கலாச்சார மூலதனம் என்றால் என்ன

கலாச்சார மூலதனமானது இன்று பிரபல்யம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. இதனூடாக ஒருவரின் கலாச்சார ரீதியான திறமையை வெளிக் கொண்டு வர முடியும்.

கலாச்சார மூலதனம் என்றால் என்ன

கலாச்சார மூலதனம் என்பது யாதெனில் அறிவு, நடத்தை, திறமை போன்றவற்றை உள்ளடக்கியதாகவே கலாச்சார மூலதனம் காணப்படுகின்றது. இது ஒருவரின் கலாச்சார திறமையை நிரூபித்து காட்டுவதன் மூலம் ஒருவருடைய சமூக நிலையினை அறிவதற்கு கலாச்சார மூலதனமானது துணைபுரிகின்றது.

சமுதாயத்தில் ஒரு சாதகமான சூழலை பெறும் போது அவர்களுக்கு நன்மை தரும் நபருடைய பண்புகளை உள்ளடக்கியதாக காணப்படும். சமூக ரீதியில் பல முன்னேற்றங்களை அடைவதற்கு கலாச்சார மூலதனம் காரணமாக அமைகின்றது.

கலாச்சார மூலதனத்தின் வகைகள்

போர்டியூ என்ற அறிஞர் கலாச்சார மூலதனத்தை மூன்று வகைகளாக குறிப்பிடுகின்றார். அவற்றை பின்வருமாறு நோக்க முடியும்.

குறிக்கோள் கலாச்சார மூலதனம்

குறிக்கோள் கலாச்சார மூலதனம் என்பது ஒரு நபரின் பண்புகளை பொருளாதார நலனுக்காக பரிமாறிக் கொள்வதோடு அவர்களுக்கு அந்தஷ்த்தினை வழங்கும் ஒரு பொருளை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும்.

குறிக்கோள் கலாச்சார மூலதனத்தினூடாக ஒரு நபருடைய சமுதாயம் பற்றிய அறிவை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களுடைய சமுதாய விடயங்கள் பற்றிய தெளிவினையும் பெற்று கொள்ள முடியும் என்றும் போர்டியூ குறிப்பிடுகின்றார்.

ஒருங்கிணைந்த கலாச்சார மூலதனம்

ஒருங்கிணைந்த கலாச்சார மூலதனம் என்பது சமூக மயமாக்கல் மற்றும் பாரம்பரியத்தின் செயல்முறைகள் ஊடாக பெறும் அறிவு வகையாகும். கலாச்சார மூலதனத்தை ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பகிர முடியாது.

ஒருங்கிணைந்த கலாச்சார மூலதனமானது ஒரு நபருடைய பழக்கவழக்கத்தினூடாக பெறப்படுகின்றது. இதனூடாக ஆளுமை, சிந்தனை, திறன் போன்றன வளர்ச்சியடைந்து காணப்படும்.

நிறுவனமயமாக்கப்பட்ட கலாச்சார மூலதனம்

இது கலாச்சார மூலதனத்தின் ஊடாக அரசியல் நிறுவனங்களின் அங்கீகாரத்துடன் தொடர்புடையதாகும். இவ் நிறுவனமயமாக்கப்பட்ட கலாச்சார மூலதனமானது சமூக ரீதியில் சிறந்த அந்தஸ்த்தினை வழங்க கூடியதாகும்.

கல்வியில் கலாச்சார மூலதனத்தின் தாக்கம்

கல்வி ரீதியான விடயங்களில் கலாச்சார மூலதனமானது பாரிய அளவில் பங்காற்றுகின்றது. அதாவது தேர்வில் உயர் நிலையை அடைவதற்கு கலாச்சார மூலதனமானது ஊக்குவிக்கின்றது. கல்வி கற்பவர்கள் சமூக மற்றும் ஏனைய அமைப்புக்களில் தீவிரமாக பங்கேற்று முன்னேறுவதற்கு வழியமைக்கின்றது.

ஒரு கலாச்சாரத்திலிருந்து கற்பவர்கள் பெற்றுக் கொள்ளும் நெறிகள் மற்றும் திறன்களானவை ஏனையவர்கள் அதனை புரிந்து கொண்டு முன்னேறுவதற்கு வழியமைக்கின்றது. மேலும் கற்பிப்பவரின் கலாச்சார அனுபவங்கள் கற்பிக்கப்படுகின்ற தலைப்புடன் தொடர்பினை ஏற்படுத்தி கற்பதற்கு துணை செய்கின்றது.

கலாச்சார மூலதனமானது கற்பவர்கள் தங்கள் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் விதிமுறைகளை தியாகம் செய்யாமல் புதிய விடயங்களை கற்றுக் கொண்டு புதிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு உதவுகின்றது.

மேலும் கற்பவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்தி கொள்வதற்கும் துணைபுரிகின்றது. இதனூடாக கல்வியில் திறம்பட செயற்பட்டு தங்களுடைய இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து கொள்ள கலாச்சார மூலதனமானது உதவுகின்றது.

கலாச்சார மூலதனமானது வினைத்திறனான கல்வி செயற்பாடுகளுக்கு வழிவகுப்பதோடு வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை பெற்று தனது இலக்குகளை அடைவதற்கும் இவ் கலாச்சார மூலதனமானது துணைபுரிகின்றது.

நவீன தாராளமயமாக்க கல்வி கொள்கைகளோடு கலாச்சார மூலதனமானது மிகவும் நெருங்கிய தொடர்பினை கொண்டமைந்து காணப்படுகின்றது.

எனவேதான் கலாச்சார மூலதனத்தினூடாக ஒருவருடைய சமூக நிலையினை அறிந்து சிறப்புற செயற்படவும் தங்களது திறமையினை வளர்த்துக் கொண்டு தமது இலக்குகளை நோக்கி செல்வதற்கும் வழியமைத்து தருகின்றது.

You May Also Like:

நேர்முக வர்ணனை என்றால் என்ன

நற்செயல் என்றால் என்ன