கலாம் அவர்களுக்கு எந்த இசைக்கருவியை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது | வீணை |
தமிழ் நாட்டில் இராமேஸ்வரத்தில் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தார். இவருடைய தாய் ஆஷியம்மா தந்தை ஜைனுல்லாப்தீன் ஆவார். இவருக்கு நான்கு சகோதரர்கள் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் இருந்து கஷ்டங்களை அனுபவித்து வளர்ந்து வந்தார்.
கல்வியில் மிகுந்த ஆர்வம் உள்ளவராகவும் அக்கறை உடையவராகவும் காணப்பட்டார். வறுமையின் காரணமாக பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பள்ளி முடிந்ததும் செய்தித்தாள்கள் விநியோகித்து அதன் மூலம் வரும் வருமானத்தினை குடும்பத்திற்கு வழங்கினார். இவரது முழுப்பெயர் ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம் என்பதாகும்.
கல்வி மற்றும் தொழில்
ஆரம்பக் கல்வியை திருச்சிராப்பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து தூய வளனார் கல்லூரியில் இணைந்து பின்னர் பொறியியலில் ஆர்வம் ஏற்பட சென்னை எம்.ஐ.டி யில் சேர்ந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
இவருடைய ஆரம்பப்பணி சிறிய இராணுவ ஹெலிகப்டரை அமைப்பதில் இருந்து ஆரம்பமானது. இவருடைய முக்கியமான சாதனைகளுள் Launcher 1969ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் முதன் முதலாக ஏவப்பட்டமை மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து விண்வெளித் துறையில் பல வகைப்பட்ட ஏவுகணைகள் தயாரிப்பதில் அதிகளவு அக்கறை செலுத்தியதோடு செயற்படுத்தவும் செய்தார்.
அரசியல் பயணம்
அப்துல்கலாம் 2002ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பதினோராவது குடியரசு தலைவராக பதவி ஏற்று 2007 வரை பதவி வகித்தார். விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் கலாம் இருந்துள்ளதால் இவர் மீது பல்வேறு வகையிலான சர்ச்சைகளும் பொய்யான புகார்களும் பல தனிப்பட்ட நபர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
கலாமின் திறமைகளும் இசைக்கலையும்
கலாம் 2011ல் “ நான் என்னைக் கொடுக்க முடியும்” எனும் கருப்பொருளின் கீழ் ஊழல் அற்ற நாட்டை உருவாக்குவதற்கான திட்டத்தை உருவாக்கினார். இதன் மூலம் நாட்டிற்கு பல சேவைகளை வழங்கினார். கலாம் கவிதை மற்றும் நூல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக காணப்பட்டார்.
அதுமட்டுமல்லாது தென்னிந்தியாவின் பிரபல இசைக்கருவியான கம்பியினால் ஆக்கப்படும் வீணை வாசிப்பதில் அதிகளவு அக்கறையும் விருப்பமும் காட்டினார்.
இவரது இசைத்திறமையின் விளைவாக இரண்டு ஆண்டுகள் ஒரு சங்கீதத் தொலைக்காட்சி ஒன்றில் “Youth icon” எனும் விருதிற்கு கலாமின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
உளவியலின் மூலம் மிகவும் புத்திசாலியாக சோர்ந்து போயிருந்த ஒரு சிறுவனிடம் ஆலோசனை வழங்கி அந்த சிறுவனை தெளிவுபடுத்தியமையால் அச்சிறுவன் கலாமின் பெயரையே தன்னுடைய பெயராக மாற்றிக் கொண்டார்.
கலாம் பெற்ற விருதுகளும் சிறப்பு கௌரவிப்புக்களும்
அப்துல்கலாம் பத்மபூஷண் விருது, பாரத ரத்னா விருது, அறிவியல் டாக்டர் பட்டம், சட்டங்களின் டாக்டர் பட்டம், பொறியியல் டாக்டர் பட்டம், ஹீவர் மெடல், கிங் சார்லஸ்II பதக்கம், ராமானுஜன் விருது, வீர் சவர்கார் விருது, தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது, போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, வெளிச்சத் தீப்பொறிகள், திட்டம் இந்தியா, எனது வானின் ஞானச்சுடர்கள் போன்றன கலாம் எழுதிய நூல்கள் ஆகும். குறிப்பாக மாணவர்கள், மற்றும் இளைஞர் யுவதிகளை எழுச்சியூட்டக் கூடிய உணர்ச்சி மிக்க பொன்மொழிகள் பலவற்றைக் கூறியுள்ளார்.
அப்துல்கலாம் 2015ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவு கூறிக் கொண்டிருந்த நிலையில் மயக்கமுற்று சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
You May Also Like: