மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் உயர்ந்த இலட்சியங்களை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். அந்தவகையில் தம்முடைய இலட்சியங்களை உண்மையாகவே தம் கண்முன் கொண்டு வர முயற்சி செய்பவர்களாகவே திகழ்கின்றனர்.
அந்தவகையில் நாம் இவ் உலகில் பல விதமான பொருட்களை காணக்கூடியவராக உள்ளோம் ஆனால் இவை அனைத்தும் உண்மையில் இருக்கின்றதா அல்லது தான் முன்னர் கண்டதை போல் இருக்கின்றதா என்பதனை அறிந்து கொள்வதற்கு இலட்சியவாதமானது துணைபுரிகின்றது.
இலட்சியவாதம் என்றால் என்ன
இலட்சியவாதம் என்பது ஒவ்வொரு மனிதனும் தான் அடைய நினைக்கும் இலட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதாகும். இந்த இலட்சியவாதமானது மனதோடு தொடர்புற்ற ஒன்றாகும்.
மனதில் எழும் சிந்தனைகளை குவியப்படுத்தி அதனூடாக உடலினை செயற்படுத்துகின்ற வழிமுறையாக கொள்ளலாம். தனது வாழ்வு பற்றிய ஒரு மேலான இலட்சியத்தை கொண்டிருப்பதனையும் இலட்சியவாதமாக கருதலாம்.
இலட்சியவாதத்தின் நோக்கம்
இலட்சியவாதத்தின் நோக்கமானது நம்பிக்கைகள், மதிப்புக்கள் மற்றும் மனித ஆளுமைகள் ஊடாக எவ்வாறு ஒரு சமூகத்தினை உருவாக்குவது என்பதை நோக்காக கொண்டு செயற்படுகின்றது. இங்கு மனிதனுடைய மனதிற்கே பிராதானமாக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
இலட்சியவாதத்திற்கும் மனதிற்குமிடையிலான தொடர்பு
இலட்சியவாதத்திற்கும் மனதிற்குமிடையிலான தொடர்பானது ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகவே காணப்படுகின்றது. அதாவது இலட்சியவாதமானது மனதிற்கு முன்னுரிமை அளித்து மனம் கூறுவதையே உண்மை என்று நம்புகின்றது.
ஒரு மனிதனானவன் பல்வேறு சிந்தனைகள், யோசனைகள், என பல எண்ணங்களை கொண்டுள்ளதோடு இவை அனைத்தையும் மனமே கட்டுப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது எனலாம்.
இலட்சியவாதத்தில் மனதினுடைய செல்வாக்கே வேரூன்றி காணப்படுகின்றது. உலகமானது மனதின் சக்தியின் வெளிப்பாடேயாகும். அதன் காரணமாக இப் பிரபஞ்சத்தினை மனதின் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறே மனதிற்கும் இலட்சியவாதத்திற்குமான தொடர்பினை விளங்கிக் கொள்ள முடிகிறது.
கல்வியில் இலட்சியவாதத்தின் செல்வாக்கு
இலட்சியவாதமானது கல்வியில் உயர்ந்த சிந்தனையினை உடையதாக காணப்படுவதோடு கல்வியானது மரபுவழியில் இருந்து செல்வாக்கு செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது பற்றி அக்கால தத்துவவியலாளர்களான சோக்ரடீஸ், அரிஸ்டோட்டில், பிளட்டோ போன்றோர்கள் இதனை தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதாவது இப் பிரபஞ்சமானது ஆன்மாவின் ஊற்று என குறிப்பிட்டுள்ளதோடு மனதிலே எழும் சிந்தனைகளை குவியப்படுத்தி அதனூடாக அறிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஏனெனில் மனமானது இலட்சியவாதத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகின்றது.
பிளட்டோ இலட்சியவாதத்தில் கல்வியினை பின்வருமாறு குறிப்பிடுகின்றார். அதாவது கல்வியானது மனிதனை மாண்புமிக்கவர்களாக ஆக்ககூடியது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சிந்தனைகளை குவிக்கும் மையமாக கல்வி காணப்படுவதோடு சிறந்த முறையில் மனதை ஒருநிலைப்படுத்துவதன் ஊடாக சிறந்த கல்வியை அடைந்து கொள்ள இலட்சியவாதமானது வழியமைத்து தருகின்றது.
ஒரு மனிதனானவன் தனக்குரிய ஆளுமைப்பண்புகளை வளர்த்துக் கொண்டு நாட்டின் சிறந்த பிரஜையாக திகழவேண்டும் என்பன பற்றி இலட்சியவாதமானது குறிப்பிட்டுள்ளதோடு மட்டுமல்லாது பிளட்டோ தனது இலட்சியவாத தத்துவத்தில் கல்வியானது அரசுடைய கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட வேண்டும் என்பதன் ஊடாகவும் கல்விக்கும் இலட்சியவாதத்திற்குமான தொடர்பின் தன்மையினை விளக்கி கூறியுள்ளார்.
அதாவது கல்வியில் இலட்சியவாதத்தின் நோக்கமானது தன்னை உணர்ந்து கொள்வதன் மூலமாக ஆன்மீக ரீதியான விடயங்களை பேணுவதாகும். மேலும் இலட்சியவாத கல்வியானது சமூக நலன், நல்வாழ்வை மையப்படுத்தியதாகவே காணப்பட வேண்டும் என்பதனையும் சுட்டிக்காட்டி உள்ளது.
எனவேதான் இலட்சியவாதமானது கல்வி முறையில் அதிகளவான தாக்கத்தினை செலுத்துவதோடு மட்டுமல்லாது அனைவர்க்கும் சிறந்த கல்வியை வழங்குதலையும் நோக்காக கொண்டு செயற்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.
You May Also Like: