ஆபரணங்களுள் ஐம்பொன் அணிகலன்களும் ஒன்றாகவே காணப்படுகின்றது. ஐம்பொன்களின் பயன்பாடானது இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து கொண்டு வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.
ஐம்பொன் யாவை
ஐம்பொன் என்பது செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம் மற்றும் ஈயம் போன்ற ஐந்தையும் உள்ளடக்கிய உலோகமே ஐம்பொன்னாகும். இவற்றை பஞ்சலோகம் எனவும் அழைக்க முடியும்.
இந்த ஐந்து உலோகங்களுமே ஐம்பொன்களாகும். ஐம்பொன் என்பதனை பிரித்து நோக்குவோமாயில் ஐ என்பது ஐந்து அல்லது ஐ வகை என்பதனையும் பொன் என்பது உலோகத்தினையும் சுட்டுகின்றது.
ஐம்பொன்னின் சிறப்புக்கள்
ஐம்பொன்களான உலோகங்கள் பல்வேறு பயன்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த ஐம்பொன்களானவை மனிதனின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகின்றது.
நாம் எமது உடலில் இந்த ஐம்பொன்களை அணியும் போது உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், உடலுக்கு தேவையான ஆத்ம மனோ சக்தியையும் பெற்றுக் கொள்ள முடிகிறது.
எமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யக் கூடிய வல்லமையினை ஐம்பொன்கள் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஐம்பொன்களின் சக்தியானவை உடலில் பிராண சக்தியை பலப்படுத்துவதாகவும் உலோக சக்தியை அதிகரிக்க கூடியதாகவும் காணப்படுகின்றது.
நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துவதற்கு இவை துணை புரிகின்றன. மேலும் எதிர்மறை ஆற்றலை தவிர்த்து நேர்மறை சக்திகளை வெளிவிடக் கூடியதாக காணப்படுவது சிறப்பிற்குரியதாகும்.
ஐம்பொன்களின் மூலம் ஐந்து கிரக சக்திகள் எம்மில் வெளிப்படுவதனை காணலாம். அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு போன்றவற்றில் கிரக சக்திகள் காணப்படுவது சிறப்பிற்குரியதாகும்.
ஒரு வழிபாட்டின் மந்திர அதிர்வுகளை உடலில் வாங்கும் போது சிந்தனை மேலோங்கி காணப்படும், மனம் சாந்தமடையும், உடல் சுறுசுறுப்பு ஏற்படும்.
ஐம்பொன் சிலைகள்
ஐம்பொன் சிலைகளானவை இன்று சிறப்புமிக்கதாக திகழ்கின்றது. அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு போன்ற ஐம்பொன்களினால் சிலைகளானவை வடிக்கப்படுகின்றது.
ஐம்பொன்களினால் செய்யப்பட்ட சிலையினை பார்க்கும் போது கண் வழியாக பிரபஞ்ச சக்தியானது எம்மை வந்தடைகிறது.
அதாவது தங்கம் குருவின் சக்தியையும், வெள்ளி சுக்ரனின் சக்தியையும், இரும்பு சனியின் சக்தியையும், ஈயம் கேதுவின் சக்தியையும் கொண்டமைந்து காணப்படுகின்றது.
மேலும் ஐம்பொன் சிலைகளுக்கு அபிசேகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சக்தியானது முழுமையாக கிடைக்கும்.
ஆரம்ப காலங்களில் அதாவது சோழர்களின் ஆட்சி காலப்பகுதிகளில் இந்த சிலைகளின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டதோடு அக்காலப்பகுதியில் இச்சிலைகள் முக்கியத்துவம் வாய்ந்த சிலையாக காணப்பட்டது.
ஐம்பொன்னின் கலவையால் உருவான சிலைகளை வழிபடுவதானது வாழ்வில் சமநிலையையும், தன்னம்பிக்கையையும், ஆரோக்கியம் மற்றும் அதிஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இன்று பல்வேறுபட்ட இடங்களில் ஐம்பொன்னிலான சிலைகளே வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றன.
ஐம்பொன்களும் கிரக சக்திகளும்
ஐம்பொன்களின் மூலம் ஐந்து கிரக சக்திகள் வெளிப்படுவதாக முன்னோர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதாவது குருவின் சக்தி, சுக்ரனின் சக்தி, கேதுவின் சக்தி, குரு கிரகத்தின் சக்தி போன்றன ஐம்பொன்களால் கிடைக்கப் பெறுகின்றது.
சூரிய கிரக ஆற்றலை பெற செம்பையும், கேது கிரக ஆற்றலை பெற ஈயத்தையும் பயன்படுத்துகின்றனர். நவ கிரகங்களின் அலை இயக்கமானது மனிதர்களது சுபாவத்தையும் அவர்களுடைய செயலையும் தீர்மானிக்கிறது என்பதனை விஞ்ஞான ரீதியாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும் ஐம்பொன் கொண்டு செய்யப்பட்ட மோதிரம் அல்லது காப்பினை அணிந்தால் சம்பந்தப்பட்ட கிரக ஆற்றலை பெற்றுக் கொள்ள முடியும்.
You May Also Like: