அனைவருடைய வாழ்விலும் ஏதோவொரு வகையில் சலனம், சஞ்சலமானது ஏற்படும் என்பதே உண்மையாகும். மனக் குழப்பமின்றி வாழ்தல் என்பது இன்றைய கால கட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றது.
சலனம் என்றால் என்ன
சலனம் என்பது ஒரு விடயத்தில் நிம்மதியில்லாத ஒரு நிலை காணப்படுவதனை குறிக்கின்றது. அதாவது பயம், ஆசை காரணமாக நிம்மதியற்றதாக காணப்படும் நிலமையாகும். அதாவது கவலையான நிலையினை சலனமாக கொள்ளலாம். வாழ்வில் நிலை தடுமாறிய நிலையினையே சலனமாக கூற முடியும்.
சலனமில்லாத வாழ்க்கையினை வாழ்வதற்கான வழிமுறைகள்
ஒரு மனிதனானவன் தனது வாழ்க்கைப் பாதையில் சலனமின்றி வாழ்வதற்கு மன அமைதி மற்றும் நிதானத்தினை மேற்கொள்ள வேண்டும். இதனூடாகவே சலனமில்லாத வாழ்க்கையினை வாழ முடியும்.
உறவுகள், குடும்பங்கள், நண்பர்கள் என அனைவரும் மதிக்கும் வண்ணம் தாம் வாழ்க்கையினை வாழும் போதே அது சலனமில்லாத ஒரு வாழ்வாக காணப்படுகின்றது.
மனிதனானவன் தன்னை தானே உணர்ந்து உணர்வுகளை மதித்து நடத்தலின் ஊடாக சிறந்த வாழ்க்கையினை வாழ முடியும்.
வாழ்க்கையில் துன்பம், கவலைகள் எம்மை ஆட் கொள்கின்ற போது அதனில் இருந்து மீண்டு அதனை புரிந்து கொண்டு வாழும் போதே சலனமில்லாத வாழ்வாக காணப்படும்.
நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நன்முயற்சி போன்றவை ஒருவர் தனது வாழ்க்கையினை சிறந்த முறையில் வாழ்வதற்கு உதவுகின்றது.
இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழும் மனப்பான்மையினை தன்னகத்தே வளர்த்துக் கொள்ளல்.
பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தினை அதிகப்படுத்துதல்.
உங்களை நீங்களே முதலில் நேசிக்க கற்றுக் கொள்ளல் வேண்டும்.
இலக்கினை அடைவதில் தெளிவாக இருப்பதோடு அதனை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுதல்.
எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்தல்.
தோல்விகளை கண்டு சலனமடையாமல் வாழ்க்கையின் படிப்பினையாக எடுத்துக் கொண்டு செயற்படல்.
எந்த காரணத்திற்காகவும் சுய மரியாதையை இழக்காது செயற்படல்.
சலனத்தினால் ஏற்படும் விளைவுகள்
சலனமானது அல்லது சஞ்சலமானது அதிகமாகின்ற போது எம்மால் ஒரு செயலில் முழுமையாக கவனம் செலுத்தி அந்த செயலினை மேற்கொள்ள முடியாத ஒரு சூழலே காணப்படும்.
எப்பொழுதும் எமக்குள் பதட்டமான ஒரு தன்மையே இருந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக எவ்வித செயற்பாட்டினை மேற்கொள்வதிலும் சோர்வான தன்மை காணப்படும்.
மன உளைச்சலினை ஏற்படுத்துகிறது. அதாவது அதிக சஞ்சலமானது மன அழுத்தத்திற்கு எம்மை ஆட்படுத்துகின்றது. இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக அதிக கவலை ஏற்பட்டு மன ரீதியான பிரச்சினைகளினால் ஆட்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் உளவியல் ரீதியான பாதிப்பினை எதிர் கொள்கின்றனர்.
தனிமையில் அதிகமாக காணப்படுவர். அதாவது சலனமானது தனிமை உணர்வினை ஏற்படுத்துவதோடு மாத்திரமல்லாது ஏனையவர்களுடன் சேர்ந்து இருப்பதனையும் விட்டு விலகி காணப்படுகின்றனர். அதாவது குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் விட்டு தனிமையான ஒரு சூழலில் வாழக் கூடியவர்களாக இருப்பர்.
இன்றைய கால கட்டத்தில் சஞ்சலம்
இன்றைய சூழலில் பல்வேறு செயற்பாடுகளின் காரணமாக சஞ்சலமானது ஏற்படுகின்றது. அதாவது சஞ்சலத்தினால் இன்று பலர் நிம்மதி இழந்து காணப்படுகின்றனர். எவ்வளவு தான் பணம் இருந்தாலும் இன்று வாழ்க்கையினை தொலைத்தே காணப்படுகிறார்கள்.
ஏனெனில் இன்று நவீன சாதனங்கள் மற்றும் நவீன வழிமுறைகளின் ஊடாக வாழ்க்கையினை சலனமில்லாது வாழ்வதை விட்டு விட்டு கைபேசி மற்றும் பல்வேறு நிம்மதியை தொலைக்கும் விடயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர்.
ஆரம்ப காலங்களை போன்று இயற்கையை ரசித்தல், புத்தகம் வாசித்தல், மனதிற்கு பிடித்தமான விடயங்களை மேற்கொள்ளல் போன்ற பல நடவடிக்கைகள் இன்று குறைந்தே காணப்படுகின்றது. சஞ்சலமில்லா வாழ்க்கையை வாழ்வதற்கு நிம்மதியான வாழ்வு அவசியமானதாகும்.
You May Also Like: