மழை நீர் சேமிப்பு வாசகங்கள்

malai neer segaripu slogans in tamil

உலகில் வாழும் அனைத்து வகையான உயிர்களுக்கும் நீர் அவசியமானதொன்றாகும். ஏனெனில் நீர் இன்றி உலகே இல்லை என்ற திருவள்ளுவரின் கூற்றினுடாக நீரின் முக்கியத்துவமானது வெளிப்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில் எமக்கு விலைமதிப்பில்லாமல் இயற்கையாக கிடைக்கப்பெறும் நீரே மழை நீராகும். இத்தகைய மழை நீரை நாம் வீணாக்கமல் சேமித்து வைப்பதன் மூலமே எதிர்காலத்தில் ஏற்படும் வறட்சியில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

நீர் பற்றாக்குறையான காலப்பகுதிகளில் நீர் வளத்தை காப்பதற்கான ஒரு முறைமையே மழை நீர் சேகரிப்பாகும்.

இத்தகைய மழை நீரை சேகரிப்பதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதினூடாகவே மழை நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றி அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்.

மழை நீர் சேமிப்பு வாசகங்கள்

வானம் தரும் மழை நீரை சேமித்து நீர் வளம் காப்போம்.!

ஒவ்வொரு துளி மழையையும் காப்பாற்ற மனித சங்கிலி அமைப்போம்..!

சுத்தமான தண்ணீரை பெற மழை நீரை இன்றே சேமியுங்கள்..!

மழை நீர் பூமியின் ஆன்மா.. இன்றே நீர் வளத்தை காப்போம்..!

ஒவ்வொரு துளி நீரும் ஒரு பெருங்கடலை உருவாக்ககுகின்றது..! எனவே இன்றே மழை நீரை சேமியுங்கள்.!

நீர் பற்றாக்குறையிலிருந்து பூமியை காப்பாற்ற மழை நீரை சேமிப்பதே சிறந்த வழியாகும்.!

பூமியின் தாகத்தை தீர்க்க மழை நீரை சேமியுங்கள்..! பூமியை காப்பாற்றுவது ஓர் மழை நீர்த்துளியாகும்.!

மழை நீரை சேமிப்பது எமது வாழ்வை காக்கும்..!

ஒரு துளியை சேகரித்து எமது எதிர்காலத்தை பிரகாசமாக்குவோம்..!

உயிர் காக்கும் மழை நீரை சேமிப்போம்..!

மகிழ்சியின் ஆதாரமான மழை நீரை காப்போம்..!

மழை நீரை சேமிப்போம்..! தூய்மையான பூமியை உருவாக்குவோம்..!

வறட்சியை எதிர்த்து போரடுவோம்.. மழை நீருடன் வழித்தடத்தை தவிர்ப்போம்.!

மழை நீர் விலைமதிப்பற்றது, ஒன்றிணைந்து செயல்படுங்கள்..! எதிர்காலத்தை அற்புதமாக்குங்கள்.!

மழையை வடிகாலில் விடாதே.! சேமிக்க செய்து மீண்டும் உயிர் பெற வழி ஏற்படுத்து..!

மழையை காப்போம் பூவுலகை செம்மையாக்குவோம்..!

மழை நீரை சேமித்து விவசாயிகளை காப்போம்..!

மரம் வளர்ப்போம்.. மழை நீரை பெறுவோம்.!

விண்ணில் இருந்து வரும் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி.!

நளைய சந்ததியினரின் நல்வாழ்வுக்கு அத்தியவசியமானதொன்றே மழை நீர்.!

நீரே வாழ்வின் சாரம்சம்.. மழை நீரை சேமிப்போம்.!

மழை நீரை சேமிப்பதே.. தண்ணீரை சேமிப்பதற்கான புத்திசாலித்தனமான வழியாகும்.!

மழை நீரை தொட்டியிலோ.. குளத்திலோ சேமியுங்கள்..! அது உங்கள் உயிர் காக்கும்.!!

இயற்கை எமக்களித்த கொடையே மழை நீர் அதனை சேமியுங்கள்.!!

பூமியை நீரால் வளமாக்குங்கள்..! வரண்ட பாலைவனமாக்காதீர்கள்..!

ஒரு துளி நீரும் ஓர் உயிரை காக்கும்..!

மகிழ்ச்சியின் ஆதாரமே மழை நீர்..! மழை நீரை சேமிப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்..!

மழை நீரை சேமிப்போம் என்று இன்றே உறுதிமொழி எடுப்போம்.!

மேகம் தரும் மழை நீரே..! பூமிக்கு மேன்மை தரும் உயிர் நீர்.!

மழை நீரே நிலத்தின் உயிர் அதனை சேமிப்பதன் ஊடாகவே தலை நிமிர்ந்து வளரும் பயிர்..!

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் முன்னே மழை நீரை சேமியுங்கள்..!

உயிர் காக்கும் மழை நீரை எம் உயிர் போன்று நாம் காப்போம்.!!

இயற்கை எமக்களித்த வரமான மழை நீரை சேகரிப்பது எம் அனைவரினதும் கடமையாகும்.!

You May Also Like:

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்

கிராமத்தின் சிறப்புகள் கட்டுரை