இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையுமே,
- இந்தோ – ஆரிய மொழிகள்
- திபெத்திய – பர்மிய மொழிகள்
- ஆஸ்டிக் மொழிகள்
- திராவிட மொழிகள்
என நான்கு பெரும் பிரிவுகளில் அடக்குவர்.
இந்தோ ஆரிய மொழி இனக் குடும்பங்களுக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழி திராவிட மொழியாகும். சுமார் 22 கோடி மக்களுக்கும் அதிகமானோரால் பேசப்படுகின்றது. இது 450 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியா மற்றும், இந்தியாவின் மத்திய பகுதிகளிலும், அண்டைய நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடிக்கும் அதிகமான மக்களால் திராவிட மொழி பேசப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்த மொழிகளின் இலக்கியங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியவை ஆகும்.
திராவிட மொழிகள் பூகோள ரீதியாக பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்து தெளிவாகக் கணிக்க முடியாத போதிலும், திராவிட மொழிக் குடும்பங்களுக்கு இந்திய துணை கண்டம் பூர்வீகம் என்ற கருத்தொற்றுமை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகின்றது.
ஏறக்குறைய இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் வருகைக்கு முன்பே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
திராவிட மொழி வகைகள்
தென் திராவிட மொழிகள் – தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா கோத்தா கொறையா, இருளா
நடுத்திராவிடம் – தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா, கோலாமி, நாய்க்கி, மண்டா, பர்ஜி, கோயா, கதபா, கோண்டி
வட திராவிடம் – குரூக், மால்தோ, பிராகுய்
கால்டுவெல்
திராவிடம் என்ற சொல்லை உருவாக்கியவர் குமரிலபட்டர் ஆவார். ஆனால் திராவிடம் என்று சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் கால்டுவென் ஆவார்.
கால்டுவெல் அவர்கள் அயர்லாந்தில் கிளாடிஸ் என்ற ஆற்றங்கரையில் ஆனடிரிம் எனும் சிற்றூரில் மே 7 1814 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 16 வது வயதில் ஆங்கில இலக்கிய இலக்கணம் பயின்று தேர்ச்சி பெற்றார்.
1856 ஆம் ஆண்டு இவர் எழுதிய ஆங்கில நூலாகிய “Comparative grammar of the Dravidian of south” என்ற நூல் உலகளாவிய மொழியியல் ஆய்வுக்குத் துணை புரிந்தது.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என அழைக்கப்படும் இந் நூலின் தமிழ் வடிவ பெயர் “திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்” என்பதாகும்.
இந்த நூலின் மூலம் இந்திய மொழிகளில் திராவிட மொழிக் குடும்பம் தனித்து இயங்கும் ஒரு அமைப்பு என்ற கருத்தை ஆய்வுலகில் நிறுவினார்.
தமிழ்மொழி
திராவிட மொழிக் குடும்பத்திலேயே தமிழ் மொழி தான் மிகப் பழமையானதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதர மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் பரவலாக பேசப்படுகின்றன. 80 சதவீத திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழாகும்.
You May Also Like: