மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை

makkal thogai perukkam katturai in tamil

உலகில் அல்லது குறித்த பிரதேசத்தில் வாழக்கூடிய மொத்த மக்களின் எண்ணிக்கையினை குறிப்பதற்கே மக்கள் தொகை என்ற சொல் பயன்படுவதனை காணலாம்.

அதாவது மனிதர்களின் இனத்தொகையைக் குறிப்பதாக இந்த மக்கள் தொகை காணப்படும். தற்காலங்களில் உலகில் மக்கள் தொகை பெருக்கம் சடுதியாகவே வளர்ச்சி அடைந்து கொண்டே வருகின்றமையைக் காணலாம்.

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மை தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணிகள்
  • மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மைகள்
  • மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகள்
  • மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதாவது நாம் வாழக்கூடிய சமூகங்களில் நிகழக்கூடிய ஒரு செயற்பாடு ஆகும்.

இந்த செயற்பாட்டின் மூலமாக சமூகத்திற்கு சில நன்மைகள் கிடைத்தாலும் கூட பல்வேறு தீமைகளும் கிடைக்கவே செய்கின்றன.

அதாவது ஒரு நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை விடவும் மக்கள் தொகை அதிகமாக காணப்பட்டால்ல் அந்நாட்டில் வளப் பற்றாக்குறை ஏற்படுவதனைக் காணலாம்.

அந்த வகையில் நாம் இக்கட்டுரையில் மக்கள் தொகை, அவற்றின் நன்மை தீமைகள் என்பவற்றை நோக்கலாம்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணிகள்

தற்காலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தமையில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

அவற்றில் முக்கியமான சிலவாக இளவயது திருமணம் அதிகரித்தல், தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியினால் இறப்பு வீதம் குறைந்து பிறப்பு வீதம் அதிகரித்தமை, குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக எவ்வித விழிப்புணர்வுகளும் இல்லாமல் போனமை, மத அடிப்படையில் குழந்தை கட்டுப்பாடு தவறானது என்ற எண்ணம் வலுப்பெற்றமை மற்றும் சமூகங்களிடையே போதிய அளவு கல்வி அறிவு இன்மை போன்ற காரணங்களின் அடிப்படையில் தற்காலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ளமையை காணலாம்.

மக்கள் தொகை பெருக்கத்தின் நன்மைகள்

மக்கள் தொகை உலகில் பெருகுவதனால் சில நன்மைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.

அந்த வகையில் மனித வளம் அதிகரிக்கும் அதாவது பல்வேறு துறைகள் சார்ந்து தொழில்துறை விருத்தி அடைவதோடு அனைத்து தொழில்துறைகளிலும் வேலை செய்வதற்கான மனிதர்களின் தொகையும் காணப்படும், மேலும் கொள்ளை நோய்கள் மற்றும் வீதி விபத்துக்கள், இயற்கை அனர்தங்கள் என்பவற்றினால் திடீரென மக்கள் இறக்கின்ற பொழுதுகளில் மக்கள் தொகை பெருக்கம் அந்த இடங்களை நிரப்புவதற்கு அவசியமாக காணப்படுகின்றது, அத்தோடு அதிகமான மக்கள் தொகையானது சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதும் அதன் நன்மைகளில் ஒன்றாகும்.

மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகள்

தற்கால உலகில் ஒவ்வொரு நாடுகளும் எதிர்கொள்ளக்கூடிய மிகவும் பாரிய பிரச்சினை ஒன்றாகவே மக்கள் தொகை பெருக்கம் காணப்படுகின்றது.

அதாவது ஒரு நாட்டில் உள்ள வளங்களை விடவும் அதனை அனுபவிக்க கூடிய மனிதர்களின் தொகை கணிசமான அளவில் அதிகரிப்பதனால் அந்நாட்டில் வறுமை எழக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

இன்னும் மருத்துவ வசதிகள் போதாமை, சுகாதார பிரச்சனைகள் ஏற்படுதல், அனைவருக்கும் போதிய அளவு உணவு கிடைக்காமை, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுதல், நாட்டில் பஞ்சம், வறுமை ஏற்படுதல், தொழில்துறைகளில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காமை மற்றும் வறுமை, பஞ்சம், வேலையின்மை ஆகியவற்றால் கொலை, கொள்ளை அதிகரித்தல் போன்றவாரான தீமைகள் இந்த மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

ஒரு நாட்டில் பாரிய வீழ்ச்சியினை அல்லது தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய இந்த மக்கள் தொகை அதிகரிப்பினை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளாக பின்வருவனவற்றை முன் வைக்கலாம்.

அந்த வகையில் சமூகத்தில் கல்வி அறிவினை அதிகரிக்க செய்தல் அதிலும் குறிப்பாக பெண்களுக்கான கல்வி அறிவினை ஊட்டுதல், குடும்ப நல திட்டங்கள் தொடர்பாக சமூகங்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுதல், இளவயது திருமணமத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்தல், குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஊட்டுதல் போன்றவாரான செயற்பாடுகளின் மூலமாக துரிதமான மக்கள் தொகை அதிகரிப்பினை கட்டுப்படுத்த முடியும்.

முடிவுரை

நாம் வாழக்கூடிய தொழில்நுட்ப யுகத்தில் முக்கியமான ஒரு பேசு பொருளாகவே மக்கள் தொகை பெருக்கம் காணப்படுகின்றது. இதனால் பல்வேறு நாடுகள் பல்வேறு விளைவுகளை சந்தித்துள்ளது.

எனவே இந்த உலகில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் சிறந்ததொரு பிரஜை என்ற வகையில், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்து கொண்டு, நாம் வாழும் சூழலில் இவ்வாறான விளைவுகள் ஏற்படாத வகையில் பாதுகாத்துக் கொள்வது அவசியமானதாகும் என்பதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

You May Also Like:

மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை