சிந்துக்குத் தந்தை என அழைக்கப்பட்டவர்

சிந்துக்குத் தந்தை யார்

சிந்துக்கு தந்தை என அழைக்கப்படுபவர் மஹாகவி பாரதியாரே ஆவார். இவருக்கு இந்த சிறப்பு பெயரை பாரதிதாசனே வழங்கினார்.

மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாறு

பிறப்பு

மஹாகவி பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டய புரத்தில் சின்ன சுவாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மையாருக்கு 1882 மார்கழி 11ம் திகதி மகனாக பிறந்தார்.

இவரது இயற்பெயர் சுப்பிரமணியம் ஆகும். இவருடைய 5 வயதிலேயே அவருடைய தாயார் காலமானார்.

இவருக்கு 11 வயது இருக்கும் போது இவரது கவிபாடும் ஆற்றல் கண்டு எட்டயபுர மன்னன் அவையில் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவரது பெயர் சுப்பிரமணிய பாரதி ஆகும்.

பாரதியாரின் திருமண வாழ்க்கை

பாரதியார் பள்ளியில் கற்றுக் கொண்டிருக்கும் பொழுதே 1897ம் ஆண்டு செல்லம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தந்தையின் இறப்பிற்கு பின் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பின்னர் எட்டாயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.

பாரதியாரின் இலக்கிய பணி

தாய் மொழியான தமிழ் மீது மிகுந்த பற்றுடையவராக பாரதியார் காணப்பட்டார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் தனி புலமை பெற்று விளங்கினார்.

மேலும் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப் பெற்றன. மேற்குறிப்பிட்ட வகையில் பாரதியாரின் இலக்கிய பணியானது அமைந்துள்ளது.

இறப்பு

பாரதியார் 1921ம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்த சாரதி கோவிலுக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயத்திற்கு உள்ளாகி நோய்வாய்ப்பட்டார். பின்பு 1921 செப்டம்பர் 11ம் திகதி தனது 39வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார் எனலாம்.

பாரதியாரை சிந்துக்கு தந்தை என அழைத்தமைக்கான காரணங்கள்

பாரதியார் ஆன்மீகம் காதல் சார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த பாடல் வகையான சிந்துவை முதன் முதலில் சமூகம், தேசியத்தை பாடவும் முன்னெடுத்து செல்வதினூடாக சிந்துப்பாவிற்கு மறுமலர்ச்சியை உருவாக்கினார்.

மேலும் முழுக்க முழுக்க சிந்துப்பாவினை வைத்தே ஒரு காவியத்தை தமிழில் இயற்றினார். அதுவே பாஞ்சாலி சபதமாகும். இது ஒரு புதுமையான முயற்சியாக காணப்பட்டது.

எந்தவித உணர்வுகளையும் சிந்துப்பாவில் திறம்பட வெளிப்படுத்த முடியும் என்பதனை தமிழில் முதலில் மெய்ப்பித்த கவிஞரும் பாரதியாரே ஆவார்.

இவ்வாறான காரணங்களினால் பாரதிதாசன் பாரதியாரை சிந்துக்கு தந்தை என்ற சிறப்பு பெயரினால் அழைத்தார்.

விடுதலை போராட்டத்தில் பாரதியின் பங்கு

சுதந்திர போரில் பாரதியின் பாடல்களானவை உணர்ச்சி வெள்ளமாய், சுதந்திர கலையாய் தமிழ் நாட்டை வீரு கொள்ளச் செய்தது எனலாம்.

பாரதியார் இந்திய பத்திரிகையின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல கட்டுரைகளை எழுதினார்.

தமிழ் நாட்டில் பலத்த ஆதரவு கண்ட பிரிட்டிஸ் ஆட்சியானது இந்திய பத்திரிகைக்கு தடை விதித்து பாரதியாரை சிறையிலும் அடைத்தனர். விடுதலை போராட்ட காலத்தில் பல்வேறு தேசிய உணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதன் காரணத்தினால் தேசிய கவியாக அனைவராலும் போற்றப்பட்டார்.

மேலும் பாரதியார் சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன் பாட்டின் மூலமாக சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தினார்.

பாரதியின் சிறப்பு

கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞராக பாரதியார் காணப்படுகின்றார். பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம் ஆகும்.

பாரதியார் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், அரபு, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் புலமை பெற்று காணப்பட்டார். மேலும் வால்ட்விட்மன் சாயலில் வசனக் கவிதை எழுதியவர் என்ற சிறப்பிற்குரியவராகவும் பாரதியாரே காணப்பட்டார்.

எனவேதான் பாரதியாரின் பெருமை இன்று அனைவராலும் பேசப்படக் கூடியதொன்றாக காணப்படுகின்றது.

You May Also Like:

மரபுக்கவிதை தோற்றம் வளர்ச்சி கட்டுரை

தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை