முல்லைப்பாட்டு பெயர் காரணம்

mullaipattu peyar karanam

கண்டதே காதல் கொண்டதே கோலம் என மக்கள் வாழ்ந்த சங்க காலத்தில் அகம் புறம் என்ற இரு பெரும் ஒழுக்கங்கள் பேணப்பட்டு வந்தன. அவற்றில் அக ஒழுக்கத்தை முழுமையாக உள்ளடக்கிய பாடலே முல்லைப்பாட்டு ஆகும்.

சங்க கால முல்லை நிலம்

சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் தாம் வாழும் நிலங்களை அடிப்படையாகக் கொண்டு அந்நிலங்களை ஐந்தாக வகுத்தனர்.

அவ்வாறு அவர்கள் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என வகுத்ததோடு மட்டுமின்றி ஐந்நிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அக புற ஒழுக்கங்களையும் பாகுபடுத்திக் கொண்டனர்.

  • குறிஞ்சி புணர்தல் வெட்சி
  • முல்லை இருத்தல் வஞ்சி
  • மருதம் ஊடல் உழிஞ்சை
  • நெய்தல் இறங்கல் தும்பை
  • பாலை பிரிதல், உடன் போதல் வாகை

என நிலங்களுக்கு ஏற்ப அகப்புற ஒழுக்கங்களை வகுத்துக் கொண்டனர். அவ்வகையில் காடும் காடும் சார்ந்த இடமான முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமான இருத்தல் என்ற அக ஒழுக்கப் பாடலே முல்லைப்பாட்டு ஆகும்.

முல்லைப்பாட்டு பெயர் காரணம்

முல்லைப்பாட்டு என்பது முல்லை நில அக ஒழுக்கமான இருத்தல் என்ற ஒழுக்கத்தினைச் சித்தரிக்கும் பாடலே முல்லை பாடலாகும். முல்லை பாடல்கள் முல்லை நிலத்தை பற்றி சித்தரிப்பதன் காரணமாக முல்லை பாடல் என அழைக்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி முல்லை நிலத் தலைவன் கார்காலம் வந்தவுடன் பொருள் தேடிச் சென்று விடுவான். தலைவன் வரும் வரை தலைவி ஒழுக்கத்திலிருந்து காத்திருப்பாள் அதனையே இருத்தல் ஒழுக்கம் என சித்தரித்தனர்.

மேலும் கார்காலம் வந்ததும் தலைவன் மீண்டு வராமையினால் தோழி தலைவன் வரவில்லை என புலம்பும் வேளையில் தலைவன் வெற்றியுடன் மீண்டும் சேர்ந்திடுவான். இவ்வாறு மீண்டும் இணைதல் என்ற பொருளைக் கொண்டு அமைவதனால் இவ்வாறான பாடல்கள் சங்ககாலத்தில் முல்லைப் பாடல்கள் என அழைக்கப்பட்டன.

முல்லைப் பாடல் பற்றிய விளக்கம்

சங்ககால முல்லை பாடல் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் பாடப்பட்டவை. எட்டுத்தொகை பத்துப்பாட்டில் சிறிய நூல் என போற்றப்படுவதே முல்லைப்பாட்டு நூலாகும்.

இதில் 103 பாடல்கள் ஆசிரியப்பாவால் பாடப்பட்டது. முல்லை நிலத்தை அடிப்படையாகக் கொண்டே இப்பாடல்கள் பாடப்பட்டுள்ளன. முல்லைப்பாட்டு என்ற நூலின் பாடல் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினம் பொன் வணிகனார் மகனார் நம்பூதனார் ஆவார்.

முல்லைப் பாடல்களில் போற்றப்படும் மன்னன் நெடுஞ்செழியன் ஆவான். ஆனாலும் தலைவனின் பெயர் இப்பாடல்களில் குறிப்பிடப்படவில்லை. மேலும் முல்லைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மறைமலை அடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை இயற்றினார்.

இந்நூலானது சிறிய அடிகளைக் கொண்டு காணப்பட்டாலும் இதில் காணப்படும் தரவுகள், காட்சி சித்தரிப்பு, பண்பாட்டு சித்தரிப்பு, உவமைகள் போன்ற நயமிக்கவையாக உள்ளன. மேலும் இப்பாடல்களில் பெரும் பொழுதாக கார்காலமும் சிறும் பொழுதாக மழைக்காலமும் பேசப்படுகின்றது.

முல்லைப்பாட்டின் வேறு பெயர்கள்

  • நெஞ்சாற்றுப்படை
  • முல்லை

முல்லைப்பாட்டின் சிறப்பம்சங்கள்

  • தலைவியின் அவல நிலையைக் கூறும் பாடல்களாக காணப்படுகின்றன.
  • தமிழர்களின் பாசறை அமைப்பு அதில் மகளிர் கச்சனிந்தும் வால் ஏந்தியும் நின்று பணியாற்றல். கவசம் பூண்ட யவனமுனிவர்கள் காவல்நிற்றல் போன்ற விடயங்கள் பேசப்படுகின்றன.
  • பாவை விளக்கு எரித்தல் பற்றியும் முல்லைப் பாடல்கள் கூறுகின்றன.
  • குறுகிய அடியால் சிறப்பான விடயங்கள் கூறுவதாக முல்லைப் பாடல்கள் காணப்படுகின்றன.
  • இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்டதே முல்லைப்பாட்டு. இதன் மூலம் முல்லைப்பாட்டை என ஏன் இந்நூலுக்குப் பெயர் வந்தது என்பதை அறியலாம்.

You May Also Like:

வேற்றுமையில் ஒற்றுமை பேச்சு போட்டி

தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி