ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன

orunginaintha kalvi in tamil

கல்வி திட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி முறைமையானது மிக முக்கியமானதொரு கல்வி திட்டமாக காணப்படுகின்றது. ஒருங்கிணைந்த கல்வி என்பது பள்ளி கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும்.

ஒருங்கிணைந்த கல்வி என்றால் என்ன

ஒருங்கிணைந்த கல்வி என்பது சமூகத்தில் காணப்படும் சிறப்பு தேவையுடைய குழந்தைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கல்வி முறையாகும். இந்த ஒருங்கிணைந்த கல்வி முறைமையானது பன்முகத்தன்மை கொண்ட ஓர் கல்வி முறையாக காணப்படுகிறது.

இக்கல்வி முறைமையானது மாணவர்களிடையே சிறந்த மனப்பான்மையை ஊக்குவிக்கின்றது. கல்வி கற்க இயலாத மாணவர்களை கல்வி ரீதியில் ஊக்கப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டமானது துணைபுரிகின்றது.

ஒருங்கிணைந்த கல்வி முறையின் வரையறை

இந்திய கல்வி ஆணையகம்

ஊனமுற்ற குழந்தைகளின் கல்வி பொதுக் கல்வி முறையின் பிரிக்க முடியாத பகுதியாக காணப்பட வேண்டும் என்பதனை ஒருங்கிணைந்த கல்வியாக கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த கல்வியின் நோக்கங்கள்

ஒருங்கிணைந்த கல்வி மூலம் குழந்தைகளின் குறைபாடுகளை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிந்து கொள்வதற்கு இந்த கல்வி திட்டம் துணைபுரிகின்றது.

சவால்களை எதிர் கொள்ளவும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்துக் கொள்வதனையும் ஒருங்கிணைந்த கல்வியானது நோக்கமாக கொண்டு செயற்படுகின்றது.

மாணவர்கள் தமது திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் சம வாய்ப்புக்களை அனைவரும் பெற்றுக் கொள்ளவும் வழியமைத்து தருகின்றது.

சிறப்பு தேவையுடைய குழந்தைகளின் திறன்கள் மற்றும் சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக தமது திறன்களை பலப்படுத்தல், கல்வி கற்பதில் சிறந்த பங்கேற்பினை வழங்குவதனையும் நோக்காக கொண்டு காணப்படல்.

கலாச்சார மத வேறுபாடுகளை இல்லாமல் செய்து அனைவருக்கும் சமமான கல்வியினை வழங்குதல்.

எவ்வகையான கற்போரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் நெகிழ்வுத் தன்மையுடையதாக இக்கல்வி முறையானது காணப்படுகின்றது.

ஒருங்கிணைந்த கல்வியின் சிறப்பியல்புகள்

ஒருங்கிணைந்த கல்வியானது அனைவரும் கற்கக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. மேலும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளும் கல்வியினை கற்றுக் கொள்ள உதவுகிறது.

ஒருங்கிணைந்த கல்வியானது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குகிறது. பாகுபாடற்ற மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.

தனிப்பட்ட ரீதியில் அனுபவத்தை பெற்றுக் கொள்ளவும், ஊனமுற்றோர் சமூகத்திற்கு மத்தியில் சிறப்பாக வாழ்வதற்கும் பரந்த நோக்கங்களை வழங்குகின்றது.

ஒருங்கிணைந்த கல்வி முறைமையானது ஊனமுற்றோர் மற்றும் ஊனமுற்றோரல்லாத குழந்தைகளையும் உள்ளடக்கிய கல்வி முறையாக காணப்படுகின்றது சிறப்பிற்குரியதாகும். கற்றலை எளிதாக்கவும், சமூதாயத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இக்கல்வி முறைமையானது காணப்படுகின்றது.

ஒருங்கிணைந்த கல்வியின் ஊடாக மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்

ஒருங்கிணைந்த கல்வியினூடாக இணைக்கப்பட்ட மற்றும் பொருத்தமான கல்வி கிடைக்கப் பெறுகின்றது. இதன் காரணமாக மாணவர்களுடைய கல்வி ஈடுபாடானது அதிகரித்து காணப்படும்.

ஒருங்கிணைந்த கற்றலில் ஊடாக மாணவர்களுக்கு விமர்சன சிந்தனை, சிக்கலை தீர்த்தல், குழுப்பணி போன்ற திறன்களை தன்னகத்தே வளர்த்து கொள்ள முடிகிறது.

மாணவர்கள் ஆக்கபூர்வமாக சிந்தித்தல் மற்றும் புதிய யோசனைகள் மற்றும் வளர்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும் இக்கல்வி முறையானது பாரிய பங்களிப்பினை வழங்குகின்றது.

மாணவர்கள் பல பாடங்களை கற்பதன் ஊடாக வெவ்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள இக் கல்வி முறையானது உதவுகின்றது.

மாணவர்களிடையே நேர்மறையான கற்றல் சூழல்களை உருவாக்குவதினூடாக நேர்மறையான சிந்தனையில் இக்கல்வி திட்டமானது பங்களிப்பு செய்கின்றது.

எனவேதான் ஒருங்கிணைந்த கல்வியானது மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்குகின்றதோடு சிறப்பு தேவையுடைய மாணவர்கள் தங்களது கற்றலினை மேற்கொள்ளவும் துணைபுரிகின்றது.

You May Also Like:

உடற்கல்வி என்றால் என்ன

வாழ்நாள் நீடித்த கல்வி என்றால் என்ன