அகவிலைப்படி என்றால் என்ன

akavilaipadi

அரசினுடைய நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியினை செய்பவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர். இவர்களின் பெரும்பணியை உணர்ந்த அரசு அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருவதனைக் காணலாம்.

அரச ஊழியர்களுக்கு வழங்கக் கூடிய சலுகைகள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்றால் போல் அறிவிக்கப்படும் சலுகைகள் மாறுபடும் என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.

குறிப்பாக இந்தியா முழுவதிலுமோ அல்லது தமிழகத்திலோ ஆண்டு தோறும் ஊதிய உயர்வு இந்திய அரசாலும் மாநில அரசுகளாலும் மாற்றி அமைக்கப்படும். அதில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை என்ற அடிப்படையில் விலைவாசி உயர்வு ஏற்ப அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகின்றது.

நாட்டில் இருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டு வரும்போது அந்த விலைவாசி உயர்வை தொழிலாளர்கள் சமாளிக்க வேண்டும் என்பதனை நோக்காக கொண்டு கொடுக்கப்படுவதே அகவிலைப்படியாகும்.

குறிப்பாக பணவீக்கம் அதிகமானால் பொருட்களின் விலை அதிகமாகி விடும். இதனால் தொழிலாளர்களால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. இதனைக் கருத்திற் கொண்டே அகவிலைப்படி வழங்கப்படுகின்றது.

அகவிலைப்படியானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் கணக்கிடப்பட்டு உயர்த்தி வழங்கப்படுகிறது. இது அடிப்படைச் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதமாகக் கணக்கிட்டு வழங்கப்படும். முதன் முதலாக பம்பாய் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அகவிலைப்படியை பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாலு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது குடும்ப ஓய்வூதியத்தவர்களுக்கும் பொருந்தும்.

பணியில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் 244 ரூபாய் முதல் அதிகபட்சமாக 3080 ரூபாய் வரை அகவிலைப்படி உயர்த்திக் கிடைக்கப்பெறும். அதேவேளை ஓய்வூதியத்தவர்களுக்கு குறைந்தபட்சம் 122 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1540 வரை கிடைக்கப்பெறும்.

அகவிலைப்படி என்பது

அகவிலைப்படி என்பதை விலைவாசி ஏற்றத்தை கணக்கில் கொண்டு ஊழியத்திற்கு அதிகமாக தரப்படக்கூடிய கூடுதல் தொகையாகும்.

அகவிலைப்படி வரலாறு

1917 இல் நடைபெற்ற முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் தொழிலாளர்களது சூழ்நிலை மற்றும் அவர்களது வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக இருந்தது. அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போர்க்கொடி எழுப்பப்பட்ட சூழ்நிலையில் முதன்முதலாக வழங்கப்பட்டது தான் பஞ்சப்படி எனக் கூறப்படும் அகவிலைப்படியாகும்.

இந்தியாவிலும் மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்ற வரலாறும் உண்டு. இந்தியாவில் 1929ல் ரயில்வே ஊழியர்கள் பஞ்சப்பட்டி பெற்றார்கள்.

அதுமட்டுமல்லாது இரண்டாம் உலகப் போரின் போது அனைத்து தொழிலாளர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் அகவிலைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பிருந்த பஞ்சப்படியை உணவு படி (Dear food allowance) என்றனர்.

1947 இல் பஞ்சப்படியை தீர்மானிப்பதற்காக விருதாச்சாரியார் கமிட்டி உருவாக்கப்பட்டது. குறைந்தபட்சம் சம்பளம் தரும் அரசு ஊழியர்களுக்கு உணவுப்படி வழங்கலாம் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

விடுதலைக்குப் பின்பு இரண்டு விதமான பஞ்சப்பாடி கொடுக்கப்பட்டு வந்தது. ஒன்று ஒரே மாதிரியான பஞ்சப்படியை அடிப்படைச் சம்பளத்தோடு கணக்கிட்டு வழங்குவது.

இரண்டாவது வேலைக்கு வந்த நாட்களுக்கு மட்டும் பஞ்சபடியாக வழங்குவது. நுகர்வோர் ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதன் விலைவாசிக்கு ஏற்ப பொருட்களின் விலை ஏறும் போதும், இறங்கும் போதும் பஞ்சப்படி கணக்கிடப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் அகவிலைப்படி நிர்ணயிக்கப்படுகின்றது.

You May Also Like:

இணையம் என்றால் என்ன

மின்மாற்றி என்றால் என்ன