இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி | ஜாவா அகழி |
இந்த உலகமானது பஞ்ச பூதங்களால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டு இயங்கி வருவதாக நம்பப்படுகின்றது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியனவே ஐம்பூதங்கள் ஆகும். இவற்றுள் இந்த பூமியின் பெரும்பாலான பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது என்பது விசேட அம்சம் ஆகும்.
கடல், ஆறு, நீர்வீழ்ச்சி, சமுத்திரம், ஏரி, குளம், கிணறு, குட்டை என பல இடங்களில் நீர் இயற்கையாகவும் செயற்கையாகவும் தோற்றுவிக்கப்படுகின்றது. இன்றைய இந்த பதிவில் இந்தியப் பெருங்கடல் பற்றியும் அதன் ஆழமான பகுதி பற்றியும் விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.
இந்தியப் பெருங்கடல்
உலகில் உள்ள மிகப்பெரிய சமுத்திரங்கள் வரிசையில் இந்தியப் பெருங்கடல் மூன்றாவது ஆகும். இந்திய பெருங்கடலே இந்து மகா சமுத்திரம் என்னும் இன்னுமொரு பெயராலும் அழைக்கப்படுகின்றது. உலகத்தில் உள்ள சமுத்திரங்களின் பரப்பளவில் 20% இந்து சமுத்திரம் ஆகும்.
இந்து சமுத்திரத்தைச் சூழ ஆசியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிக்கா போன்றன காணப்படுகின்றன. இந்து சமுத்திரத்தில் காணப்படும் தீவுகளுள் இந்து சமுத்திரத்தின் முத்து என்ற சிறப்பிற்குரிய பெயரை இலங்கைத்தீவு பெற்றுள்ளது.
இந்தியப் பெருங்கடல் ஆனது அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் போன்றவற்றிலிருந்து பிரிக்கின்றன.
அதுமட்டுமல்லாது மடகஸ்கார், கொமொறோஸ், சிசிலீஸ், மாலதீவு, மோரிஷீயஸ் போன்ற தீவுகள் காணப்படுகின்றன. அத்துடன் இந்தியப் பெருங்கடலில் எல்லையில் இந்தோனேசியா எனும் நாடு அமைந்துள்ளது.
குறிப்பாக ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய இரு கண்டங்களை இணைக்கும் கடல் வழிப் பாதையாகவும் தொழிற்படுகின்றது.
இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி
இந்து மகா சமுத்திரத்தில் மிகவும் ஆழமான பகுதி ஜாவா அகழி ஆகும். இந்த அகழி சமுத்திரத்தில் 50° தெற்கில் உள்ள அட்ச ரேகைக்கு வடக்கே அமைந்துள்ளது. ஜாவா அகழியின் ஆழம் 7450m ஆகும்.
இங்கு பெரும்பாலான பகுதி பீலாஜிக் எனப்படும் படிமங்களால் சூழப் படர்ந்து காணப்படுகின்றது. சிறிதளவில் மட்படிமங்கள் சூழ்ந்துள்ளன. மேலும் இங்கு பனிப்படலங்களும் காணப்படுகின்றன.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்று அதிகளவில் இந்து சமுத்திரத்தில் தாக்கம் செலுத்துகின்றது. சாம்பெசி, சட் அல் அரபு, சிந்து நதி, கங்கை நதி, பிரம்மபுத்திரா நதி, ஐராவதி ஆறு ஆகியன இந்து சமுத்திரத்தில் கலக்கின்றன.
பெட்ரோலிய எண்ணெய் வள வர்த்தகத்திலும் பாதை வழியாகவும் இந்து சமுத்திரம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்தியப் பெருங்கடலில் அந்தமான் கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, ஆஸ்திரேலியப் பெரும் விரிகுடா, ஏதென் வளைகுடா, ஓமன் வளைகுடா, லட்சத்தீவு கடல், மொசாம்பிக்கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மலாக்கா நீரிணை போன்றன காணப்படுகின்றன.
இந்து சமுத்திரத்தின் கரைப்பகுதி 66,526Km ஆகும். இந்தியப் பெருங்கடலில் இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் துறைமுகம் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் கடலி வாழ் உயிரினங்கள் பல உயிர் வாழ சிறந்ததொரு வளமான கடலாக காணப்படுகின்றது. இவ்வாறு உயிரினங்களுக்கு பாதுகாப்பு இடமாக காணப்படும் இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும்.
You May Also Like: