வாகைத்திணையின் துறைகளுள் ஒன்றாக நூழிலாட்டு காணப்படுகின்றது. அதாவது மதுரை இளங்கண்ணி கோசிகனார் எனும் புலவர் பாடிய இரண்டு பாடல்கள் நூழிலாட்டு துறையினதாகக் காணப்படுகின்றது.
நூழிலாட்டு என்றால் என்ன
நூழிலாட்டு என்பது ஆட்டுதல் என்ற பொருளினை தருகின்றது. அதாவது வீரன் ஒருவன் தன் மார்பில் பாய்ந்த வேலை பறித்து எதிரிகளை விரட்டுதலை நூழிலாட்டாக கூற முடியும்.
புறப்பொருள் வெண்பாமாலையில் (நூழில், நூழிலாட்டு)
போர்க்களத்தில் வீரத்தினாலும் வெற்றி நோக்கத்தினாலும், செயல் ஊக்கத்தோடும் போர் செய்யும் வீரர்களது செயல்கள் போற்றக்கூடியனவாகவே காணப்படுகின்றது. இதனையே புறப்பொருள் வெண்பாமாலையானது சுட்டிக்காட்டுகின்றது.
படையின் வீரர்கள் அனைவரும் புறமுதுகு காட்டி ஓட ஒருவன் மட்டும் ஓடாது பகைவனை எதிர்த்து அவர்களை தொடர விடாமல் செய்தல், பகைவனது யானை மீது வேலெறிந்து உடல் வலிமையால் வெல்லுதல் போன்றவை வெற்றிக்கு காரணமாக அமையக்கூடியவை என்று வீரச்செயல்களை பாடக்கூடியவையாக நூழிலாட்டு துறையானது காணப்படுகின்றது.
நூழில்: நூழில் என்பது கொன்றதன் பின்னர் தன் வேலை திரித்து ஆடுதலை குறிக்கின்றது.
கழல் வேந்தர் படை விலங்கி
அழல்வேல் திரித்து
ஆட்டு அமர்ந்தன்று
பொருள்: வீரக்கழல் அணிந்த பகை மன்னர் படையைக் கொன்று சுழலும் வேலை திரித்து ஆடுதலை விரும்புதல் என்பதாகும்.
வெண்பாமாலையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடலமர்ந்தான் அமர்வெய்யோன்
நாட்பின் மலைத்தவர் மார்பம்
திறந்தவேல் கையில் திரித்து
நூழிலாட்டு: வீரன் தன் மார்பில் பாய்ந்த வேலையெடுத்து எதிரிகளை விரட்டுதலை குறிக்கின்றது.
இது வெண்பாமாலையில்
களம் கழுமிய படைஇரிய
உளம் கிழித்த வேல் பறித்து ஓச்சின்று
பொருள்: போரக்களத்து கூடிய படைகள் ஓட தன் மார்பில் பதிந்த வேலை பறித்து எறிந்தான். மேலும் கழல் அணிந்த வீரன் தன் மணம் நாறும் மார்பை பிளந்த வேலைப் பறித்து தன் கையில் எடுத்து கொண்டான். பகை மன்னர் என்னாவாரோ என்று வெண்பாமாலையினுடைய விளக்கமானது காணப்படுகின்றது. இது புறத்துறை சார்ந்த விடயங்களை பாடுகிறது.
தும்பைத்திணை
தும்பைத்திணை என்பது புறப்பொருள் வெண்பாமாலையில் ஒரு துறையாக காணப்படுகிறது.
அதாவது தும்பைத்திணையானது மண் காரணமாகவும், மதில் காரணமாகவும் நிகழ்ந்த போர்களை தொடர்ந்து வீரம் என்பதை மையமாக வைத்து மன்னரும் அவர் படையினரும் நிகழ்த்தும் போர் முறையாக தும்பைத்திணையை நோக்கமுடிகின்றது.
தும்பைத்திணையில் 23 துறைகள் காணப்படுகிறது. அவற்றுள் ஒன்றாகவே நூழிலாட்டு துறையானது திகழ்கின்றது.
தும்பைத்திணையின் துறைகள்
யானை, குதிரை ஆகியவற்றின் வீரத்தை குறிப்பிட்டு பேசுதல். (யானை மறம், குதிரை மறம்)
தேர்ப்படையின் சிறப்பினை கூறுதல் (தேர்மறம்)
பகைவரை கொன்று குவித்த தும்பை திணை வீரன் வேலினை சுழற்றி ஆடுதல் (நூழில்)
மார்பில் துளைத்த வேலைப் பறித்து ஒரு வீரன் எறிதல் (நூழிலாட்டு)
தேரின் முன்னும் பின்னும் பேய்கள் ஆடுதல் (பேய் குரவை)
களிற்றை வீழ்த்திய வீரன் தானும் யானையின் உடலின் கீழ் அழுத்தி இறந்து போதல்.
உடலெங்கும் அம்பு பாய ஒரு தும்பை திணை வீரன் நிலத்தை தீண்டாதபடி நிற்றல் (வெருவெரு நிலை)
நூழிலாட்டு துறையின் சிறப்புக்கள்
தும்பைத்திணையில் நூழிலாட்டு துறையானது வீரச் செயலினை சுட்டுவதாக காணப்படுகின்றது. அதாவது வீரனாவன் தன் மார்பில் துளைத்த வேலினை எடுத்து எதிரிகளை விரட்டுகின்றார் என்பதினூடாக நூழிலாட்டு துறையின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தி தன்னுடைய நாட்டை காக்கும் பெருமையினை சுட்டிக்காட்டுவதாகவும் நூழிலாட்டு துறையானது காணப்படுகிறது.
You May Also Like: