பூனை குறுக்கே சென்றால் என்ன பலன்

poonai kuruke vanthal enna palan

இன்றைய நவீன கால கட்டத்தில் தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

எவ்வளவு தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் நம் மக்களுடைய பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் சில இன்றளவும் அப்படியே தொன்றுதொட்டு காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

அவை காரணங்கள் அறியப்பட்டோ ஆராயப்பட்டோ இல்லாமல் பரம்பரை கடத்திகள் போன்று ஒவ்வொரு சந்ததியினருக்கும் கடத்தப்படுகின்றன.

நம் மக்களிடையே பல மூட நம்பிக்கைகள் இன்றளவும் நம்பப்பட்டே வருகின்றன. காலையில் காகம் கரைந்தால் வீட்டிற்கு உறவினர் வரவுள்ளனர், வீட்டில் உள்ள சுவாமிப்படங்கள் தீப்பிடித்தல் துக்க விடயத்திற்கான அறிகுறி போன்றன அவற்றுள் சிலவாகும்.

இன்றைய பதிவில் பூனையுடன் தொடர்புடைய மற்றும் மக்களால் நம்பப்படுகின்ற மூட நம்பிக்கைகள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.

வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் என்ன பலன்

பண்டைய காலங்களில் வாகன வசதிகள் இல்லாததால் மாட்டு வண்டியிலும் குதிரை வண்டில்களிலும் மக்கள் சவாரி செய்து வந்தனர்.

குறிப்பாக இரவு நேரப் பயணங்களில் மாடு மற்றும் குதிரை எதிரில் பூனை வந்தால் பூனையின் கண்களைப் பார்த்து மருண்டு பயந்து நின்று விடும். இதனால் மக்கள் சிறிது நேரம் அவற்றை நீர் அருந்தச் செய்துவிட்டு பின்னர் மீண்டும் பிரயாணத்தை மேற்கொள்வர்.

இந்த பண்பு பிற்காலத்தில் மருவி மக்களிடையே வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அபசகுணம் என்று கருதி திரும்பி வந்து தண்ணீர் குடித்து விட்டு சிறிது நேரம் கழித்து அந்த பாதையை வேறு யாராவது கடந்து சென்ற பின்னர் தாம் பிரயாணத்தை மேற்கொள்ளும் வழக்கமாயிற்று.

குறிப்பாக கறுப்பு நிறம் சனிபகவான் மற்றும் ராகு பகவானின் நிறங்களாக கருதப்படுகின்றன.

எனவே வெளியே செல்லும் போது கறுப்பு நிற பூனை பாதையின் குறுக்கே செல்வது சனிபகவான் மற்றும் ராகுபகவானை அவமதிப்பதாக கருதப்படுவதோடு அந்த தெய்வங்களின் கோபங்களிற்கு ஆளாகுவதோடு செல்லும் காரியம் தடைப்படும் என்னும் மூட நம்பிக்கை சமய ரீதியாக நம்பப்படுகின்றது.

எல்லோரும் அறிய வேண்டிய உண்மை ஒன்று மட்டுமே நாம் வெளியே செல்லும் போது பூனை இடது புற பாதையை மறைத்து வடபக்கமாக போவதோ அல்லது வலதுபுற பாதையை மறைத்து எதிர்த்திசையில் சென்றாலோ எதுவுமே நமக்கு அபசகுணம் அல்ல. எவ்வாறு சென்றாலும் அது நமக்கு அபசகுணம் அல்ல. எவ்வாறு சென்றாலும் அது நமக்கு தீமையை விளைவிக்காது. இதுவே அறிவியல் ரீதியான உண்மை ஆகும்.

குடியிருக்கும் வீட்டில் பூனை குட்டி போட்டால் என்ன பலன்

மனிதர்கள் குடியிருக்கின்ற வீட்டில் பூனை குட்டி போட்டால் அந்த வீட்டில் செல்வ கடாட்சம் நிறைய போகின்றதாக ஐதீகம் காணப்படுகின்றது.

மேலும் பூனை ஒரு வீட்டில் நுழைந்து பால் குடித்தால் அந்த வீட்டில் செல்வ வளம் அதிகரிப்பதற்கான அறிகுறி என்று நம்பப்படுகின்றது.

பூனை தொடர்பான சமய நம்பிக்கைகள்

தனி ஒருவரின் ஜாதகப்படி ஒருவருக்கு ராகு பார்வை நல்ல இடத்தில் இல்லை என்றால் அதற்கு பரிகாரம் அந்நபர் பூனை வளர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் ஜோதிட சாஸ்திரத்தின்படி கண் திருஷ்டி, பில்லி சூனியம், கால சர்ப்ப தோஷம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டில் பூனை எடுத்து சிவப்பு துணி ஒன்றில் கட்டி உடன் வைத்திருப்பதால் நீங்கும் என்று தெய்வீக ரீதியாக நம்பப்படுகின்றது.

You May Also Like:

நவராத்திரி பற்றிய பேச்சு போட்டி

தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி