இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்

இந்திய தேசிய நூலகம்

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்இந்திய தேசிய நூலகம்

“வாசிப்பு மனிதனை பூரணமாக்கும்” ஒரு மனிதன் வாசிப்பதன் மூலம் பல்வகையான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. நூல்கள், பத்திரிகைகள், சுவரொட்டிகள், கட்டுரைகள், விளம்பரங்கள் எனப் பலவகையில் விடயங்கள் நாம் வாசிப்பதற்கு ஏற்றாட்போல் தேங்கி கிடக்கின்றன.

ஆய்வுகளின்படி வாசிப்பதற்கேற்ற சிறந்த ஒரு இடம் நூலகம் மட்டுமே என்று குறிப்பிடப்படுகின்றது. ஏனெனில் பரபரப்பான உலகில் எப்பொழுதும் அமைதி பேணப்படும் இடம் நூலகம் ஆகும்.

இன்றைய இந்த பதிவில் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமான இந்திய தேசிய நூலகம் பற்றி விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.

இந்திய தேசிய நூலகம் அமைவிடம் மற்றும் வரலாறு

இந்தியாவின் தேசிய நூலகம் கொல்கத்தா மாநிலத்தில் அலிப்பூரில் உள்ள பெல்வெடேர் என்ற பிரதேசத்தில் 1893இல் கட்டப்பட்டது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும்.

கல்கத்தா நூலகம் ஆரம்பத்தில் அச்சிடப்பட்ட விடயங்களைப் பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இம்பீரியல் நூலகத்துடன் கொல்கத்தா நூலகம் இணைத்து ஒருமித்த நூலகமாக மாற்றப்பட்டதே இன்றைய தேசிய நூலகம் ஆகும்.

இந்த நூலகத்தில் இந்தியாவில் பேசப்படும் மற்றும் புழக்கத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியாகின்ற நூல்கள் மற்றும் புதினத்தாள்கள் இங்கு காணப்படுகின்றன.

அதுமட்டுமல்லாது ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்ட பல நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளும், வரைபடங்களும் இந்த நூலகத்தில் காணப்படுகின்றன.

பொது மக்களின் பாவனைக்காக தேசிய நூலகம் 1953ல் மாசி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்திய தேசிய நூலகத்தில் சுமார் 2.2 மில்லியனுக்கும் அதிகமான நூல்கள் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் தனியாருடைய நூலகமாகவே இயங்கி வந்துள்ளது. பின்னர் ஹர்ஷன் பிரபு காலத்திலேயே இந்த நூலகம் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த நூலகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் காலை 9.30 தொடக்கம் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும். இவை தவிர இந்தியாவின் பொது விடுமுறை நாட்களான காந்தி ஜெயந்தி மற்றும் சுதந்திர தினம் போன்ற தினங்களில் மூடப்பட்டும் இருக்கும்.

இந்திய தேசிய நூலகமானது இந்திய நாட்டின் அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சின் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.

கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய தேசிய நூலகத்தின் பரப்பளவு 30 ஏக்கர் நிலப்பரப்பு ஆகும். இந்தியாவில் காணப்படுகின்ற சேகரிப்பு நூலகங்களில் தேசிய நூலகமும் ஒன்று ஆகும்.

இங்கு வங்காள மொழி, இந்தி மொழி, தமிழ் மொழி, உருசிய மொழி, அரபிய மொழி, பிரெஞ்சு மொழி போன்ற மொழிகளிலான சேகரிப்புக்கள் மற்றும் நூல்கள், பத்திரிகைகள் போன்ற பல வெளியீடுகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமல்லாது தொன்மை வாய்ந்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழியின் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிச்சுவடிகளும் இந்திய தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமான நாட்டின் அரச ஆவணங்கள் உட்பட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற முக்கிய மாநாட்டு ஆவணங்கள் தேசிய நூலகத்தில் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றது.

அது மட்டுமல்லாது கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கணம், அறிவியல், விஞ்ஞானம், நவீனம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து துறை சார்ந்த நூல்களும் இங்கு காணப்படுகின்றன.

இவ்வாறு நூல்கள் மட்டுமன்றி பண்பாடு, கலாசாரம், போன்றவற்றை பேணிப் பாதுகாப்பதைப் போன்று தேசிய நூலகத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருரினதும் தலையாய கடமை ஆகும்.

You May Also Like:

தமிழர்களின் தடியடி தற்காப்பு கலை

பார்வையற்றோருக்கான எழுத்தை உருவாக்கியவர்