விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை

viduthalai poratta veerargal katturai

விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை

நாம் வாழும் இந்திய தேசம், இன்று சுதந்திர நாடாக காணப்படுவதற்கு, எமது முன்னோர்களின் குருதியும், தியாகமும், அர்ப்பணிப்புமே காரணமாக அமைந்துள்ளது.

அதாவது இந்திய விடுதலைக்காக போராடிய ஒவ்வொரு வீரனின் வெற்றியாகவுமே இந்த சுதந்திரம் காணப்படுகிறது. எனவே இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஒவ்வொரு விடுதலைப் போராட்ட வீரர்களும் போற்றத் தகுந்தவர்களாவர்.

விடுதலை போராட்ட வீரர்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆங்கிலேயர்களின் அடக்குமுறை
  • விடுதலைப் போராட்ட முன்னோடி
  • விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம்
  • விடுதலைப் போராட்டமும் வீரர்களும்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியா 1945 ஆகஸ்ட் 15 இல் ஆங்கிலேயே காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டது. அதாவது இந்த விடுதலை வெறுமனே இலகுவாக கிடைத்த ஒன்று அல்ல. அதற்காக எமது முன்னோர்கள் மிகவும் கடுமையாக பாடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்திய சுதந்திரப் போராடம், அதில் பங்கு கொண்ட வீரர்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறை

இந்தியாவை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயரை விரட்டிய ஆங்கிலேயர் தமது ஆதிக்கத்தை இந்தியாவின் மீது செலுத்து தொடங்கினர்.

அதாவது கிழக்கிந்திய வர்த்தக கம்பெனி மூலமாக தங்களுடைய வணிக ஆதிக்கத்தை செலுத்தினர்.

ஆயுத பலம் கொண்ட ஆங்கிலேயர்களுக்கு இந்திய அரசுகள் பலவும் அடி பணிந்தன, கப்பமும் கட்டி வந்தன. சொந்த நாட்டிலேயே அந்நியர்களுக்கு வரி செலுத்தும் அவலம் இந்தியர்களுக்கு ஏற்பட்டமையினால் பலர் விடுதலைப் போராட்டங்களில் குதித்தனர்.

விடுதலைப் போராட்ட முன்னோடி

விடுதலைப் போருக்கு முதல் முதல் குரல் கொடுத்த பெருமை தமிழகத்தையே சாரும். அதாவது “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் வரி” என வீர முழக்கமிட்டார் வீர பாண்டிய கட்டபொம்மர்.

அத்தோடு அவருடைய தம்பி ஊமைத்துறையும், சிவகங்கை ஆட்சி புரிந்த வீர மருது பாண்டியர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து வேலூரில் இருந்த சிப்பாய்கள் கலகத்தை மேற்கொண்டனர். இதுவே இந்திய விடுதலை வரலாற்றின் முதல் போராட்டமாகிய 1857 இல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு வழிவகுத்தது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம்

1882 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தை ஆலன் ஹியூம், வில்லியம் வெட்டார்பர்ன் ஆகிய இரு ஆங்கிலேயர்களும் தாதாபாய், நௌரோஜீயினையும் சேர்த்து தோற்றுவித்து, மக்களுக்கு தேவையான தாராள உரிமை, கைத்தொழில், வணிகம், செய்தி போன்றவற்றிக்கான சுதந்திரம் வேண்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு,

வங்காள மாகாணம் கர்சன் பிரபுவால் நிர்வாக இலகு கருதி இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனால் தங்களுடைய மொழியும், பண்பாடுகளும் கெடும் என் கருதிய திலகர், லாலா லஜபதிராய், கோகலே, அனிபெசட் அம்மையார் போன்ற பலர் ஆங்கிலேய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்தனர்.

விடுதலைப் போராட்டமும் வீரர்களும்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய வீரர்கள் தங்களுடைய பங்கினை அளித்து வந்துள்ளனர்.

அந்த வகையில் வா.வே.சு.ஐயர், பாரதியார் போன்றோர் தமது எழுத்துக்களால் புரட்சிகளை உருவாக்க, ஒத்துழையாமை இயக்கம், தனி நபர் சத்தியாக் கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களின் மூலம் காந்தியடிகளும்,

சட்ட மறுப்பு இயக்கத்தில் திருப்பூர் குமரன், ஆயுத வழியில் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேருஜி, பகத்சிங், ராஜாஜி போன்றவர்களும் காமராசர், வஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவம் போன்ற பல முக்கியமான வீரர்கள் தங்களுடைய வாழ்வையே இந்திய விடுதலைக்காக தியாகம் செய்துள்ளமையை காணலாம்.

முடிவுரை

சுமார் 150 வருடங்கள் இந்தியாவை காலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த ஆங்கிலேயர், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பொருளாதார நெருக்கடிகளால் சோர்வடைந்ததோடு,

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர் போராட்டங்களுக்கும் ஈடு கொடுக்க முடியாமையினால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தனர்.

இவ்வாறு பல தியாகிகளின் விளைவாக கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்வதோடு, அந்த விடுதலைக்காக போராடிய வீரர்களின் தியாகத்திற்கான மரியாதையையும் கொடுக்க வேண்டும்.

You May Also Like:

விடுதலைப் போரில் சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை

காந்தியின் அகிம்சை கட்டுரை