தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்

thalvu manapanmai in tamil

சமூகத்தில் பல்வேறுபட்ட விடயங்களில் ஒருவர் தம்மை பிறருடன் ஒப்பிட்டு குறைவாக மதிப்பிடுதல் தாழ்வு மனப்பான்மை எனப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலான இளம் வயது இளைஞர், யுவதிகள் இந்த பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்

தாழ்வு மனப்பான்மை நீங்க என்ன செய்ய வேண்டும்

எப்பொழுதும் நாம் நம்மில் உள்ள குறைகள் மற்றும் பலவீனங்களை பிறருடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. ஒரு போதும் மற்றவர்களுக்காக நம்முடைய திறமைகளை வெளிக்காட்டாமல் இருக்க கூடாது.

அழகு, வடிவு, உடற்தோற்றம், கட்டமைப்பு போன்றன குறித்து எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருத்தல் கூடாது. எப்பொழுதும் இலட்சியம், இலக்கை நோக்கியவாறு நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை நகர்த்த வேண்டும். உடலின் அழகை விட நாம் பிறர் மீது காட்டும் அன்பு, இரக்கம், பரிவு போன்ற நற்குணங்களே நம்மை அழகாகக் காட்டும்.

பிறர் நம்மைப் பார்த்து கேலி, கிண்டல், செய்யும் வேளைகளில் எல்லாம் நாம் அவற்றை உதறித் தள்ளி விட்டு இலக்கை நோக்கிய பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

வேறு எந்த மொழிகள் பேச முடியா விட்டாலும் அதனைப் பற்றி கவலை கொள்ளக் கூடாது. அவ்வாறு நம்மால் பேச முடியாத பட்சத்தில் நம்மைப் பார்த்து கேலி செய்பவர்களிடம் “இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியே சரியாக பேசத் தெரிவதில்லை” என்று திருப்பிக் கூற வேண்டும்.

நம்மால் எது முடியாது எது தெரியாது என்று பிறர் நம்மைக் கேலி செய்யும் வேளைகளில் அவற்றை விரைவில் கற்று முடித்து வெளிக்காட்ட வேண்டும்.

சோகம் ஏற்படும் சமயங்களில் நமது வாழ்க்கை இவ்வாறு மிகவும் கவலை மிகுந்ததாக காணப்படுகின்றது என எண்ணி வருத்தம் அடையக் கூடாது ஏனெனில் கவலைகள், பிரச்சனைகள் என எது வந்தாலும் நிச்சயம் அவற்றுக்கான தீர்வுகளும் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்வோம்.

நாம் எப்போதும் நம்மை விட பிறருக்கு தான் நம்மை விட எல்லாம் தெரியும் என்ற தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருத்தல் கூடாது. இல்லையெனில் நாம் முன்வைக்க வேண்டியவற்றை சரியாக வெளிப்படுத்த முடியாமல் போய்விடும்.

சந்தேகம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவற்றுக்கான வினாக்களை உடனேயே வினாவுதல் சிறந்ததாகும். கேள்வி கேட்பதற்கு புலமை மற்றும் அறிவு கட்டாயம் இருத்தல் வேண்டும் என்பது அவசியம் அற்றது.

நம்முடைய தூய்மையான பரிசுத்தமான அன்பினை ஒருவர் நிராகரித்து விட்டால் நாம் சோர்வடைந்து கவலைப்படக் கூடாது. ஏனெனில் உண்மையான நமது அன்பினை இழந்தமைக்காக நிச்சயமாக வருந்த வேண்டியவர்கள் நம்மை விட்டுச் சென்றவர்களே எனும் உண்மையை நாம் உணர வேண்டும்.

எப்போதும் காலை நித்திரை விட்டெழுந்தவுடன் பல நற்கருத்துக்கள், தன்னம்பிக்கைகள் நிறைந்த பெரியோர்களது தத்துவங்களை நமக்குள் நாமே கூறிக் கொண்டு அன்றைய நாளைத் தொடங்க வேண்டும். இவ்வாறு செய்து வர நம்மை அறியாமல் நம்முள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை இல்லாமல் ஒழிக்கலாம்.

பிறரிடம் எதையும் பேசாது மற்றவர்களுக்கு பயந்து தமது திறமைகளை வெளிக்காட்டாமல் இருக்காமல் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி தாழ்வு மனப்பான்மையை நீக்குவோம்.

You May Also Like:

அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்

படபடப்பு குறைய வழிகள்