குழந்தைகள் தினம் பேச்சு போட்டி

children's day speech in tamil

அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். குழந்தைகளின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலம் என்ற அடிப்படையில் இன்று குழந்தைகள் தினம் பற்றியே பேசப்போகின்றேன்.

குழந்தைகளின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதாவது குழந்தைகள் தினமானது குழந்தைகளை வலுப்படுத்தவும், அவர்களது உரிமைகளை மேம்படுத்தவும், குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை தவிர்க்கவும் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றியமைக்கவும் மிக முக்கியம் வாய்ந்ததென்றாகவே குழந்தைகள் தினமானது காணப்படுகின்றது.

அந்த வகையில் குழந்தைகளின் நலனை கருத்திற்கொண்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20ம் திகதி சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகளுக்கான கடமை மற்றும் பொறுப்புக்களை உணர்ந்து அவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க எம் அனைவரையும் தூண்டக்கூடியதொரு நாளாகவே குழந்தைகள் தின நாளானது அமைந்துள்ளது.

இந்த குழந்தைகள் தினமானது குழந்தைகளுக்கான நலன்களை அடிப்படையாகக்கொண்டு பல பொதுநல திட்டங்களை மேற்கொள்ளகூடிய ஒரு நாளாகும்.

குழந்தைகளின் வளர்ச்சியிலும் அவர்களுடைய எண்ணங்களிலும் சிறப்பான மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறப்பு மிக்க நாளே குழந்தைகள் தினமாகும்.

குழந்தைகள் தின கொண்டாட்டம்

குழந்தைகள் தினக் கொண்டாட்டமானது ஒவ்வொரு நாட்டிலும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாளாகும். இந்நாளில் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் காணப்படுவர்.

குழந்தைகள் தின நாளில் பள்ளிகளில் உடல், மன, ஒழுக்கம் என அனைத்து விடயங்களிலும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பல போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

குழந்தைகளுக்கான பாடல் போட்டி, நடனம், வரைதல், கதை சொல்லுதல் என பல்வேறு போட்டிகள் ஆசிரியர்களால் நடாத்தப்படுவதோடு குழந்தைகளுக்கு பல பரிசில்களும் வழங்கி வைக்கப்படும்.

இந்நாளில் குழந்தைகள் பள்ளியில் தனக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து வந்து பல கலாச்சார நிகழ்வுகளை நடாத்துவர். பாடசாலைகள் அனைத்தும் மிகவும் கோலாகலமாக பலூன்கள், மலர்கள், ஓவியங்கள் என அலங்கரிக்கப்பட்டு காணப்படும்.

குழந்தைகள் அனைவரும் தங்களுடைய உரிமைகளை சிறப்பாக பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாளாகவே குழந்தைகள் தினமானது அமைந்துள்ளதோடு வானொலி, தொலைக்காட்சி என அனைத்திலும் குழந்தைகளின் வேடிக்கை நிகழ்வுகள் மற்றும் குழந்தைகள் பற்றிய நிகழ்ச்சிகளே நடைபெறும்.

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளும் குழந்தைகள் தினமும்

இந்தியாவில் நவம்பர் 14ம் திகதி ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்த தினத்தினையே குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகின்றனர்.

நேரு அவர்கள் குழந்தைகள் மீது அளவு கடந்த பாசத்தினை கொண்டவராக காணப்பட்டார்.

இதன் காரணமாக குழந்தைகளால் “நேரு மாமா” என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு மிக்கவராகவும் நேரு அவர்கள் திகழ்ந்தார்.

இவர் தலைசிறந்த பிரமுகராகவும், தேசிய தலைவராகவும் இருந்த போதும் குழந்தைகளை நேசிக்க கூடியவராகவும் அவர்களுடன் தனது நேரத்தை செலவிடக்கூடியவராகவும் திகழ்ந்தார்.

குழந்தைகளே நாட்டின் மதிப்பு மிக்க சொத்து அவர்களே நாளைய நம்பிக்கை என்ற அடிப்படையில் குழந்தைகளின் நிலை குறித்து அதிகம் கவனம் செலுத்தினார்.

இவரது பிறந்த தினத்திலேயே இந்தியாவின் குழந்தைகள் தினம் கொண்டாட முடிவெடுக்கப்பட்டு இன்றும் இந்திய மக்கள் குழந்தைகள் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இவர் குழந்தைகளை நாட்டின் பலமாகவும் சமூகத்தின் அடித்தளமாகவும் கருதியதோடு குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் எதிர்கால நலன்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டே பல நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இவ்வாறான குழந்தைகளின் நலனில் அதிக ஈடுபாடும் அக்கறையும் கொண்டவருமான நேரு அவர்களின் பிறந்த தினத்தில் குழந்தைகள் தினமானது கொண்டாடப்படுவது சிறப்பிற்குரியதாகும்.

இன்றைய குழந்தைகளே நாளையே எதிர்காலம் என்ற வகையில் குழந்தை தொழிலாளர் மற்றும் பிற சமூக சுரண்டலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.

You May Also Like:

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் கட்டுரை