சாதிப்பெயரை நீக்க முற்பட்டதோடு சாதியினைக் களைவதற்கான அடிப்படையினை வழங்கி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவரே தந்தை பெரியார் ஆவார்.
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைகளை பேனுவாற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொண்ட ஒரு இயக்கமாகவே காணப்படுகிறது.
மேலும் 1944ம் ஆண்டு முதல் இந்த சுயமரியாதை இயக்கமானது திராவிடர் கழகம் என மாற்றம் பெற்றது.
சமூகத்திலும் நாட்டிலும் அக்கறை கொண்ட ஒருவரான தந்தை பெரியாராவார். 1973ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி மரணமடைந்தார்.
இவர் எம்மை விட்டு மறைந்த போதிலும் இன்று பெண்கள் விடுதலைக்காக தன் வாழ் நாள் முழவதும் போராடிய ஒரு சமூக போராளி என்ற பெருமை இவரையே சாரும்.
You May Also Like: