தம்மனை என்றால் என்ன

thammanai in tamil

நம் தாய்மொழியாம் தமிழ் மொழி பல சிறப்பம்சங்களைக் கொண்டமைந்ததாகும். தமிழ் மொழியில் ஒரு சொல்லிற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அந்தவகையில் நாம் பயன்படுத்தும் இடம், மற்றும், பொருள் கொண்டு அர்த்தம் மாறுபடும். இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பாகும்.

“தம்மனை” என்ற சொல்லானது இக்காலத்தில் பேச்சு வழக்கிலோ அல்லது எழுத்து வழக்கிலோ காண்பது அரிது இதனை நூல்களில் பாடல் வரிகளிலேயே காண முடிகின்றது.

மனை எனும் சொல் “நம்மனை” “தம்மனை” “எம்மனை” “இம்மனை” “உம்மனை” “நின்மனை” “நுந்மனை” “நன்மனை” “வறுமனை” “வளமனை” “கடிமனை” “தாய்மனை” எனச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வந்துள்ளமையினைக் காண முடிகின்றது.

மனையோள் என்ற சொல்லும் சங்கப்பாடல்களில் வரும் சொல்லாகும். எனவே இதன் மூலம் மனை என்பது வாழிடத்தைக் குறிக்கின்ற முதன்மைச் சொல்லாக இருப்பதனைக் காணலாம்.

தம்மனை என்றால் என்ன

தொன்மைக் காலத்திலேயே மேம்பட்ட குடும்ப அமைப்பு உருவாகியிருந்தது. இதனைத் தம்மனை என்ற வார்த்தையின் மூலம் அறியலாம்.

தம்மனை என்பது தாய் எனவும் இல்லம் எனவும் பொருள்கொள்ளப்படும். திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் என்ற பொருளுமுண்டு.

மருதத்தினைப் பாடல் ஒன்றில் மகளிர் “தம்மனை”, “நுன்மனை” (அகம் 346 : 16-17) என மனைவியின் இல்லத்தையும் மற்றும், கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காணலாம்.

பெரியாழ்வார் திருமொழியில் வரும் பாடலும் தம்மனை என்பதற்கு தாய் என்ற பொருளை உணர்த்திச் செல்கின்றது. இதனைப் பின்வருமாறு அறியலாம்.

ஆழ்வார் நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!
நாவியுள் நற்கமல நான்முகனுக்குழூ ஒருகால்
தம்மனை யானவனே! தரணிதல முழுதும்
தாரகையின் னுலகும் தடவி அதன்புறமும்
விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ்விடையும்
விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!
அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

மேலும், கம்ப நாடன் காவியத்தில்,

கோநகர் முழுவதும், நினது கொற்றமும்,
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
ஆனவள் கற்பினால், வெந்து அல்லது, ‘ஓர்
வானரம் சுட்டது” என்று உணர்தல் மாட்சியோ? (கம்ப: இராவணன் மந்திரப் பட்லம் – 6145)

இதில் வரும் தம்மனையும் தாய் என்பதனையே குறிக்கின்றது.

You May Also Like:

இயல் என்றால் என்ன

சஞ்சிகை என்றால் என்ன