தாது என்றால் என்ன

தாது

மனிதன் தாதுக்களை வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றான். மிகவும் மதிப்புமிக்க தாது வைப்புகளில் செம்பு, தங்கம் மற்றும் இரும்பு போன்றன தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு முக்கியமான உலோகங்கள் ஆகும்.

உலோகங்கள் குறிப்பிட்ட தாதுக்களுடன் அடிக்கடி தொடர்புடையவை. உதாரணமாக, அலுமினியம் பொதுவாக பாக்சைட் எனப்படும் தாதுவில் காணப்படுகிறது. பாக்சைட்டில் உள்ள அலுமினியம் கொள்கலன்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

தாது என்றால் என்ன

தாது என்பது பூமியின் மேலோட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புமிக்க கனிமங்களின் வைப்பு ஆகும். எந்தவொரு குறிப்பிட்ட கனிமத்தில் இருந்து சேர்ம நிலையில் உலோகம் எளிதாக லாபகரமான முறையில் பெருமளவு பிரித்தெடுக்க முடியுமோ அந்த கனிமம் தாது எனப்படும்.

கனிமங்களுக்கும் தாதுக்களுக்குமான வேறுபாடு

ஒரு உலோகம் தனித்த நிலையில் இருக்கலாம் அல்லது சேர்ம நிலையில் இருக்கலாம். இதுவே கனிமங்கள் ஆகும். தாதுக்கள் என்பது உலோகம் அதிகம் கொண்டுள்ள பொருட்கள் தாதுக்களாகும்.

கனிமத்தில் உலோகம் உண்டு எனினும் அதை எளிதில் பிரித்தெடுக்க முடியாது. ஆனால் தாதுவானது எளிதான முறையில் பிரித்தெடுக்க முடியும். அனைத்துக் கனிமங்களும் தாதுக்களல்ல. ஆனால் அனைத்து தாதுக்களும் கனிமங்களே ஆகும்.

தாதுக்களைப் பிரித்தெடுக்கும் முறை

புவியீர்ப்பு முறை : தாதுவானது அதில் கலந்துள்ள மாசுக்களைவிட கனமானதாக இருக்கும் போது புவியீர்ப்பு முறை பயன்படுத்தப்படுகின்றது.
எடுத்துக்காட்டு – ஹேமடைட் (Fe₂O₃)

காந்தப் பிரிப்பு முறை : தாதுக்களானவை காந்தத் தன்மை பெற்றிருப்பின் காந்தப் பிரிப்பு முறை பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு – டின்ஸ்டோன் (SnO₂)

நுரை மிதப்பு முறை : தாதுவானது அதில் கலந்துள்ள மாசுக்களைவிட இலேசானதாக இருப்பின் நுரை மிதப்பு முறை பயன்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு – ஜிங்க் பிளன்ட் (ZnS)

வேதிமுறை : மிகத் Àய நிலையில் உள்ள தாதுக்களை அடர்பிரிக்கக்கூடிய முறை ஆகும்.
எடுத்துக்காட்டு – பாக்சைட் (Al2O3 2H2O))

தங்கத்தாது

தங்கம் தொழிற்சாலைக்காக சுரண்டி எடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, விண்வெளி வீரரின் கண்களை தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க, விண்வெளி ஹெல்மெட்கள் தங்கத்தின் மெல்லிய அடுக்குடன் பூசப்பட்டிருக்கும். இருப்பினும், பெரும்பாலானவை தங்கம் நகைகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நாணயம் அல்லது, பணத்திற்கான அடிப்படையாக தங்கத் தாது வெட்டி எடுக்கப்பட்டது.

பெரும்பாலான நாடுகள் இருபதாம் நூற்றாண்டில் தங்களுடைய பணத்தை தங்கத் தரத்தில் மதிப்பிடுவதை நிறுத்திவிட்டன.

தாது உப்புக் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

கல்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, அயோடின் ஆகியன முக்கியமான தாதுக்களாகும். கல்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகிய மூன்றும் மோக்ரோத் கனிமச்சத்துக்களாகும். அயோடின் இரும்பு மைக்ரோத் கனிமச்சத்துக்களாகும். இவை உடலில் குறைவடையும் போது பல நோய்களை ஏற்படுத்தும்.

கல்சியக் குறைபாடு ஏற்படும் போது எலும்பு சம்மந்தமான நோய்கள் உருவாகும். குறிப்பாக எலும்பு வளர்ச்சி குறைபாடு, எலும்புத்துளை நோய் போன்ற நோய்கள் ஏற்படும். சோடியம் குறைபாட்டால் தசைப்பிடிப்பு நரம்புத் தூண்டல்கள் கடத்த இயலாமை போன்ற நோய்கள் ஏற்படலாம். இரும்புச் சத்துக்குறைபாட்டால் இரத்தச்சோகையும், அயோடின் குறைபாட்டால் முன்கழலை நோயும் ஏற்படும்.

You May Also Like:

இயற்கை வளங்கள் கட்டுரை