ஒவ்வொரு சமூகத்தினரும் மாண்புகளை எடுத்துக்காட்டுவது அச்சமூகத்தின் மொழியாகும்.
இந்த பகுதியில் தமிழர் சமூகத்தின் நாகரீகத் தொன்மையையும், பாரம்பரிய அம்சங்களையும் வெளிக்காட்டுபனவாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது.
தமிழுக்கு என்று தனியான சிறப்பு உள்ளது. அதாவது மொழிகளில் பழமையான மொழியாக போற்றப்படுவது தமிழ் மொழியாகும்.
வளரும் செல்வம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- தமிழ் மொழியின் தற்காலப் போக்கு
- கலைச் சொற்களின் பயன்பாடு
- பிற மொழிகளில் தமிழ் மொழியின் செல்வாக்கு
- தமிழ் மொழியின் நிலைத்திருப்புக்கு அவசியமான அம்சங்கள்
- முடிவுரை
முன்னுரை
பொதுவாகவே நாம் உரையாடும் தமிழ் மொழியானது பிறமொழிச் சொற்களை அப்படியே முற்றுமுழுதாக ஏற்பதில்லை. இதனாலேயே கலைச்சொல்லாக்கப் பணி இன்று வலுப் பெற்றுள்ளது.
இது மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பதற்கும் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளது. இவ்வாறாக இன்று வளர்ச்சி பெற்று வரும் வளரும் செல்வமாகிய தமிழ் மொழி பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தமிழ் மொழியின் தற்காலப் போக்கு
ஆரம்ப காலங்களில் தமிழ் மொழி தூய்மையானதாகவும் பிற மொழிகளின் கலப்பு எதுவும் இல்லாத நிலையிலுமே காணப்பட்டது.
ஆனால் அந்நியர்களின் படையெடுப்பாலும், காலணித்துவ ஆட்சியின் விளைவாகவும் தமிழ் மொழி திரிபுபட்டு பல்வேறு மொழிச் சொற்களையும் உள்வாங்கியதோடு, பிற மொழிகளிலும் தமிழ் மொழியின் செல்வாக்கு மிகுந்துள்ளமையை காணலாம்.
எனவே தற்காலங்களில் ஒரு மொழியில் இன்னொரு மொழியின் செல்வாக்கு என்பது மிகவும் சாதாரண முறையில் நிகழ்கிறது.
கலைச் சொற்களின் பயன்பாடு
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இன்று தமிழ் மொழியில் கலைச் சொற்களின் பயன்பாடு மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் Software-மென்பொருள், Browser-உலவி, Crop-செதுக்கி, Cursor-ஏவி அல்லது சுட்டி, Cyberspace-இணையவெளி, Server-வையக விரிவு வலைவழங்கி, Folder-உறை, Laptop- மடிக்கணினி போன்ற சொற்களின் பாவனையை நாம் இங்கு எடுத்துக்காட்டலாம்.
எனவே இன்று தமிழ் மொழியில் கலைச் சொற்களின் பயன்பாடு அதிகமாகியுள்ளது என்பதனை காண முடிகிறது.
பிற மொழிகளில் தமிழ் மொழியின் செல்வாக்கு
தமிழ் மொழியிலிருந்து பிற மொழிக்கு பல்வேறு சொற்கள் கடத்தப்பட்டுள்ளன. அவை முழுமையாகவே தமிழ் சொற்கள் போல் சிலவும் சில சற்று வித்தியாசமாகவும் உபயோகிக்கப்பட்டு வருவதனை காணலாம்.
அந்த வகையில் தமிழில் “நாவாய்” என்ற சொல் ஆங்கிலத்தில் “நேவி” என மாறியுள்ளமை, எறிதிரை- எறுதிரான், கலன்-கலயுகோய், நீர்-நீரியோஸ், நாவாய்-நாயு, தோணி-தோணிஸ். என தமிழ் சொற்கள் கிரேக்கத்துக்கு மாற்றம் கண்டுள்ளமையை காணலாம்.
இவ்வாறான உதாரணங்களின் மூலம் தமிழ் மொழி பிற மொழிகளில் செல்வாக்கு செலுத்தியுள்ளமையை காண முடிகின்றது.
தமிழ் மொழியின் நிலைத்திருப்புக்கு அவசியமான அம்சங்கள்
தமிழ் மொழியின் தொண்மையும், சிறப்பையும் பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். தமிழ்மொழியின் நிலைத்திருப்பு என்பது முதன்மையானதாகும். இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் ஆங்கில மொழி மேலோங்கி காணப்படுகின்றது.
ஆங்கில மொழிகளில் வெளிவரக்கூடிய பாட நூல்கள் மற்றும் ஏனைய நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் தமிழ் மொழியில் அனைத்து துறை சார்ந்த கல்விகளையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துவது இந்த தமிழ் மொழியின் நிலைத்திருப்பை உறுதி செய்யும்.
முடிவுரை
காலத்தால் முதன்மையான தமிழ் மொழியானது ஏனைய அனைத்து மொழிகளை விடவும் தொண்மைச் சிறப்புடையது என்பதோடு, தற்காலங்களில் எந்த மொழியினை விடவும் சளைத்தது அல்ல என்பதையும் நிரூபிப்பது எம்அனைவரதும் கடமையாகும். ஆகவே தமிழ்மொழி வளரும் செல்வம் என்பதனால், மொழி வளர்த்து வளம் பெறுவோம்.
You May Also Like: