பணியிடை நீக்கம் என்றால் என்ன

pani idai neekkam

மக்கள் ஒரு நிறுவனதிதில் அல்லது அரச தினைக்களங்களில் பணியாளராக கடமையாற்றும்போது அவர் நிறுவனத்தினுடைய பொறுப்புக்கள், கட்டுப்பாடுகள், கலாச்சாரங்களுக்கு உட்பட்டு தனது பணியினை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

சில நேரங்களில் இவற்றிற்கு கட்டுப்படாது செயற்படத் துவங்குகின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்திலேயேதான் பணியிடை நீக்கமானது அவசியமாகின்றது.

பணியிடை நீக்கம் என்றால் என்ன

பணியிடை நீக்கம் என்பது யாதெனில் குறித்த ஒரு நிறுவனத்தில் அரச பணியகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அந்நிறுவனதிற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலே அல்லது மிகவும் மோசமான முன்மாதிரியுடன் இருப்பாரேயானால் அவர்களை அந்நிறுவனமானது தற்காலிகமாக விலக்கி வைக்கும் செயற்பாடே பணியிடை நீக்கம் எனப்படும்.

அதாவது அரசானது இவர் அரச நிறுவனங்களுக்கெதிராக குற்றமிழைத்துள்ளார் எனும் பட்சத்தில் அவரை விசாரித்து அதனை உறுதிசெய்த பின்னர் பணியிடை நீக்கத்தினை மேற்கொள்ளும் என குறிப்பிடலாம்.

பணியிடை நீக்கத்தில் காணப்படுவோர் எக்காரணத்தினையும் கொண்டு இந்த காலப்பகுதிகளில் பணிபுரிய முடியாது.

பணியிடை நீக்கத்தின் நோக்கம்

குறிப்பிட்ட ஒரு நபர் புரியும் குற்றத்தினை அவர் மீண்டும் செய்யக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே பணியிடை நீக்கமானது வழங்கப்படுன்றது.

இப்பணியிடை நீக்கமானது தற்காலிகமானதொன்றாகவே காணப்படுகின்றது. மீண்டும் இவ்வாறான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதற்காகவேதான் இப்பணியிடை நீக்கமானது வழங்கப்படுகின்றது.

பணியிடை நீக்கத்திற்கான காரணங்கள்

அரச பணியில் கடமையாற்றும் ஒருவர் அந்த அரச நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையிலோ அல்லது அங்கு காணப்படும் ஊழியர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையிலோ செயற்படுவாரேயானால் அவரை இந்த அரச நிறுவனமானது பணியிடை நீக்கத்தினை மேற்கொள்ளும்.

ஓர் பணியாளராக கடமை புரியும் ஒருவர் அரசின் நம்பகதன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என அதிகாரிகள் கருதும் பட்சத்தில் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கமுடியும் என குறிப்பிடலாம். சாட்சிகளின் மூலமாக நிரூபணம் செய்து பணி நீக்கத்தினை மேற்கொள்ள முடியும்.

பணியாளர் தவறான நடத்தை உடையவராக காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.

அதாவது ஏனைய பணியாளர்களுடன் சிறு சிறு பிரச்சினைகளை மேற்கொள்வது, முறைசார ரீதியில் பேசுவது போன்ற நடவடிக்கைகள் தீவிரமடைகின்ற பட்சத்தில் பணி நீக்கம் செய்யப்படுவார்.

ஓர் ஊழியரை அவரின் திறன் அடிப்படையிலும் பணி நீக்கம் செய்கின்றனர். அதாவது ஓர் பணியாளர்க்கு திடீர் நோய்கள் ஏற்படும் பட்சத்தில் உதாரணமாக புற்று நோயினை குறிப்பிடலாம்.

அதாவது சிறிது காலம் ஓய்வு தேவை என்பதனை கருத்திற்கொண்டும் பணி நீக்கம் செய்ய முடியும்.

மேலும் ஒரு அரச நிறுவனத்தினுடைய ரகசியமான தகவல்களை வெளியில் சென்று பிறருக்கு எத்தி வைக்கும் சந்தர்ப்பத்திலும் இவ்வாறானவர்களை பணியிலிருந்து நீக்கி கொள்ள முடிகிறது.

முறையற்ற பணியிடை நீக்கமும் அதன் விளைவுகளும்

இன்று அதிகளவில் பக்கசார்பான ரீதியல் பணியிடை நீக்கம் இடம்பெறுவதனை நோக்கக் கூடியதாக உள்ளது. அதாவது தனக்கு சார்பானவர்களை வைத்துக்கொண்டு ஏனையவர்களில் சிலரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்கின்றனர்.

சில பணியாளர்களின் வளர்ச்சி பிடிக்காத உயர் அதிகாரிகள் அப்பணியாளர்களுக்கு பணியிடை நீக்கத்தினை வழங்குகின்றனர். இவ்வாறான நியாயமற்ற பணியிடை நீக்கத்தின் மூலமாக பல ஊழியர்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.

இவ்வாறான நியாயமற்ற முறையில் பணியிடை நீக்கம் செய்வதால் அவர்களுக்கு சமூகத்திற்கு மத்தியிலும் ஒரு தவறான புரிதலினை உண்டுபண்னுவதோடு சமூகமானது இவர்களை குற்றவாளிகளை பார்க்கும் நோக்கிலேயே இவர்களையும் நோக்குகின்றனர்.

இதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மாத்திரமன்றி அவர்களுடைய குடும்பத்தினரும் பல அவமானங்களை சந்திக்கின்றனர்.

இவ்வாறான முறையற்ற பணியிடை நீக்கத்தினை தவிர்த்து ஒரு முறையான பணியிடை நீக்கத்தை ஏற்ப்படுத்துவதன் மூலம் அனைத்து அரச மற்றும் தனியார் பணியகங்களை ஒரு சிறந்த முறையில் மேம்படுத்த முடியும்.

You May Also Like:

வாண்மைத்துவம் என்றால் என்ன