புறநானூறு குறிப்பு வரைக

purananuru kurippu in tamil

சங்ககாலத்தில் பாடு பொருள்கள் அகம் புறம் என்று இரு வகையாகக் கொண்டே பாடல்கள் தோற்றம் பெற்றன. அவ்வாறு தோன்றிய நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும். இதில் புறத்திணை சார்ந்த நூலே புறநானூறாகும்.

புறநானூறு என்பதன் பொருள்

புறநானூறு என்ற சொல்லை புறம்+நான்கு+நூறு என்று பாகுபடுத்தலாம். ஆகவே, புறநானூறு என்பது புறத்திணை சார்ந்த பாடல்கள் நானூரைக் கொண்ட நூல் என்பதால் இந்நூல் புறநானூறு எனப்படுகின்றது.

இது புறப்பாட்டு, புறம் என்றும் அழைக்கப்படுகின்றது. புறம் என்று கூறுகையில் அக வாழ்வை தவிர்ந்த அனைத்தும் புறம் எனப்படும். இதில் கல்வி, வீரம், கொடை, நட்பு, அறம், ஆட்சி, புலவர்கள் பற்றிய விடயங்கள் அடங்கும். இவ்வாறான புற விடயங்கள் தொடர்பாக 400 பாடல்கள் அடங்கிய நூலே புறநானூறு.

புறநானூறு இலக்கிய விளக்கம்

புறநானூறு என்ற நூலில் 400 பாடல்கள் காணப்படுகின்றன. இவற்றில் புறத்திணை விடயங்கள் கூறப்பட்டுள்ளன. 267, 268 என்ற எண் கொண்ட பாடல்கள் கிடைக்கவில்லை. இந்த புறநானூறு நூலில் காணப்படும் பாடல்களை பல்வேறு காலப்பகுதியில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே புறநானூறாகும். ஆனால் இந்நூலினை தொகுத்தவர் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்நூலானது இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக காணப்படுகின்றது. இந்நூலில் காணப்படும் பாடல்கள் ஆசிரியப்பாவால் ஆனது.

இந்நூலின் கருவூலமாக வரலாறு, பண்பாடு என்பவையே காணப்படுகின்றன. ஒவ்வொரு பாடலிலும் திணை, துறை போன்ற இலக்கண குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்நூலில் காணப்படும் பாடல்களின் 266 பாடல்களுக்கு பழைய உரையே காணப்படுகின்றது. மான விஜயம் எனும் நாடகம் புறநானூற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது.

சங்க காலத்தில் குடியன், துடியன், பாணன், கடம்பன் பற்றி எடுத்துரைக்கும் நூல் புறநானூறாகும். இந்நூலில் இடம் பெறும் பாடல்களில் அதிக பாடலை ஒளவையாரே பாடினார். ஜி.யு.போப் என்பவர் இந் நூலினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். புறநானூற்றில் உழிஞ்சை என்ற திணை கூறப்படவில்லை. இந்நூலில் 11 திணைகள் 65 துறைகள் பற்றி பாடப்பட்டுள்ளது.

புறநானூறு நூலை கற்பதால் ஏற்படும் பயன்கள்

சங்ககாலத்தில் சிறப்பு வாய்ந்த புறநூலான புறநானூறு என்ற நூல் என்பதை அறியலாம்.

சங்ககால புலவர்கள் மன்னர்கள் மக்களின் உயர்ந்த பண்புகள் போன்றவற்றை அறியலாம்.

அக்கால மன்னர்களின் வீரச் சிறப்பு பற்றி இந்நூலின் மூலம் அறியலாம்.

புறநானூறு என்ற நூலின் மூலம் உயர்ந்த இலக்கிய தரத்தை உணரலாம்.

சங்ககால இலக்கியங்களின் சிறப்பை புறநானூற்றின் வழியே அறியலாம்.

புறநானூற்றின் வேறு பெயர்கள்

  • புறப்பாட்டு
  • புறம்பு நானூறு
  • திருக்குறளின் முன்னோடி
  • தமிழ்க்கரூவூலம்
  • தமிழர் வரலாற்று பெட்டகம்
  • தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்

எனவே சங்ககாலத்தில் மண்மங்கா சிறப்புடைய நூலே புறநானூறு என்பதை இதன் மூலம் அறியலாம்.

You May Also Like:

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்