உலகின் மகத்தான பணிகளுள் சிறப்பான பணியாக காணப்படுவது செவிலியர் பணியாகும். மருத்துவ உலகின் உயிர்நாடியாக காணப்படும் செவிலியர்கள் வணக்கத்திற்குரியவர்களாவர்.
செவிலியர் பணி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- செவிலியர் தின வரலாறு
- செவிலியரிடம் காணப்படவேண்டிய பண்புகள்
- செவிலியரின் கடமைகள்
- முடிவுரை
முன்னுரை
வாழ்க்கையில் ஏற்படும் சிறிய தடங்கல்களுக்கு எல்லாம் சோர்ந்து எடுத்த காரியத்தை கைவிட்டு விடும் பல மானிடர்களுக்கு மத்தியில், எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகளிலும் துவண்டு விடாமல் பணியாற்றும் பணியாளர்கள் செவிலியர்கள் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு அரும்பணி ஆற்றும் செவிலியர்களை பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.
செவிலியர் தின வரலாறு
1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் இடம்பெற்றது. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. இறக்கும் தருவாயில் பலர் முனகலுடன் இருந்தனர்.
அந்த ராணுவ மருத்துவமனைக்கு 38 செவிலியருடன் சென்றார் பிளாரன்ஸ். வசதிக்குறைவுகள் அங்கு காணப்பட்டாலும் தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை வழங்கினார்.
உயிருக்குப் போராடிய முழு படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதி மற்றும் நிறைந்த அன்பிலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.
தங்களைக் காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் நைட்டிங்கேலைக் கௌரவித்தனர். அதனால்தான் அவர் “கைவிளக்கு ஏந்திய காரிகை” என்றும் அழைக்கப்பட்டார்.
அவரை நினைவு கூறும் முகமாகவும், செவிலியர் பணியை கௌரவிக்கும் பொருட்டும், அவர் பிறந்த மே 12 ஆம் நாள் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
செவிலியரிடம் காணப்பட வேண்டிய பண்புகள்
உலகின் மகத்தான தொழிலாக காணப்படுகின்ற செவிலியர் பணியை ஆற்றுவது என்பது சாதாரண விடயம் அல்ல.
இப்பணியை ஆற்றுவதற்கு ஒருவர் மனதாலும் உடலாலும் வலிமை மிக்கவராகவும், பொறுமை, நேர முகாமைத்துவம், சகிப்புத்தன்மை, கருணை, நேர்மை, இன்சொல் பேசல், சாந்தம் போன்ற குணங்களை உடையவராகவும், எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் பணியாற்றும் தன்மை நிறைந்தவராகவும் காணப்படுதல் வேண்டும்.
செவிலியரின் கடமைகள்
செவிலியர்கள் நோயாளிகளை எப்போதும் இன்முகத்தோடு உபசரித்தல், அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்து கொடுத்தல், விடுதியில் உள்ள நோயாளிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர்களுக்கு மாத்திரைகளை வழங்குதல், மூத்த செவிலியர்களின் ஆலோசனை மற்றும் வழிமுறைகளை கேட்டு செயற்படல்,
மனம் சோர்ந்து காணப்படும் நோயாளிகளை ஆற்றுப்படுத்தல், காலம் நேரம் பாராமல் நோயாளிகளுக்கான சேவைகளை மனம் கோனாமல் செய்தல், நோயாளிகள் உள்ள இடங்களை சுத்தமாக வைத்திருப்பதில் பொறுப்பாக இருத்தல்,
அருவருப்பற்று நோயாளிகளை கவனித்தல் போன்ற பல்வேறு கடமைகளை செவிலியர்கள் ஆற்றுகின்றனர்.
சம்பளத்திற்கு பணியாற்றினாலும் இத்தகைய பணிகளை செய்வதற்கு உன்னதமான உள்ளம் படைத்தவர்களாலே மாத்திரமே இயலும். அந்தவகையில் செவிலியர்கள் எப்போதும் போற்றத்தக்கவர்களாவர்.
முடிவுரை
இந்த செவிலியர் தொண்டுப்பணி பற்றி கொரோனா தொற்று காலத்தில் நாம் கண்கூடாக அறிய முடிந்தது.
தமக்கு குடும்பம் இருப்பதை கூட கருத்தில் கொள்ளாது நோய்வாய்ப்பட்ட மக்களை அவற்றில் இருந்து காப்பாற்றுவதற்காக தமது உயிரை பணயம் வைத்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்தகைய பணியாற்றுபவர்களை நாம் மதித்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்.
You May Also Like: