தீ விபத்து கட்டுரை

இந்த பிரபஞ்சத்தை ஆளக்கூடிய ஐம்பூதங்களுள் ஒன்றான தீயினால் ஏற்படக்கூடிய விபத்துகள் யாவும் தீ விபத்து என அழைக்கப்படுகின்றன. அதாவது அதாவது இயற்கை பேரிடர்களை போலவே இந்த தீ விபத்தும் சில சமயம் இயற்கையாகவும் இன்னும் சில சமயம் செயற்கையாகவும் நிகழ்வதனை காண முடியும்.

தீ விபத்து கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தீ விபத்துகளுக்கான காரணங்கள்
  • தீ விபத்துகளுக்கான முதல் உதவிகள்
  • தீ விபத்துகளுக்கான சிகிச்சை முறைகள்
  • தீயணைப்புத்துறை
  • முடிவுரை

முன்னுரை

தற்காலங்களில் அதிகரித்து வரும் விபத்துகளில் ஒன்றாகவே இந்த தீ விபத்து காணப்படுகின்றது.

அதாவது நாம் எதிர்பாராத விதங்களில் வீடுகளிலோ, அல்லது பணி புரியும் இடங்களிலோ இந்த தீ விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.

அந்த வகையில் தீ விபத்துக்கள் பற்றியும் அதற்கான காரணங்கள், முதலுதவிகள், சிகிச்சைகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

தீ விபத்துகளுக்கான காரணங்கள்

இன்று அதிகமான தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைவது மின் கருவிகளாகும்.

அதாவது மின் கருவிகளை முறையாக பயன்படுத்தாமை, தரக்குறைவான மின் கருவிகளை உபயோகித்தல், ஒரு இணைப்பில் பல மின் உபகரணங்களை பயன்படுத்துதல், மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் மின் உபகரணங்களை உபயோகித்தல் போன்ற காரணங்களால் இந்த மின் மூலமான தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அத்தோடு அணைக்காமல் எரியும் சிக்ரெட், தீக்குச்சிகள் மற்றும் இலகுவாக தீப்பற்றக்கூடிய இடங்களில் வைக்கப்படக்கூடிய தீபம், ஊதுபத்திகள் போன்றவற்றினாலும் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன.

தீ விபத்துகளுக்கான முதல் உதவிகள்

தீ விபத்துக்கள் பல்வேறு வகைப்படும். எனவே என்ன வகையான தீ விபத்து நடந்துள்ளது என்பதனை முதலில் கவனிக்க வேண்டும். அதனை எம்மால் அணைக்க முடியுமாயின் அணைக்க வேண்டும். இல்லையெனில் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும்.

எண்ணெய் அல்லது அமிலத்தினால் ஏற்பட்ட தீ விபத் தாயின் அவற்றினை மண்ணால் அணைக்க வேண்டும் இல்லையெனில் நீரை ஊற்றி அணைத்து விடலாம்.

தீ விபத்தின் போது ஒரு நபருக்கு தீ பற்றி விட்டால் அவரை கம்பளியினால் சுற்றி தரையில் உருட்டி அணைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடத்தினை உடனே குளிர்ச்சியாக வேண்டும். இதற்காக குளிர்ந்த சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும்.

மேலும் தீக்காயம் பெரிதாக இருக்குமே ஆனால் உடனடியாக அந்த நபரை மருத்துவமனைக்கு சேர்த்தல் அவசியமானதாகும்.

தீ விபத்துகளுக்கான சிகிச்சை முறைகள்

தீக்காயங்களால் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இன்று மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அந்த வகையில் தோல் ஒட்டுதல் முறை அதாவது தீக்காயங்களுக்கு உள்ளான இடங்களில் ஆரோக்கியமான தோலினை எடுத்து ஒட்டு முறையை குறிப்பதாகும், தீக்காயங்கள் முகத்தில் ஏற்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தல் மற்றும் எலும்பு மச்சை அல்லது தொப்புள் கொடிகளில் இருந்து பெறப்பட்ட செல்களின் மூலம், ஸ்டெம் செல்களை புகுத்தி காயங்களுக்கு உள்ளான பகுதிகளை மீள புத்துயிர் பெறச் செய்தல்.

போன்றவாறான சிகிச்சை முறைகள் தீ விபத்துக்களுக்கு உள்ளானவர்களுக்கு செய்யப்படுவதனைக் காண முடிகின்றது.

தீயணைப்புத்துறை

தீ விபத்துகளில் இருந்து மக்களை காத்துக் கொள்வதற்காகவும், குறைந்த அளவான பாதிப்புகளோடு தீ விபத்துக்களை முற்றுப்பெற செய்வதற்காகவும் தீயணைப்புத்துறை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதாவது ஒவ்வொரு நாட்டிலும் இந்த தீயணைப்பு துறைக்கு என தனியான தொலைபேசி இலக்கங்கள் காணப்படுகின்றன.

எனவே நாம் வாழும் பிரதேசத்திலோ சூழலிலோ ஏதாவது ஒரு தீ விபத்து ஏற்படுமே ஆனால் உடனடியாக நாம் அந்த தொலைபேசி மூலமாக தீயணைப்பு பிரிவினரை தொடர்பு கொள்வதன் மூலம் எமது பிரதேசத்தில் அல்லது சூழலில் ஏற்பட்ட தீ விபத்தின் பாரதூரங்களை குறைத்துக் கொள்ள முடியும்.

மேலும் இந்த தீயணைப்பு பிரிவினருக்கு பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, அவர்கள் அரசாங்க ஊழியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

உலகில் உயிர் சேதங்கள் ஏற்படுவதில் பல்வேறு விபத்துக்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதிலும் மிகவும் பாரதூரமான ஒரு விபத்தாகவே இந்த தீ விபத்துக்கள் காணப்படுகின்றன.

எனவே இந்த தீ விபத்துகளில் இருந்து நாம் பாதுகாப்பு பெற வேண்டுமாயின் தீ விபத்துக்கள் ஏற்படாத வகையில் எமது நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தீ விபத்துக்கள் பற்றியும், அவற்றுக்கான முதலுதவிகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பதானது, அவசர காலங்களில் எமக்கு எப்பொழுதும் உதவியாகவே அமையும்.

You May Also Like:

சமுதாயம் என்றால் என்ன

வாழ்வின் ஐந்து பருவங்கள்