சங்க காலத்தில் தொல்காப்பியம் கூறுவதைப் போல அகம் புறம் என்ற இரண்டு பொருட்கள் காணப்பட்டன. அவ்விரு பொருட்களுக்கும் அமைவாக பாடல்கள் பாடப்பட்டன. அவ்வாறான அகப்பொருள் சார்ந்த. இலக்கியமே குறுந்தொகையாகும்.
குறுந்தொகை என்பதன் பொருள்
குறுந்தொகை என்ற நூலின் பெயரை குறுமை + தொகை என பாகுபடுத்தலாம். அதாவது குறுகிய அடிகளைக் கொண்டமைவதனால் இந்நூல் குறுந்தொகை எனப்படுகின்றது. இந்நூலில் குறுகிய அடி நாலும் நீண்ட அடிகள் எட்டுமாக காணப்படுகின்றன.
குறுந்தொகை இலக்கிய விளக்கம்
அகப்பொருள் சார்ந்து அகவற்பாவால் பாடப்பட்ட இலக்கியமே குறுந்தொகை ஆகும். நான்கு அடியை சிற்றெல்லையாகவும் எட்டு அடியை பேரெல்லையாகவும் கொண்ட 401 பாடல்கள் இந்நூலில் காணப்படுகின்றன.
400 பாடல்களும் ஒரு கடவுள் வாழ்த்துமாக காணப்படுகின்றது. கடவுள் வாழ்த்தானது முருகப்பெருமானைச் சார்ந்து பரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
இந்நூலில் காணப்படும் பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களின் கபிலரே இந்நூலின் அதிக பாடலை பாடியுள்ளார். 20 பாடல்களுக்கு நட்சினாக்கினார் உரை எழுதியுள்ளார். ஆனால் அவரின் உரைகள் கிடைக்கப் பெறவில்லை. 1915 ஆம் ஆண்டு சௌரியப் பெருமாள் என்பவரால் முதன் முதலில் பதிக்கப்பட்டு சி.வை தாமோதரம் பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
குறுந்தொகையின் வேறு பெயர்கள்
- நல்ல குறுந்தொகை
- குறுந்தொகை நானூறு
குறுந்தொகையில் பேசப்படும் அரசர்கள்
- சோழன் கரிகாலன்
- குட்டுவன்
- பசும்பூண் பாண்டியன்
- பாரி
- ஓரி
- நள்ளி
குறுந்தொகையில் கூறப்படும் மாந்தர்கள்
தலைவன், தலைவி, தோழி, செவிலி, கண்டோர், பாங்கன், பரத்தை எனும் ஏழுவகை மாந்தர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
குறுந்தொகையின் சிறப்புகள்
- சங்ககால அகத்திணை நூல்களில் ஒன்று.
- பரணர் வரலாறு கூறும் பாடல்களை அதிகம் காணப்படுகின்றன.
- முதல் கரு உரி போன்றவற்றில் உரி சிறப்பிடம் பெற்ற நூல்.
- சங்க கால நூல்களின் சிறப்பு கூறும் பழம் பாடலில் நல்ல குறுந்தொகை என சிறப்பிக்கப்படும் நூல்.
- வர்ணனை குறைவாகவும் உணர்வு அதிகமாகவும் காணப்படும் நூல்.
- உரைகளில் மிகுதியாக மேற்கோள் காட்டப்படும் நூல் இதுவாகும்.
- திருவிளையாடல் புராணங்களில் தழுவிய வரலாற்றுக்கு உற்றாக விளங்குவது.
இவ்வாறு பல சிறப்புக்கள் நிறைந்த நூலில் பண்டைய மக்களின் இல்வாழ்க்கை ஒழுக்கம் மகளிர் மாண்பு போன்ற விடயங்கள் பற்றியும் கூறும் சிறப்புடைய நூல் குறுந்தொகை ஆகும். இதன் மூலம் குறுந்தொகை பற்றி அறியலாம்.
You May Also Like: