இயேசு காவியத்தை இயற்றியவர் யார்

இயேசு காவியம்

இயேசு காவியத்தை இயற்றியவர் யார்கவிஞர் கண்ணதாசன்

உலகிலுள்ள பல்வேறு மதங்களும் தம்முடைய மதங்களுக்கென்று புனிதமான ஒவ்வொரு தலைவர்களை வைத்து வழிபடப்படுகின்றன.

கிறிஸ்தவ சமயம் இயேசு நாதரின் போதனைகளை வாழ்க்கை பாடமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பைபிள் புனித காவியம் கிறிஸ்தவ மக்களால் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகின்றன. இந்த பதிவில் நாம் இயேசு காவியம் மற்றும் அதனை எழுதிய கண்ணதாசன் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு

சிறுகூடல்பட்டி என்ற ஊரில் சாத்தப்ப செட்டியாருக்கு விசாலாட்சி ஆச்சியாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முத்தையா. முத்தையாவிற்கு மொத்தம் எட்டு சகோதரர்கள் ஆவார்.

பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு ஆசிரியர் பணியில் இருந்த போதே தனக்கு தானே கண்ணதாசன் என்ற புனை பெயரை மாற்றிக் கொண்டார்.

கண்ணதாசன் கம்பர் மற்றும் பாரதியாரின் செய்யுள்கள், பாடல்கள், உரைநடைகளில் அதிகளவு ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக காணப்பட்டார். கண்ணதாசனின் படைப்புக்களில் அர்த்தமுள்ள இந்து மதம் மற்றும் இயேசு காவியம் போன்ற படைப்புக்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கண்ணதாசன் 1968ல் இயற்றிய குழந்தைக்காக என்னும் படைப்பிற்காக சிறந்த வசனத்திற்கான தேசிய விருதும் 1980ல் இயற்றிய சேரமான் காதலி என்னும் படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றமையும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும்.

இயேசு காவியம் உருவாகிய வரலாறு

இயேசு காவியம் கண்ணதாசன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள “கலைக் காவிரி” என்ற அமைப்பினர் கண்ணதாசனிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த நூலினை உருவாக்கினார்.

இந்த நூலினை எழுதும் போது கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த பல இறைவியல் அறிஞர்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டு இந்த நூலினை எழுதினார்.

அதன் பின்னர் வேறு சில ஆய்வறிஞர்கள் ஒன்றாக கூடியிருந்த சபையில் எட்டு நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து அந்த காவியத்தில் உள்ள திருத்தங்கள் கண்டறிந்து சொல்ல கண்ணதாசன் அவற்றைச் சரி செய்து நூலினை முழுமைப்படுத்தினார்.

நூலின் உள்ளடக்கம் மற்றும் தொடர்புடைய அம்சங்கள்

இந்த நூலின் ஆரம்பத்தில் நூலாசிரியர் தன்னுடைய கருத்துக்களை “என்னுரை” யின் கீழ் குறிப்பிட்டு இருந்தார்.

இயேசுவின் வாழ்வியல், திருமுழுக்கு பெற்ற பின்னர் தன்னைத் தயார்ப்படுத்திய நிலை, இயேசு நாதருடைய பொது வாழ்வியல், அவர் இறுதியில் பெற்ற ஞானவழி என யாவும் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளன.

இயேசு காவியம் தலைப்பிற்கு ஏற்றாட் போல் முழுக்க முழுக்க இயேசு நாதரைக் காப்பிய நாயகனாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் 400 பக்கங்கள் உள்ளன.

இயேசு காவிய நூலின் முதற்பிரதி M.G.ராமச்சந்திரன் வாங்கியுள்ளார். இதுவரை இந்த நூல் ஆறு தடவைகள் பதிப்பு செய்யப்பட்டுள்ளதோடு மொத்தமாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இயேசுவின் படைப்பினைக் கூறும் புனித நூலான வளம் இயேசு காவியத்தை வாசித்து நாமும் வாழ்வில் வெற்றி பெறுவோம்.

You May Also Like:

தமிழ்நாட்டின் எலுமிச்சை நகரம்

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம்