மக்களிடம் காணப்படும் சிறந்த சக்தி வாக்களிப்பதே ஆகும் அதாவது நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தியே வாக்காளர்களாவர். இத்தகைய வாக்களிப்பினை ஒவ்வொருவரும் சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த ஜனநாயக தேசத்தை உருவாக்கி கொள்ள முடியும்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஜனநாயகத்தில் வாக்களிப்பின் பங்கு
- வாக்களிப்பின் முக்கியத்துவம்
- வாக்களிப்பது எமது உரிமை
- இந்தியாவும் வாக்காளர்களும்
- முடிவுரை
முன்னுரை
ஓர் தனி மனிதனது வாக்கானது நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி படைத்ததாகும். அத்தகைய வாக்கினை வீணாக்கமல் உரிய முறையில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும். அந்த வகையில் வாக்களிப்போம் எமது வாழ்வை காப்போம்.
ஜனநாயகத்தில் வாக்களிப்பின் பங்கு
ஓர் நாடானது ஜனநாயகமான நாடாக திகழ வேண்டுமாயின் அங்கு நிச்சயமாக தேர்தல் காணப்பட வேண்டும். மேலும் சுதந்திரமான வாக்களிப்பானது இடம்பெற வேண்டும்.
நாட்டினுடைய ஜனநாயகம் பேணப்பட வேண்டுமாயின் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிப்பதை பெருமையாக நினைத்து சிறந்த ஆட்சியை ஏற்படுத்த முன் வர வேண்டும்.
தனது நாட்டில் பற்றுடைய மக்கள் சிறந்த ஆட்சிக்கு வழிவகுப்பர். இதன் காரணமாகவே ஜனநாயகம் பேணப்படுகிறது.
வாக்களிப்பின் முக்கியத்துவம்
வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமை என்றடிப்படையில் சிறந்த நபருக்கு வாக்களிப்பதன் மூலமே சிறந்த ஆட்சியை ஏற்படுத்த முடியும். அதாவது சமூகத்தில் சிறந்த தலைவனை தேர்ந்தெடுக்க வாக்களித்தல் முக்கியத்துவம் வாய்ந்ததொரு முறையாகும்.
வாக்களிப்பதன் ஊடாக மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படுவதோடு சமூகமும் உயர்வடைய வழிவகுக்கிறது. அதேபோன்று புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கான சிறந்த வழியாகவும் வாக்களிப்பே திகழ்கின்றது.
வாக்களிப்பது எமது உரிமை
தேர்தல் காலங்களின் போது வாக்களித்தலானது எமது பிரதானதொரு உரிமையாகும். இத்தகைய உரிமையை லஞ்சத்திற்காக விற்காது தனது மனசாட்சி படி சிறந்த எதிர்காலத்தை நோக்காக கொண்டு வாக்களித்தல் வேண்டும். இதன் மூலமாகவே சிறந்ததொரு ஆட்சியினை எம்மால் ஏற்படுத்த முடியும்.
ஒவ்வொரு குடிமகனும் இதனை கருத்திற் கொண்டே செயற்பட வேண்டும். மேலும் தவறான ஒருவருக்கு எம் உரிமையை வழங்குவோமேயாயின் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதனை உணர்ந்து எமது உரிமை எமது வாக்கே என்றடிப்படையில் வாக்களித்தல் வேண்டும்.
எமது உரிமையை ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக விற்காது சிந்தித்து செயற்படுதல் அவசியமாகும்.
இந்தியாவும் வாக்காளர்களும்
இந்தியாவானது ஓர் பன்முகத்தன்மை கொண்டதொரு நாடாகும். இங்கு பல இன மக்கள் மக்கள் வாழ்கின்றனர். இத்தகைய இந்திய தேச மக்கள் சிறந்த முறையில் வாக்களிப்பானது தேசத்தின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டதாகும்.
இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த ஒருவர் வாக்களிக்க தகுதி பெற்ற நபராவார் மேலும் வேட்பாளர் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ளும் உரிமை வாக்காளர் ஒவ்வொருவருக்கும் காணப்படுகிறது.
அதேபோன்று சுதந்திரமாகவும் வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும். மேலும் வேட்பாளரின் சொத்து, குற்ற வழக்கு, அவரது வாழ்க்கை பின்னணி போன்றவற்றை வாக்காளரினால் அறிந்து கொள்ளவும் முடியும். இத்தகைய சிறந்ததொரு வாக்களிப்பு முறைமையே இந்திய தேசத்தின் சிறந்த ஆட்சிக்கு வழியமைக்கிறது.
முடிவுரை
எமது நாட்டின் விதியை மாற்றும் சக்தியே வாக்களிப்பு இத்தகைய வாக்களிப்பின் போது நேர்மையை பேணுவது சிறந்த ஆட்சிக்கு வழிவகுக்கும். ஓர் நாட்டின் ஜனநாயகத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு பிரதான சக்தியாக வாக்களிப்பே காணப்படுகின்றது. எங்கள் வாக்கு எங்கள் உரிமை..!
You May Also Like: