தமிழர்களின் தடியடி தற்காப்பு கலை

தமிழர்களின் தடியடி தற்காப்பு கலையின் பெயர்

சிலம்பம்

தமிழர்களது பாரம்பரிய பண்பாட்டு கலைகளில் முக்கியமான தற்காப்பு கலையாக காணப்படுவது “சிலம்பம்” ஆகும். இது ஒரு வீர விளையாட்டு வகையைச் சார்ந்ததாகும்.

சிலம்பத்திற்கு “கம்பு சுற்றுதல்” என்று இன்னொரு மறுபெயரும் உண்டு. சிலம்பம் ஆனது பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு ஆகும். இன்றைய இந்த பதிவில் சிலம்பம் கலை பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.

தோற்றம் பெற்ற வரலாறு

சிலம்பம் என்பது மக்கள் கொடிய மிருகங்களிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள கையாண்ட தற்காப்புக் கலை ஆகும். இந்த சிலம்பத்திற்கு மக்கள் தங்கள் கைகளில் இலகுவாக கையாளக்கூடிய சிறிய ஆயுத வகைகளைச் சார்ந்த தடி, சிறிய கத்தி, கோடரி போன்றனவற்றை கையில் பயன்படுத்துவர்.

சிலம்பமானது இந்தியாவின் தமிழ் நாட்டில் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகின்றது. தமிழர்கள் முதலாவதாக கையில் எடுத்து ஏந்திய ஆயுதம் கம்பு ஆகும். இதன் விளைவாக உருவாகியதே சிலம்புக்கலை ஆகும்.

பண்டைய காலத்தில் தமிழர்கள் மட்டுமன்றி சத்திரியர்களும் பயன்படுத்தியதாக அறியப்படுகின்றது. சில பள்ளிகளிலும் தனியார் அமைப்புக்களிலும் கற்பிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது மாணவர்கள் சிலம்பத்தை வீர விளையாட்டாக கருதி விளையாட்டுப் போட்டிகளிலும் அரங்கேற்றுகின்றனர்.

இடத்துக்கிடம் வடக்கன்களரி, தெக்கன்களரி, சுவடு அடிமுறை, கர்நாடகச் சுவடு, சிரம்பம், சைலாத், தஞ்சாவூர் குத்துவரிசை, நெடுங்கம்பு, சிலம்பாட்டம், சிலம்பொலி ஆட்டம் போன்ற வெவ்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட 32 வகையான சிலம்பாயுதங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிலம்பத்தின் உட்கூறுகளும் நன்மைகளும்

சிலம்பத்தில் மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டுவரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் போன்றன அடிப்படை அம்சங்கள் ஆகும். இவற்றின் வரிசையிலேயே சிலம்பம் பயில வேண்டும்.

சிலம்பத்தில் பயில்வதால் தசை விரைவு, வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைதல், காலும் கண்ணும் ஒருங்கிணைதல், உடற்சமநிலை பேணப்படல், தசை ஆற்றல் விருத்தியடைதல், வேகம்,தசைவலிமை பெறல், சுற்றோட்டத் தொகுதி சீர்பெறல், போன்ற நன்மைகள் உடலுக்கு ஏற்படுகின்றன.

சிலம்பாட்ட முறை

சிலம்பாட்ட தற்காப்பு முறையில் சரியாகத் தடியைக் கையாளுதல், கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்ற பல கூறுகளைக் கொண்டுள்ளது. சிலம்பாட்டம் இரு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

சிலம்பாடும் போது எதிராளி வீசுகின்ற கம்பினை தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் போன்றனவே சிலம்பில் உள்ள அடிப்படை அம்சங்கள் ஆகும். சிலம்பாட்டம் கற்க ஆறு மாதம் எடுக்கும்.

தற்காலத்தில் சிலம்பம் ஆண்கள்,பெண்கள் என இருபாலரும் விளையாடுகின்றனர். சிலம்பத்தடி மூங்கில் இனத்தைச் சேர்ந்த மரங்களால் செய்யப்படுகின்றது. சிலம்பத்தில் 72ற்கும் அதிகமான சுற்றுமுறைகள் உள்ளன.

துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச் சிலம்பம், போர்ச்சிலம்பம், பனையேறி மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு, நாகம் பதினாறு போன்றன சிலம்பத்தின் வகைகள் ஆகும்.

இத்தகைய தமிழர்களது பாரம்பரிய கலையை இன்றைய சந்ததியினரோடு அழிய விடாது எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் தற்காப்பு கலையாக மாற்றுவதற்கு நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோமாக!

You May Also Like:

யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன

உண்டு உறைவிட பள்ளி என்றால் என்ன